ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (07 ஜனவரி 2023) கோவிலுக்கு தேங்காய் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (07 ஜனவரி 2023) கோவிலுக்கு தேங்காய் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | ஜனவரி 07-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நேர்மையானதாகவும் சிறந்ததாகவும் இருக்கும். டீம் லீடர் அதாவது குழுத் தலைவராக இருந்தால் அனைவரையும் ஒருங்கிணைத்து பணியாற்றினால் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்னதாக தியானம் செய்யவும். நடிகர்கள், பொது பேச்சாளர்கள் தங்களுடைய வேலையில் வளர்ச்சியை எதிர்க்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், மருத்துவர்கள்,உலோக உற்பத்தியாளர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களுடைய துறையில் சில சலுகைகளைப் பெறக்கூடும். வாழ்க்கையில் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட வேண்டும் என்றால் தோல் சம்பந்தப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான நிறம்- மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 7

நன்கொடைகள் – கோவிலுக்கு பச்சை மஞ்சள் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மென்மையான பேச்சின் மூலம் பெண்கள் பலரின் மனதை வெல்லக்கூடும். வாழ்க்கையில் தேவையில்லாத நடிப்பு அல்லது குடும்ப பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். உங்களின் உள்ளுணர்வு என்ன செல்கிறதோ? அதை மட்டும் செய்யவும். காதல் அதிகரிக்கும் நாள் இன்று. இருந்தப்போதும் உங்களின் பிடிவாதத்தைக் குறைத்துக் கொண்டு கனவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், வங்கிப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்டமான நிறம் - வெள்ளை

அதிர்ஷ்டமான நாள் – திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் – 2 மற்றும் 6

நன்கொடைகள் – ஏழைகளுக்குத் தயிர் சாதம் கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு வெகுஜன பேச்சாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் அதன் நேரத்தை சிறப்பாக செலவிடும் நாளாக அமையும். உங்களின் வசீகரமான பேச்சால் பலரின் மனதை நீங்கள் வெல்வீர்கள். நாடகக் கலைஞர்கள் பணியிடத்தில் புதிய வேலைகளைத் தொடங்கினால் சிறப்பானதாக அமையும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதால், நண்பர்களுடன் இருக்கும்போது நிதி விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தித் தொகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிடலாம்.

அதிர்ஷ்டமான நிறம் -ஆரஞ்சு மற்றும் ஊதா

அதிர்ஷ்டமான நாள்- வியாழன்

அதிர்ஷ்ட எண் -3 மற்றும் 1

நன்கொடைகள் - தேவைப்படுபவர்களுக்கு அரிசியைத் தானம் செய்யுங்கள்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு ராகு மந்திரத்தை உச்சரித்து, உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள். பணம் சம்பாதிக்கும் நாள் இன்று. அனைத்து முக்கிய முடிவுகளும் சரியான நேரத்தில் எடுக்கும் போது வெற்றியைப் பெறுவீர்கள். எந்தவொரு திட்டங்களை மதிப்பாய்வு செய்தால் போதும், அனைத்துப் பணிகளையும் சரியாக முடிப்பீர்கள். உங்களுக்காக சில நேரங்களை ஒதுக்கினால் போதும் எந்த வேலையையும் சுலபமாக முடித்து விடலாம். தானியங்களைத் தானம் செய்வது வாழ்க்கையில் நல்ல பலன்களைக் கொடுக்கும்.கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்றவர்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். விளையாட்டு வீரர்களின் தொடர் வெற்றியால் பெற்றோர்கள் பெருமிதமும் உற்சாகமும் அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

நன்கொடை - ஏழைகளுக்கு தானியங்கள் அல்லது போர்வைகளைத் தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு அதிர்ஷ்டத்தின் மூலம் வெற்றிப்பெறும் நாளாக அமையும். வாழ்க்கையில் கிடைக்கும் சில வெகுமதிகள் உங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற உதவியாக இருக்கும். முதலீடுகளின் மூலம் நல்ல பணவரவு கிடைக்கும். விளையாட்டு வீரர், அறிவிப்பாளர்கள், நகைக்கடைக்காரர்கள், மாணவர்கள் சிறந்து விளங்கும் நாளாக அமையும். நாள் முழுவமும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை நிற ஆடை அல்லது அணிகலன்களை அணியவும். இன்றைக்கு உங்களுக்கு விருப்பமான பரிசுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் பீச்

