முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மார்ச் 24, 2023) கோவிலில் தயிர் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மார்ச் 24, 2023) கோவிலில் தயிர் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | மார்ச் 24ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    புதிய வாய்ப்புகளுக்கு ஏற்ப உங்கள் எண்ணங்களை வடிவமைக்க இன்று தயாராக இருங்கள். வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் ஆர்ட்டிஸ்ட்கள் இன்று வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஆப்ஷனை தேர்வு செய்வது சிறந்த பலன்களை அளிக்கும். டிசைனர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று கிடைக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். இன்று தோல் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

    அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

    அதிர்ஷ்ட எண்: 3

    தானம்: கோவிலில் சூரியகாந்தி விதைகளை தானம் செய்யுங்கள்

    #எண் 2: ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்று சொத்து மற்றும் ஆடம்பரம் நிறைந்த சிறப்பான நாளாக உங்களுக்கு அமைய கூடும். இல்லத்தரசிகள் இன்று விருந்தினர்களை வரவேற்க தயாராக இருக்கலாம். நீண்டதூர பயணத்தை பயணத்தை இன்று தவிர்க்கவும். விநியோகஸ்தர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், சில்லறை விற்பனையாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நகை வியாபாரிகள் எதிலாவது கையெழுத்திடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

    அதிர்ஷ்ட நாள்: திங்கள்

    அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

    தானம்: கோவிலில் தயிர் தானம் செய்யுங்கள்

    #எண் 3: (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    உங்களது படைப்பாற்றல், நெகிழ்வுத்தன்மை, கல்வி அறிவு, உடல் தோற்றம் மற்றும் உங்கள் உற்சாக வார்த்தைகள் உள்ளிட்டவை காரணமாக மற்றவர்கள் உங்களால் வெற்றிகரமாக ஈர்க்கப்படுவார்கள். இன்று உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான நாள். யோகா பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையாளர்கள், இசைக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி அறிவிப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், ஹோட்டல் வியாபாரிகள் மற்றும் எழுத்தாளர்கள் இன்று தொழில் ரீதியாக சிறப்பான லாபம் பெறுவார்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை

    அதிர்ஷ்ட நாள்: வியாழன்

    அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

    தானம்: ஆதரவற்றோருக்கு வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்

    #எண் 4: ( 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

    பணியிடத்தில் நீங்கள் நெறிமுறைகளை மிகச்சரியாகப் பின்பற்றுபவர் என்று பெயர் எடுத்திருந்தால் இன்று நீங்கள் சிறந்த அதிகாரியாக மாறும் வாய்ப்புகளை பெறலாம். புரோக்கர்ஸ், கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் மருந்து போன்ற வணிகங்களில் உள்ளவர்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். உங்களிடம் இருக்கும் சிறந்த பண மேலாண்மை உங்கள் வாழ்க்கையில் அதிக ஆதாயங்களை பெற வழிவகுக்கிறது.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பழுப்பு

    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

    அதிர்ஷ்ட எண்: 9

    தானம்: கோவிலில் தேங்காய்களை தானம் செய்யுங்கள்

    #எண் 5: ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    தம்பதிகள் இன்று புதிய வீடு அல்லது புதிய வாகனங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கலாம்.புகழ் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வலுவான சோஷியல் நெட்ஒர்க் இன்று உங்களுக்கு ஆதரவாக இருக்கும். விளையாட்டு வீரர்கள் மற்றும் ட்ராவலர்கள் இன்று சிறந்த நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். இன்றைய நாளை சிறப்பாகக் கழிக்க, வேலையில் சோம்பலை தவிர்க்க வேண்டும்.

    அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை

    அதிர்ஷ்ட நாள்: புதன்

    அதிர்ஷ்ட எண்: 5

    தானம்: துளசி செடியை கோயிலிலோ அல்லது நண்பருக்கோ தானம் செய்யுங்கள்

    #எண் 6: (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்று பணியிடத்தில் நீங்கள் நெகிழ்வாக வேலை செய்ய வேண்டிய நாள், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை இன்று சில சிக்கல்களை சந்திக்கலாம். எனவே வீட்டிலிருந்து வேலை செய்வது அல்லது ஆன்லைனில் வேலை செய்வது இன்று பரிந்துரைக்கப்படுகிறது. உங்களை சுற்றி இருப்பவர்களிடம் இருந்துஅக்கறை மற்றும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விளையாட்டு வீரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், மென்பொருள் பொறியாளர்கள், இல்லத்தரசிகள், ஆசிரியர்கள் நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள்

    அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

    அதிர்ஷ்ட எண்: 6

    தானம்: ஆசிரமங்களுக்கு எஃகு பாத்திரங்களை நன்கொடையாக கொடுங்கள்

    #எண் 7: ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்று உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். அதி போல மற்றவர்களின் ஆலோசனைகளை வரவேற்பது இன்று அவசியமாகிறது. பெரிய குழுக்களுடன் பணிபுரிய உங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டாலும், நீங்கள் இன்று ஒரு சிறிய குழுவில் வேலை செய்வே விரும்புவீர்கள். தம்பதிகளுக்கிடையேயான உறவு இன்று ஏற்ற இறக்கங்களை சந்திக்கும். ஆனால் ஹீலிங், மோட்டிவேஷன், ஆன்மீகப் பள்ளிகள், விவசாயம், தானியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இன்று ஒரு சிறந்த நாள்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்

    அதிர்ஷ்ட நாள்: திங்கள்

    அதிர்ஷ்ட எண்: 7

    தானம்: ஆசிரமங்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை நன்கொடையாக வழங்குங்கள்

    #எண் 8: ( 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்று உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய உறவுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுடன் பணிபுரியும் ஒரு சீனியர் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தால் அவர் சொல்வதை பின்பற்ற வேண்டும். வியாபாரத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் இருக்கும். இன்று குடும்ப நிகழ்வுகள் அல்லது நண்பர்கள் அளிக்கும் விருந்துகளில் கலந்து கொள்ள நேரம் செலவிடும் வாய்ப்பு உள்ளது. காதல் உறவுகளில் நம்பிக்கையை அதிகரிக்க இன்று சிறந்த நாள்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

    அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

    அதிர்ஷ்ட எண்: 6

    தானம்: கால்நடைகளுக்கு குடிநீர் வைக்கவும்

    #எண் 9: ( 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    நீண்ட நாட்களாக நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வருவதால் நீங்கள் மிகவும் நிம்மதியாக இருப்பீர்கள். ஆசிரியர்கள், சட்டம், ஆலோசனை மற்றும் நிதித்துறையில் இருப்பவர்கள் இன்று புதிய உயரங்களைக் காண்பார்கள். உங்கள் திருமணத் திட்டத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள இன்று சிறந்த நாள். இன்று செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.

    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

    அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

    தானம்: ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

    top videos

      மார்ச் 24-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: இம்ரான் ஹாஷ்மி, யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார், கருணால் பாண்டியா,பிரஹலாத் கக்கர், கிருஷ்ணசாமி

      First published:

      Tags: Numerology, Tamil News