ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (05 ஜனவரி 2023) ஏழைகளுக்கு உப்பு தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (05 ஜனவரி 2023) ஏழைகளுக்கு உப்பு தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | ஜனவரி 05-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஈவன்ட் நிறுவனங்கள், எஃகு உற்பத்தியாளர்கள், இயக்குநர்கள், விவசாயிகள், ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் இன்று தங்கள் வணிகத்தில் தேவையான ரிஸ்க் எடுக்க வேண்டும். உங்களுக்கு அன்பான மற்றும் நெருக்கமான நபர்களிடமிருந்து பரிசுகள், வெகுமதிகள் அல்லது எதிர்பாராத பெரிய ஆதரவு கிடைத்து உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையும் இன்று மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் கிரே

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

நன்கொடைகள்: கோவிலில் பச்சை விதைகளை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று ஆண்கள் தலைமைத்துவத்தையும் அனுபவிப்பார்கள், பெண்கள் வழக்கத்தை விட மிகவும் தன்னம்பிக்கையாக உணர்வார்கள். இருப்பினும் செயல்திறனில் கவனம் செலுத்துவது முக்கியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பண முதலீடு மற்றும் சில முக்கிய முயற்சிகளை செய்ய வேண்டிய நாள் இன்று. தம்பதிகளின் உறவில் பாசம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

நன்கொடைகள்: ஏழைகளுக்கு உப்பு தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வியாபாரிகள் தங்கள் வணிகத்தை விரிவுப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு இன்று உள்ளது. கடின உழைப்பின் மூலம் சிறந்த முடிவுகளை பெறுவீர்கள். உங்களு ஒரு உறவு பிரிய கூடாது என்றால் அவரை தொடர்பு கொண்டு பேசுங்கள். அமைதியாக இருந்தால் உறவு பாதிக்கப்படும். புதிய முயற்சிகளை முன்னெடுக்க ஏற்ற நாள். கல்வியாளர்கள், ஓட்டல்காரர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு மற்றும் நல்ல பலன் இன்று விளம்பரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

நன்கொடைகள்: ஆசிரமங்களில் குங்குமம் தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீட்டின் நடுவே எலெக்ட்ரிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வைப்பதை தவிர்க்கவும். இன்று உங்களுக்கு பிஸியான நாளாக அமைய கூடும். உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக, நேர்த்தியாக வைத்திருங்கள். மார்க்கெட்டிங் உத்திகளை செயலில் வைத்திருங்கள், அதிர்ஷ்டம் அதன் பங்கை வகிக்கும். இளைஞர்கள் தங்கள் காதல் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஏற்ற நாள். இன்று நாள் உங்களுக்கு வெற்றிகரமானதாக நிறைவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: டீல் மற்றும் கிரே

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: உப்பு சேர்க்கப்பட்ட காய்கறி உணவை ஏழைகளுக்கு வழங்குங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உறவுகளை வளர்க்க இன்று ஒரு அழகான காதல் நாள். இன்று நீங்கள் மேற்கொள்ளும் குறுகிய பயணம் உங்களை மகிழ்ச்சியாக்கும். ஸ்பெஷல் நபரை இன்று நீங்கள் சந்திப்பீர்கள். இன்று நீங்கள் விரும்பும் பெரிய அல்லது சிறிய பொருள் எதுவாக இருந்தாலும் வாங்குங்கள். பங்கு அல்லது சொத்தில் முதலீடு செய்ய ஏற்ற நாள். வியாபாரிகள் தங்கள் தொழிலில் இன்று ஸ்திரத்தன்மையை சந்திப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: குழந்தைகளுக்கு பசும் செடிகளை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் பண பலன்களைப் பெறுவீர்கள் மற்றும் உங்கள் இமேஜ் வலுவாகும். நீங்கள் நினைத்த இலக்குகளை அடைந்து சாதனையாளராக திகழ்வீர்கள். அரசு அதிகாரிகளுக்கு இன்று எதிர்பார்த்த பணபலன்கள் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும். ஆர்ட்டிஸ்ட்கள் இன்று மக்களை கவர்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 2

நன்கொடைகள்: முதியோர் இல்லத்தில் இனிப்பு தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களைச் சுற்றி இருப்போரின் அன்பும், பாசமும் உங்கள் கனவுகள் நிறைவேற்ற உதவும். இன்று நீங்கள் நிதி ரீதியாக எடுக்க போகும் எந்த முடிவுகளையும் நன்கு மதிப்பாய்வு செய்து பிறகு எடுங்கள். இசை ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இன்று பெரிய வாய்ப்பு கிடைக்கும் மற்றும் தங்களது வளர்ச்சிக்காக பயணிக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: ஆசிரமங்களில் கோதுமையை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று மருத்துவர்கள், விற்பனையாளர்கள், ஒப்பந்ததாரர்கள், உற்பத்தியாளர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். அதிக கடின உழைப்பு இல்லாமலே வெற்றி கிடைக்க கூடும். இன்று எந்த சிக்கலில் இருந்தும் மீள தன்னம்பிக்கை பெரிதும் உதவும். தம்பதிகளிடையே காதல் உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவர்கள், உற்பத்தியாளர்கள் நிதி பலன்களை பெறுவார்கள். இயந்திரங்கள் வாங்க, புதிய சொத்துகளில் முதலீடு செய்ய சிறந்த நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: கால்நடைகளுக்கு சேவை செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நெகிழ்வு தன்மையோடு பாகுபாடு பார்க்காமல் அனைவருடனும் பழகுவது உங்கள் நாளை சிறப்பாக்கும். தொழிலில் முதலீடுகள் செய்ய ஏற்ற நாள். இளைஞர்கள் தங்கள் பார்ட்னர்களை கவர சாதகமான நாள். ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுங்கள். நிகழ்வில் பங்கேற்க, பார்ட்டி வைக்க, போட்டி தேர்வில் பங்கேற்க இன்று சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

நன்கொடைகள்: ஏழைகளுக்கு தர்பூசணி தானம் செய்யுங்கள்

ஜனவரி 5-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: மம்தா பானர்ஜி, மன்சூர் அலி கான் பட்டோடி, தீபிகா படுகோன், கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, பரம்ஹன்சா யோகானந்தா

First published:

Tags: Numerology, Tamil News