ஒவ்வொரு தேதிக்கும் ஒவ்வொரு கிரகத்தின் தாக்கம் இருக்கும். அதுமட்டுமல்லாமல் எண்கணித ஜோதிடத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு குறிப்பிட்ட குணங்கள் மற்றும் அடிப்படை பண்புகளை கொண்டிருப்பார்கள். அந்த வகையில் 5 ஆம் தேதி என்பது அதிர்ஷ்டமான தேதியாகக் கருதப்படுகிறது. 5 ஆம் தேதி பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். புதன் என்பது மிகவும் புத்திசாலித்தனமான சுறுசுறுப்பான கிரகம். எனவே 5 ம் தேதி பிறந்தவர்கள் இயல்பிலேயே மற்றவர்களைவிட கொஞ்சம் புத்திசாலியாக இருப்பார்கள். இவர்களுடைய பேச்சு சுவாரசியமாகவும் இருக்கும், பல விஷயங்களை இவர் தெரிந்து வைத்துள்ளார் என்று நாம் புரிந்து கொள்ளும்படியும் இருக்கும். 5 ம் தேதி பிறந்தவர்கள்களுக்கான அதிர்ஷ்டம் அதிகரிக்கும் விஷயங்கள், இவர்களுக்கு ஏற்ற தொழில் உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
5 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை
5 ஆம் தேதி பிறந்தவர்களின் குண நலன்கள்: 5 ம் தேதி பிறந்தவர்கள் பயண விரும்பிகளாக இருப்பார்கள். இவர்களுடன் மற்றவர்கள் நேரம் செலவழிக்க விரும்புவார்கள். இவர்கள் இருந்தால் நேரம் போவதே தெரியாது என்று கூறும் அளவுக்கு இவர்கள் சிறந்த கம்பானியாக இருப்பார்கள். புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அதிகமாக இருக்கும். மற்றவர்களுடன் எளிதில் பழகி விடுவார்கள். கிரியேட்டிவாக, புதிது புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தை செய்து கொண்டே இருப்பார்கள்.
5 ஆம் தேதி பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: இவர்கள் பலரின் பார்வைக்கு சுயநலவாதிகளாக தனக்கு என்ன வேண்டுமோ, அதை மட்டுமே செய்து கொள்ளும் நபராகக் காட்சியளிப்பார்கள். வாழ்க்கையில் இவர்களுக்கு எக்கச்சக்க ஆசை இருக்கும். சில நேரங்களில் ஒரு சில ஆசைகள் நிறைவேறாமல் போகலாம். ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்வதால் ஒரு சில முக்கியமான விஷயங்களை இவர்கள் முடிக்க முடியாமல் எதேனும் பிரச்சனையில் சிக்கிக் கொள்வார்கள். அதிக ஆற்றல், சுறுசுறுப்பு இருந்தாலுமே அவை பல இடங்களில் சிதறிக் கிடக்கிறது. இது இல்லை என்றால் இன்னொன்று என்ற மனப்பாங்கு இருப்பதால் பொறுப்பற்றவர்களாக சித்தரிக்கப்படுவார்கள்.
5 ஆம் தேதி பிறந்தவர்களுக்கான தொழில் துறைகள்: விளையாட்டு, அரசியல், ஆட்டோமொபைல், ஏற்றுமதி இறக்குமதி, விமானம், சுற்றுலா, பங்குச் சந்தை, நிர்வாகத் திறன் தேவைப்படும் வேலைகள் ஆகியவை இவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News