ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (11 ஜனவரி 2023) ஏழைகளுக்கு தயிர் தானம் அளிக்க வேண்டும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (11 ஜனவரி 2023) ஏழைகளுக்கு தயிர் தானம் அளிக்க வேண்டும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | ஜனவரி 11-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த எண்களினால் உங்களது மன உறுதி அதிகரிக்கும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் வல்லவர்களாக இருப்பீர்கள். நேர்காணல்களில் சிறப்பாக செயல்படுவீர்கள். இன்றைய நாளில் ஏதேனும் திட்டத்தை செயல்படுத்த விரும்பினால் மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவது அவசியம் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பிரச்சனைகளிலிருந்து விடுபட மாலை வேலைகளில் சந்திர பகவானை வழிபட வேண்டும். இன்றைய நாளில் புதிய சாதனைகளை செய்து அதன் மூலம் உரிய அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் தலைமை பொறுப்பு உங்களுக்கு அளிக்கப்பட்டு அதிகாரம் உடைய இடத்தில் அமர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை மற்றும் நீலம்

அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் – 2

தானம் - ஏழைகளுக்கு சூரியகாந்தி எண்ணெய் தானம் அளிக்க வேண்டும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஒப்பந்தங்கள் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு ஏற்ற நாள். தொழிலில் பார்ட்னர்களுடன் தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபட வேண்டாம். வெள்ளை நீற உடைகள் அணிவது அதிர்ஷ்டம் கொடுக்கும். சந்திர பகவானுக்கு பூஜை செய்வது நன்மையை கொடுக்கும். மருத்துவ பொருட்களை விற்பனை செய்பவர்கள், வைர வியாபாரி, விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். புத்தகம், எழுது பொருட்கள், கல்வி நிலையங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பண வரவு அதிகரித்து மிகவும் வெற்றிகரமான நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான நிறம் - வெள்ளை மற்றும் ஸ்கை ப்ளூ,

அதிர்ஷ்ட தினம் - திங்கள்

அதிர்ஷ்ட எண் – 2

தானம் - கால்நடைகள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு பால் தானம் அளிக்க வேண்டும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் வெற்றிகரமாக நாளாக அமையும். திறமையை பயன்படுத்தி அனைவரையும் கவர்வீர்கள். கடந்த கால பிரச்சனைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாள். புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு அறிவாற்றலை பெருக்க விரும்பினால் இன்று அதற்கு ஏற்ற நாள். உங்களது சுற்றுப்புறத்தில் இருந்து பல்வேறு விஷயங்களை உங்களால் கற்றுக் கொள்ள முடியும்.மனதில் பட்டதை பேசுவது நல்லது. நண்பர்களுடன் மகிழ்ச்சியாக எங்கேனும் வெளியே செல்ல வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் பைனான்ஸ் துறையில் உள்ளவர்கள் மற்றும் அரசாங்க தேர்வுகளுக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும். நடனம், சமையல், டிசைனிங், நடிப்பு, ஆடிட்டிங் போன்ற துறையில் உள்ளவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி உறி அங்கீகாரம் பெறுவதற்கு ஏற்ற நாள்.

அதிர்ஷ்டமான நிறம் - பீச்

அதிர்ஷ்ட தினம் - வியாழன்

அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 9

தானம் கோவில்களுக்கு சந்தன மரக் கட்டைகளையும் சந்தனத்தையும் தானம் அளிக்க வேண்டும்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாளின் முதல் பாதி மிகவும் வெறுமையுடன் காணப்படும். இரண்டாம் பாதியில் நீங்கள் விரும்பிய பல விஷயங்கள் நடந்தேறும். இயந்திரங்கள், ஆலோசகர்கள், நடிப்புத் துறை, ஊடகத்துறை ஆகியவற்றில் இருப்பவர்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். தனிப்பட்ட விஷயங்களில் எந்தவித பிரச்சனையும் இருக்காது. உடல் நலம் சீராக இருக்க சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்ட தினம் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம்: ஏழைகளுக்கோ அல்லது விலங்குகளுக்கோ அன்னதானம் அளிக்க வேண்டும்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புதிய நண்பர்களை சம்பாதிப்பதற்கும், புதிய வழியில் பணம் சம்பாதிப்பதற்கும் ஏற்ற நாள். முதலீடுகள் செய்வது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அக்வா அல்லது வெள்ளை நிற உடைகளை அணிவது அதிர்ஷ்டம் கொடுக்கும். நேர்காணலுக்கு செல்லும்போது இந்த நிற உடைகளை அணிந்து செல்ல வேண்டும். பயணங்கள் செய்வதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் உகந்த நாள். உணவில் அதிக கவனம் தேவை. வேலை பார்க்கும் இடத்தில் அனைவரிடமும் மென்மையாக நடந்து கொள்வது நல்லது. பயணங்கள் செய்ய விரும்புபவர்களுக்கு திட்டமிட்டு பயணங்களை மேற்கொண்டு புதிய விஷயங்களை அனுபவிப்பதற்கு மிகவும் உகந்த நாள். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் எடுத்த முடிவுகள் அனைத்தும் நல்ல விளைவுகளை கொடுக்கும். பயணம் செய்ய விரும்புவோர் நீண்ட தூர டிரைவிங் செய்து மகிழ்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - அக்குவா