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண்- 5

நன்கொடைகள் - கோவிலுக்கு தேங்காய் தானம் செய்யுங்கள்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மற்றவர்கள் உங்களின் நேர்மையை சந்தேகிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் எப்போதும் இராஜதந்திரமாக செயல்படவும். எந்தவொரு பணியிலும் சோம்பல் வேண்டாம், சுறுசுறுப்பாக மேற்கொள்ளுங்கள். காதல் உறவால் சில சிக்கல்கள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. அதிகமான வீட்டுப்பொறுப்புகளை தோளில் போட்டுக்கொள்ள வேண்டாம். வியாபாரிகள், பயணிகள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், மற்றும் மருத்துவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் நாளாக அமையும். மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல பலன்களைப் பெற வேண்டும் என்றால் பெற்றோர்களின் வழிகாட்டுதலைப் பெறவும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள்- வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

நன்கொடைகள்- தயவு செய்து கோயிலில் வெள்ளி நாணயம் கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு அடர் வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும். இன்றைக்கு அதிக லாபம் அல்லது அதிக நஷ்டம் ஏற்படும் என்பதால் எந்த வேலையைச் செய்தாலும் பெரியவர்கள் மற்றும் குருவின் ஆசிர்வாதத்தைப் பெற்று சிறந்த லாபத்தைப் பெறவும். ஆளுமை மற்றும் பகுப்பாய்வு திறன் உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும். நீங்கள் எந்தவொரு ஆவணங்களையும் தணிக்கை செய்ய வேண்டாம். தைரியமாக கையெழுத்திடவம். நீதிமன்றம், தியேட்டர், டெக்னாலஜி, அரசு டென்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு சிறந்த நாளாக அமையும். வணிக உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள் மற்றும் வியாழன்

அதிர்ஷ்ட எண் - 7

நன்கொடைகள்- ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வாழ்க்கையில் எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் ஏற்படும். தேவையில்லாத எண்ணங்களை விட்டுவிட்டு, கிடைக்கும் வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்தவும். பணியாட்களிடம் மென்மையாக பேசி வேலையைத் திறம்பட முடிக்கவும். தேவையில்லாத பேச்சுகள் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆன்மீகத்தில் அதிக கவனம் ஏற்படும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் இன்று அவசியம். சிவபெருமான் மற்றும் சனி பகவானின் ஆசீர்வாதங்களைப் பெற்றால் கூடுதல் சிறப்பு.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம் மற்றும் கிரீம்

அதிர்ஷ்ட நாள் - வெள்ளி மற்றும் வியாழன்

அதிர்ஷ்ட எண்- 6

நன்கொடைகள் - கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எந்த பிரச்சனையும் வாழ்க்கையில் ஏற்படாமல் இருப்பதற்கு தெற்கு சுவரில் சிவப்பு நிற விளக்கு ஏற்றவும். அதிகாரம், பணம், அங்கீகாரம், ஆடம்பரம் மற்றும் புகழை அடையும் நாள் இன்று.. வணிகம் அல்லது உங்களது தொழில் மேன்மைப் பெறும் சூழல் இருப்பதால் முயற்சிகளை கைவிடாதீர்கள். வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்கள் மட்டும் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்- சிவப்பு

அதிர்ஷ்டமான நாள்- செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

நன்கொடைகள்- சிவப்பு நிற தானியங்களை ஏழைகளுக்குத் தானம் செய்யுங்கள்

ஜனவரி 7ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: பிபாஷா பாசு, இர்ஃபான் கான், ஷோபா தே, வருண் படோலா, சுப்ரியா பதக், ரீனா ராய்

First published:

Tags: Numerology, Tamil News