ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (06 ஜனவரி 2023) கோவிலில் அன்னதானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (06 ஜனவரி 2023) கோவிலில் அன்னதானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology | ஜனவரி 06-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்காலத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருப்பதற்கான சூழல் ஏற்படும் நாள் இன்று. மாணவர்கள் மற்றும் பெண்கள் அதிக மதிப்பெண்களை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. பண உதவி பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். டிசைனிங் தொழில் இருப்பவர்கள், கட்டிடம் கட்டுபவர்கள, அரசியல்வாதிகள் புதிய திட்டங்களை ஏற்கும் முன்னதாக ஒருமுறைக்கு இருமுறையாவது யோசிக்க வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சனை மற்றும் அவதூறு சொல்லிற்கு ஆளாவீர்கள்.

அதிர்ஷடமான நிறம்- மஞ்சள் மற்றும் பச்சை

அதிர்ஷ்டமான நாள்- ஞாயிறு

அதிர்ஷ்ட எண் – 3

நன்கொடைகள்- கோவிலில் அன்னதானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு நம்பிக்கை நிறைந்த நாளாக அமையும். பணியில் இருப்பவர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும். ஆஃப்லைனில் இருந்து வேலை செய்வது உங்களுக்கு நேர்மறையான ஆற்றலை அளிக்கும். காமல் உறவுகளில் நம்பிக்கை ஏற்படும். தொழில் சம்பந்தமான காரியங்கள் விரைவில் நிறைவேறும். அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், சில்லறை விற்பனையாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நகை வியாபாரிகள் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்டமான நிறம்- ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள்- திங்கள்

அதிர்ஷ்ட எண் -2 மற்றும் 6

நன்கொடைகள்- கோவிலில் அல்லது தேவைப்படுபவர்களுக்குத் தயிர் தானம் செய்யுங்கள்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் நகைச்சுவை உணர்வு, மென்மையான பேச்சு, கல்வி அறிவு செயல்திறனை மேம்படுத்த உதவியாக இருக்கும். ஆளுமை மிகவும் கவர்ச்சிக்கரமானதாகவும், வசீகரமாகவும் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தும் போதெல்லாம் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். யோகா பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையாளர்கள்,இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி அறிவிப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் வியாபாரிகள் மற்றும் எழுத்தாளர்கள் இன்று தொழிலில் சிறப்பான லாபம் பெறுவார்கள்.

அதிர்ஷ்டமான நிறம் -ஆரஞ்சு மற்றும் பச்சை

அதிர்ஷ்டமான நாள்- வியாழன்

அதிர்ஷ்ட எண்- 3 மற்றும் 1

நன்கொடைகள் - கோவிலில் மஞ்சள் அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ராகு பூஜை அல்லது ராகு நாமத்தை 108 முறை, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்யவும். இந்த மந்திரம் வாழ்வில் உள்ள அனைத்து சவால்களையும் குறைத்து முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அரசு அல்லது பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் போது உங்கள் எண்ணை நீங்கள் எப்போதும் அனுபவிப்பீர்கள். தரகர்கள், கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற வணிகங்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். சிறந்த பண மேலாண்மை உங்கள் வாழ்க்கையை குறைந்த இழப்புடன் அதிக ஆதாயங்களுடன் நிரப்புகிறது.

அதிர்ஷ்டமான நிறம்- பச்சை

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண்- 9

நன்கொடைகள்- கோவிலில் இரண்டு தேங்காய் தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும். தொழில் வளர்ச்சி மேம்படும். எந்தவொரு குழப்பமான சூழல் இல்லாமல் முடிவைத் தெளிவாக எடுப்பீர்கள். உங்களின் சொந்த விருப்பத்துடன் உங்கள் சொந்த விருப்பத்துடன் சொத்து முதலீட்டில் முக்கிய முடிவுகளை எடுங்கள். பண வரவிற்காக விளையாட்டு வீரர்கள் மற்றும் பயணிகளும் காத்திருக்க வேண்டும். சோம்பலைத் தவிர்த்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான நிறம் -பச்சை மற்றும் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் -5