அதிர்ஷ்ட தினம் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம்: ஆசிரமங்களில் இருப்பவர்களுக்கு பச்சைக் நிற காய்கறிகளை தானம் அளிக்க வேண்டும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மிகவும் ஆடம்பர செலவுகளை செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியம். மகிழ்ச்சியான புகழ் நிறைந்த நாளாக அமையும். குடும்பத்தார் இடம் இருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். நடிகர்கள், மருத்துவர்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள், ஆடை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், ஆடம்பரப் பொருள் விற்பவர்கள் போன்ற தொழில் செய்பவர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். வாகனங்கள் வாங்குவதற்கு மிகவும் ஏற்ற நாள். வீடு இயந்திரங்கள், நகைகள் போன்றவற்றை வாங்குவதற்கும் மிகவும் அதிர்ஷ்டமான நாள். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - அக்குவா

அதிர்ஷ்ட தினம் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம்: ஏழைகளுக்கு தயிர் தானம் அளிக்க வேண்டும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கணக்கு வழக்குகளை பார்ப்பதற்கு ஏற்ற நாள். தொழிலில் கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். திருமண வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். விநாயகர் கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்வது வெற்றியை கொடுக்கும். எதிர் பாலினத்தவர் ஒருவரிடம் இருந்து கிடைக்கும் அறிவுரையை ஏற்று நடப்பது அதிர்ஷ்டம் கொடுக்கும். கணக்கு வழக்குகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அனுபவசாலிகள் இடம் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. இன்று வெற்றியை ஈட்டுவதற்கு சில தியாகங்களை செய்து அதன் மூலம் தொழிலை நடத்த வேண்டிய சூழல் உண்டாக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்ட தினம் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம்: மஞ்சள் தானியங்களை கால்நடைகளுக்கு ஆசிரமத்திற்கும் தானம் அளிக்க வேண்டும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் மிகவும் பரபரப்பாக காணப்படும். உங்களிடம் உள்ள அதிகாரம் மற்றும் தொடர்புகளை பயன்படுத்தி சில சட்ட சிக்கல்களை முடித்து வைப்பீர்கள். மற்றவர்களுடன் சரியாக முறையில் தொடர்பு கொள்வது அவசியம். வெளிநாடுகளில் படிப்பிற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக அமையும். இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் வெற்றிகரமான நாளாக அமையும். கால்நடைகளுக்கு சேவை செய்வது நன்மை கொடுக்கும். மருத்துவம், மார்க்கெட்டிங், அரசியல், பெட்டிங் மற்றும் விற்பனை சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக அமையும். அதே சமயத்தில் வெற்றிகரமான நாளாகவும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்ட தினம் - சனி

அதிர்ஷ்ட எண் - 6

தானம்: காலனி இல்லாதவர்களுக்கு காலனியை தானம் செய்ய வேண்டும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுடைய விசுவாசத்தை உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு காண்பிக்க வேண்டிய நாள். மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுவது நல்லது. காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். காதலில் இருப்பவர்களுக்கு இடையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், விழாக்களை நடத்துவது, அறுவை சிகிச்சை செய்வது, ஒப்பந்தங்கள் மேற்கொள்வது போன்றவற்றில் சிறிய கால தாமதங்கள் உண்டாக்கலாம். எனவே நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்ட தினம் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் – 9

தானம் - சிவப்பு நிற கைக்குட்டையை துப்புரவு பணியாளர்களுக்கு தானம் அளிக்க வேண்டும்.

ஜனவரி 11-ல் பிறந்த நட்சத்திரங்கள்: ராகுல் டிராவிட், கைலாஷ் சத்யார்த்தி, அணு அகர்வால், பாத்திமா சனா சாய்க், சிபு சோரேன், அஞ்சு மகேந்திரூ.

First published:

Tags: Numerology, Tamil News