முகப்பு /செய்தி /ஆன்மிகம் / பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..

பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..

சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவில்

Sabarimalai Ayyappan Temple : பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Kerala, India

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜை முடிந்த பிறகு மாதந்தோறும் பூஜைகளும், திருவிழாக்களும் நடைபெறுவது வாடிக்கை. அதிலும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் படி பூஜை, மார்கழி மாதத்தில் நடைபெறும் மண்டல பூஜை, தை மாதத்தில் நடைபெறும் மகர விளக்கு மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி, பங்குனி மாதத்தில் நடைபெறும் ஐயப்பன் ஆராட்டு விழா, சித்திரை மாதத்தில் நடக்கும் விஷு கனி விழா ஆகியவை மிகவும் புகழ்பெற்ற திருவிழாக்களாகும்.

பின்னர் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நேற்று  மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று (27ம் தேதி) காலை 9.45 மணிக்கு திருக்கொடியை ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். இதனைத்தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 5ம் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.

இதையும் படிங்க : புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தும் புனித நீர்.. அதிசய கோயில் குறித்து பக்தர்கள் கூறும் கதை

top videos

    மேலும், ஐயப்பன் ஆராட்டு திருநாளில் சபரிமலையில் இருந்து தர்மசாஸ்தா ஐயப்பனின் உற்சவர் சிலை பம்பை ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு, ஆராட்டு உற்சவம் நடைபெறும். பின்னர் ஐயப்பனை அலங்கரித்து பம்பை ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவில் முன்பாக 3 மணி நேரம் வரையிலும் வைத்திருப்பார்கள். அங்கு பக்தர்களை தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.

    First published:

    Tags: India, Sabarimalai Ayyappan temple