நன்கொடைகள்- தயவு செய்து துளசி செடியை கோயிலிலோ அல்லது நண்பருக்கோ தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீட்டிலிருந்து ஆன்லைன் வேலைக்கானப் பரிந்துரை முன்வைக்கப்படும். இன்றைக்கு நிகழும் அபரிமிதமான அதிர்ஷ்டத்தால் உங்களுடைய இலக்குகளை விரைவில் அடைவீர்கள். குழுத் தலைவராக நீங்கள் மற்றவர்களின் மீது காட்டும் அக்கறை உங்களை மேன்மையடைச் செய்யும். . விளையாட்டு வீரர் பாதுகாப்பு அதிகாரிகள், மென்பொருள் பொறியாளர்கள், இல்லத்தரசிகள், ஆசிரியர்கள் நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், ஜோக்கிகள் மற்றும் மருத்துவர்கள் தங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் என்பதால் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முயலுங்கள்.. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் செயல்திறனுடன் பெருமைப்படுவார்கள்.

அதிர்ஷ்டமான நிறம்- வெள்ளை

அதிர்ஷ்டமான நாள்- வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்- 6

நன்கொடைகள்- ஆசிரமங்களுக்கு எஃகு பாத்திரத்தை நன்கொடையாக கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுடைய பேச்சுகள் மற்றவர்களைப் புண்படுத்தும் என்பதால் நிதானமாக பேசவும். எந்தவொரு வேலை செய்யும் மற்றவர்கள் ஆலோசனைத் தந்தால் ஏற்றுக்கொள்ளவும். சிறிய குழுவுடன் பணிபுரிய விரும்பினாலும், நீங்கள் சக நண்பர்களின் தேவையை அறிந்து செயல்படுவீர்கள். உங்களின் தனித்துவமான செயல்திறனால் முதலாளியின் மீது பெரும் அபிப்ராயத்தை ஏற்படுத்த முடியும். தம்பதிகளிடையே நம்பிக்கை மற்றும் மரியாதை உயரும். தாமதம் இன்றி ஆவணங்களில் கையெழுத்திடலாம் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. ஆன்மீக பணி, விவசாயம் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு நன்மை கிடைக்கும் நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான நிறம் -பழுப்பு

அதிர்ஷ்டமான நாள் -திங்கள்

அதிர்ஷ்ட எண்- 7

நன்கொடைகள்- ஆசிரமங்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுதுப்பொருட்களை நன்கொடையாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் வெற்றிக்கரமாகவும், லாபகரமாகவும் இருக்கும். ஒப்பந்தங்கள் அல்லது நேர்காணல்களை எவ்வித தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். குடும்ப நிகழ்வுகள் அல்லது நண்பர்கள் விருந்தில் கலந்துக் கொள்ள நேரம் செலவிடும் வாய்ப்புகள் உள்ளது. காதல் உறவுகளில் நம்பிக்கையை அதிகரிக்கும். தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்படும். அசைவ மற்றும் மதுபானங்களைத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதாக அமையும்.

அதிர்ஷ்டான நிறம்-கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள்- வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்- 6

நன்கொடைகள்- கால்நடைகளுக்கு குடிநீர் தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு பிரச்சனைகள் முடிவுக்கு வருவதால் உங்களுடைய வாழ்க்கையில் நிம்மதியாகவும், வளமாகவும் இருக்கும் சூழல் ஏற்படும். ஆசிரியர், சட்டம், ஆலோசனை மற்றும் நிதித்துறையில் இருப்பவர்கள் புதிய உயரங்களை எட்டும் நிலை ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை நிறைந்த நாளாக அமையும். வணிகம் அல்லது தொழிலில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்றைய நாளை சிறப்பாக தொடங்க வேண்டும் என்றால் சிவப்பு நிற ஆடையை அணியவும். உங்களின் திருமணத் திட்டத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்துக் கொள்ள இது நல்ல நாள். செலவுகளைக் கட்டுப்படுத்தவம் மற்றும் சைவ சிட்ரஸ் உணவை உணவில் பின்பற்றவும்.

அதிர்ஷ்டமான நிறம்- சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண்- 9 மற்றும் 6

நன்கொடைகள்- ஏழைகளுக்கு தர்பூசணி தானம் செய்யுங்கள்

ஜனவரி 6 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஏ ஆர் ரஹ்மான், கபில் தேவ், பிந்தியா கோஸ்வாமி, தில்ஜித் தோசன்ஜ், அபினவ் முகுந்த், ஜெய் ராம் தாக்கூர்

First published:

Tags: Numerology, Tamil News