முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மார்ச் 26, 2023) ஆசிரமத்திற்கு அன்னதானம் அளிக்க வேண்டும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மார்ச் 26, 2023) ஆசிரமத்திற்கு அன்னதானம் அளிக்க வேண்டும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | மார்ச் 26ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  ஏற்கனவே உள்ள பிரச்சனைகள் மேலும் சிக்கலாக மாறினாலும் அவை விரைவில் முடிவடையும் தருணம் வந்துவிட்டது. எனவே புதிய மாற்றத்திற்கு தயாராவது நல்லது. வீடு, வேலை, தொழில், உறவுகள் என எதில் வேண்டுமானாலும் மாற்றங்கள் வரலாம். சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் உண்டாகும்

  அதிர்ஷ்ட நிறம் – பீஜ்

  அதிர்ஷ்ட தினம் - வெள்ளி

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம்: ஆசிரமத்திற்கு அன்னதானம் அளிக்க வேண்டும்.

  #எண் 2: ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

  வேலை பார்க்கும் இடத்தில் இரண்டு அடி நீள மூங்கில் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ரகசியம் காப்பது இன்று மிகவும் அவசியமானது. உங்களது இரக்க குணத்தை பயன்படுத்தி பலர் என்று ஆதாயம் தேட முயற்சிப்பார்கள். எனவே கவனம் தேவை. வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கும், மருத்துவர்கள், பொறியாளர்கள் ஆகியவர்களுக்கு இன்று வெற்றிகரமான நாளாக அமையும்.

  அதிர்ஷ்ட நிறம் - நீலம்

  அதிர்ஷ்ட தினம் - திங்கள்

  அதிர்ஷ்ட எண் - 2

  தானம்: ஆசிரமத்திற்கு சர்க்கரை தானம் அளிக்க வேண்டும்.

  #எண் 3: (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

  காதல் வாழ்க்கை இன்று சிறப்பாக இருக்கும். வீட்டின் தெற்கு பக்கத்தில் உள்ள சுவற்றில் சிவப்பு நிற மின் விளக்கை எரிய விடுவது நன்மை கொடுக்கும். அலுவலகத்தில் கவனம் தேவை. உங்களது பேச்சின் மூலம் உயர் அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை கவர்வீர்கள். விவசாயம் மற்றும் கட்டுமானத்தில் முதலீடுகள் செய்வதற்கு இன்று ஏற்ற நாள். காலை நேரத்தில் சந்தனம் வைத்து விட்டு வெளியே செல்வது நன்மை கொடுக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் பச்சை

  அதிர்ஷ்ட தினம் - வியாழன்

  அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

  தானம்: சூரியகாந்தி விதைகளை கோவிலுக்கு தானம் அளிக்க வேண்டும்.

  #எண் 4: ( 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

  இன்று குளிக்கும் போது நீரில் ஒரு சிட்டிகை உப்பை கலந்து குளிப்பது நல்லது. தொழிலில் திட்டம் தீட்டி செயல்படுவது வளர்ச்சியை கொடுக்கும். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் அரசியல் இருப்பவர்களுக்கும் இன்று உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும். பச்சை காய்கறிகளை தானம் அளிப்பது நன்மை கொடுக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் சாம்பல்

  அதிர்ஷ்ட தினம் - வெள்ளி

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம்: விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும்

  #எண் 5: ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

  குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிப்பதை மறந்து நேர்மையான வழியில் வெற்றியை ஈட்ட முயற்சி செய்ய வேண்டும். உங்களது காதலை வெளிப்படுத்துவதற்கு இன்று ஏற்ற நாள். கோப்புகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. குறுகிய கால பயணங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களது தலைமை பண்பை பயன்படுத்தி பெரும் நன்மைகளை பெறுவீர்கள்.

  அதிர்ஷ்ட நிறம் - டீல்

  அதிர்ஷ்ட தினம் - புதன்

  அதிர்ஷ்ட எண் - 5

  தானம்: விநாயகருக்கு தர்ப்பை புல்லை காணிக்கை செலுத்தி வழிபடவும்.

  #எண் 6: (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

  மருத்துவம், விமான போக்குவரத்து, பேஷன் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் தங்களது வேலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நாள். கவனமுடன் செயல்படுவதன் மூலம் பெரிய வெற்றிகளை பெறுவீர்கள். உங்களது கனவுகளை நினைவாக்க திட்டம் தீட்டி செயல்பட வேண்டிய நாள். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். குடும்பத்தினரிடமிருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ

  அதிர்ஷ்ட தினம் - வெள்ளி

  அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9

  தானம்: ஏழைகளுக்கு தயிர் தானம் அளிக்க வேண்டும்.

  #எண் 7: ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

  கேது பகவானை வழிபட்டு குரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நன்மை கிடைக்கும். எங்கு சென்றாலும் உங்கள் பையில் செப்பு நாணயத்தை வைத்திருப்பது வெற்றியை கொடுக்கும். பழைய சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கவனம் தேவை. தொழில் போட்டியாளர்களிடம் அதிகம் கவனம் தேவை. சிவபெருமான் மற்றும் கேது பகவானை பூஜை செய்வதன் மூலம் நன்மை கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

  அதிர்ஷ்ட தினம் - திங்கள்

  அதிர்ஷ்ட எண் - 7

  தானம்: ஆசிரமத்திற்கு உடைகளை தானம் அளிக்க வேண்டும்.

  #எண் 8: ( 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

  நெடுந்தூர பயணங்கள் செய்ய வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற யோசனைகளை தவிர்ப்பது நல்லது. உங்களது தலைமை பண்பின் மூலம் பலர் கவரப்பட்டு உங்களைப் பின் தொடர்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவருக்கு உதவிகள் செய்வது நன்மையை கொடுக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - ஊதா

  அதிர்ஷ்ட தினம் - வெள்ளி

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம்: உப்பு கலந்த உணவை ஏழைகளுக்கு தானம் அளிக்க வேண்டும்.

  #எண் 9: ( 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

  உணவு துறையில் வேலை செய்யும் பெண்களுக்கு என்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகள் விளையாட்டு துறையில் இருப்பவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் ஆகியோருக்கு இன்று உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். இன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கவனத்தை சிதற விடாமல் செயல்படுவதன் மூலம் பெரிய வெற்றிகளை பெறுவீர்கள். பணம் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - பழுப்பு

  அதிர்ஷ்ட தினம்- செவ்வாய்

  அதிர்ஷ்ட எண் - 9

  தானம்: கோவிலுக்கு மஞ்சளை தானம் அளிக்க வேண்டும்.

  மார்ச் 26-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: அர்ச்சனா புரம் சிங், பிரகாஷ் ராஜ், மது, உண்முகுந்த சந்த், கேதார் ஜாதவ், ரவி சச்சாரியாஸ்

  First published:

  Tags: Numerology, Tamil News