முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மார்ச் 25, 2023) பறவைகளுக்கு நீர் வைக்க வேண்டும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மார்ச் 25, 2023) பறவைகளுக்கு நீர் வைக்க வேண்டும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | மார்ச் 25ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    முக்கிய முடிவுகளை மதியத்திற்கு பின் எடுப்பது நல்லது உங்களை சுற்றி உள்ளவர்களிடம் அதிக கவனம் தேவை. அலுவலகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு இதன் மூலம் உங்களது செயல் திறன் அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் – பியஜ்

    அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு

    அதிர்ஷ்ட எண் = 3

    தானம்: ஏழைகளுக்கு கோதுமை உணவை தானமளிக்க வேண்டும்.

    #எண் 2: ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    சிவாலயத்திற்கு நாணயங்களையும் தேங்காயும் தானம் அளிக்க வேண்டும் உள்ளுணர்வை கேட்டு அதன் வழி செயல்படுவது நல்லது. காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. சொத்து விஷயத்தில் கவனம் தேவை.

    அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ

    அதிர்ஷ்ட தினம் - திங்கள்

    அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

    தானம்: ஏழைகளுக்கு தயிர் சாதத்தை தானம் அளிக்க வேண்டும்.

    #எண் 3: (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    அரசியலில் இருப்பவர்கள் வியூகம் வகுத்து செயல்படுவது வெற்றியை கொடுக்கும். மேடைப் பேச்சாளர்களுக்கும் உணவு துறையில் இருப்பவர்களுக்கும் இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். தலைமை பண்பு அதிகரிக்கும். உங்களது பணம் மற்றும் சொத்து விவரங்களை பற்றி வெளி ஆட்களுடன் விவாதிக்க வேண்டாம்.

    அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

    அதிர்ஷ்ட தினம் - வியாழன்

    அதிர்ஷ்ட எண் – 3 மற்றும் 1

    தானம்: பழுப்பு அரிசியை ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

    #எண் 4: ( 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

    ஏற்கனவே கிடப்பில் இருந்த சில விஷயங்களை இன்று செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள் அதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். தற்போதைய திட்டங்களை ஒருமுறை சரி பார்ப்பது நல்லது. நீங்கள் உங்களுக்கு கொடுத்த வேலைகளை செய்து முடித்தாலும் அதற்கான பலன் தாமதமாக கிடைக்கும். விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக அமையும்.

    அதிர்ஷ்ட நிறம் - நீலம்

    அதிர்ஷ்ட தினம் - செவ்வாய்

    அதிர்ஷ்ட எண் 9

    தானம்: உப்பு கலந்த உணவுகளை கால்நடைகளுக்கும் ஏழைகளுக்கும் தானம் அளிக்க வேண்டும்.

    #எண் 5: ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    அலுவலகத்தில் பணிபுரியும் இளம் வயதினருக்கு தொழிலை பற்றியும் வேலைகளை பற்றியும் கற்றுக்கொள்ள இன்று ஏற்ற நாள். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். சொத்துக்குள் வாங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் என்றும் மிகவும் ஏற்ற நாள். காதல் வாழ்க்கை பொருத்தவரை உங்களது ஈடுபாட்டிற்கு ஏற்ப பலன் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

    அதிர்ஷ்ட தினம் - புதன்

    அதிர்ஷ்ட எண் - 5

    தானம்: பறவைகளுக்கு நீர் வைக்க வேண்டும்.

    #எண் 6: (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    தம்பதிகள் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசுவதன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். உங்களை சுற்றி உள்ளவர்களிடம் கவனம் தேவை. இன்று அதிக வேலைகளை செய்து முடிப்பீர்கள். உணர்வுகளை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. கல்வி பயிலும் மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைபடி செயல்படுவது எதிர்காலத்தில் நன்மையை கொடுக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - நீலம்

    அதிர்ஷ்ட தினம் - வெள்ளி

    அதிர்ஷ்ட எண் - 6

    தானம்: லட்சுமி நாராயணர் கோவிலுக்கு நாணயங்களை தானம் அளிக்க வேண்டும்.

    #எண் 7: ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக அமையும். பண வரவு அதிகரிக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெரியோர்களிடமிருந்து ஆசி பெறுவது நன்மையை கொடுக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களது அறிவாற்றலை பயன்படுத்தி அதிக நன்மைகளை பெறுவீர்கள். கோப்புகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிகம் கவனம் தேவை. தொழிலைப் பொறுத்தவரை மற்றவர்களுடன் கூட்டு சேராமல் இருப்பது மிகவும் நல்லது.

    அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் பச்சை

    அதிர்ஷ்ட தினம் - திங்கள்

    அதிர்ஷ்ட எண் - 7

    தானம்: ஏழைகளுக்கு சூரியகாந்தி எண்ணெயை தானமளிக்க வேண்டும்.

    #எண் 8: ( 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    உங்களது உடல் நலனில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்ய வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் தேவை. முக்கிய முடிவுகளை மதியத்திற்கு மேல் எடுப்பது நன்மையை கொடுக்கும். சிவபெருமானையும் கேது கிரகத்தையும் வழிபடுவது நன்மையை கொடுக்கும்.. அதிர்ஷ்ட நேரம் சீ ப்ளூ,

    அதிர்ஷ்ட தினம் - வெள்ளி

    அதிர்ஷ்ட எண் - 6

    தானம்: ஏழைகளுக்கு குடையை தானம் அளிக்க வேண்டும்

    #எண் 9: ( 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    தானம் செய்வதில் கஞ்சத்தனமாக இருப்பதை தவிர்ப்பது நல்லது. இன்றைய நாளில் லாபம் அதிக அளவில் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. பணம் மற்றும் புகழ் பெருமளவில் கிடைக்கும். புதிய சாதனைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.. மாதுளை பழத்தை உட்கொள்வது நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

    அதிர்ஷ்ட தினம் - செவ்வாய்

    அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

    தானம்: சிவப்பு தானியங்களை ஏழைகளுக்கு தானம் அளிக்க வேண்டும்.

    top videos

      மார்ச் 25-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: சுதாவரம் சுதாகர் ரெட்டி, நைலா உஷா, ஆஷிஷ் யோஹராஜ், பூஜா செல்வி

      First published:

      Tags: Numerology, Tamil News