ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (12 ஜனவரி 2023) ஆசிரமங்களுக்கு கோதுமையை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (12 ஜனவரி 2023) ஆசிரமங்களுக்கு கோதுமையை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology | ஜனவரி 12-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மற்றவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்து உங்களின் சுயமரியாதையைக் காப்பாற்றவும். புதிதாக சொத்துக்கள் வாங்குவதை விட பிரச்சனைக்குரிய சொத்துக்களை விற்க வேண்டிய நேரம் இது. அழகு சாதனப் பொருள்கள், தங்க நகைகள், பள்ளிகள், கட்டுமானப் பொருள்கள், விவசாயப்புத்தகங்கள் போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக முக்கியமான பணிகளை முடித்துவிடவும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

அதிர்ஷ்ட எண்: 1

பரிகாரம்: ஆசிரமங்களுக்கு கோதுமையை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு பெண்களும், மாணவர்களும் பொது மேடை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பிரபலமடையும் சூழல் ஏற்படும். சட்ட சிக்கல்களுக்கு எளிதில் தீர்வு காண்பீர்கள். வணிகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, விமான நிறுவனங்கள், விளையாட்டு,சில்லறை வணிகம், மருத்துவம் மற்றும் அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் வளர்ச்சியடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2

பரிகாரம் : கோவிலில் பால் அல்லது எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு நீங்கள் செய்யும் வேலைகளால் மகிழ்ச்சியடைவீர்கள். தலைமைப் பணியில் இருப்பவர்கள் உங்களைப் பாராட்ட நேரிடும். மற்றவர்கள் உங்களின் திறமையைக்கண்டு பொறாமையடையும் நிலை ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் அறிவார்ந்த பேச்சினால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். கல்வியாளர், இசைக் கலைஞர்கள், வங்கிப் பணியாளர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் இன்றைக்கு எடுக்கும் முடிவுகளில் அவரசம் காட்டாதீர்கள். அரசாங்க பணியில் இருப்பர்களுக்கு நல்ல அதிர்ஷடத்தை அளிக்கும் நாள். உங்களுக்கான நாளைத் தொடங்குவதற்கு முன்னதாக குருவின் பெயரை உச்சரித்து நெற்றியில் சந்தனம் வைக்க மறந்துவிடாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

பரிகாரம் : குழந்தைகள் படிப்பிற்குத் தேவையான பொருள்களைத் தானம் செய்யுங்கள்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மேலதிகாரிகளிடம் நல்ல அபிப்ராயத்தைப் பெறுவீர்கள். நாளை செய்யலாம் என்ற யோசனை எதுவும் இல்லாமல், நினைத்தக் காரியம் மற்றும் வேலையை அன்றே செய்துவிடவும். விளையாட்டு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு பயணம் சிறப்பானதாக அமையும். கட்டுமானம், பங்குச்சந்தை, ஊடகம், மருத்துவம் மற்றும் விவசாயத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்க்கையில் புதிய இலக்குகளை அடைவார்கள். இன்று அசைவம் சாப்பிடுவதைத் தவிர்த்தால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 9

பரிகாரம்: பிச்சைக்காரர்களுக்கு ஆடைகள் தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு நீங்கள் உங்களது வாழ்க்கையில் எடுக்கும் எந்த முடிவுகளையும் தாமதமாக எடுக்காதீர்கள். இது உங்களின் செயல்திறனைப் பாதிக்கும். பழைய நண்ர் அல்லது உறவினர்களின் மூலம் உதவியைப் பெறுவீர்கள். வங்கிப் பணியாளர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மற்றும் அரசியல் வாதிகள் வாழ்க்கையில் சிறந்த அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

பரிகாரம்: பச்சை இலைக் காய்கறிகளைத் தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் உதவி மனப்பான்மையால் பலரின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் போது தேவையில்லாத பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும். திறமைகளை வெளிப்படுத்தும் சூழல் ஏற்படும். குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிட சிறந்த நாள். விசாவுக்காகக் காத்திருந்தால் அதற்கான முயற்சியைத் தொடர்ந்து எடுக்கவும்.. புதிய தொழிற்சாலை அமைக்கும் நிலை ஏற்படும். நடிகர்கள் மற்றும் ஊடக தோழர்கள் வெற்றியை அனுபவிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

பரிகாரம் : ஏழைகளுக்கு வெள்ளை இனிப்பு தானம்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடின உழைப்பு தான் உங்களை மேன்மைப்படுத்தும். வெற்றி உங்கள் கைகளில் உள்ளதால் சோர்வடையாமல் பணிகளை விரைந்து முடிக்கவும். வியாபாரம் மற்றும் தொழிலில் ரிஸ்க் எடுக்க வேண்டும். இதனால் அதீத லாபத்தைப் பெறுவீர்கள். சட்ட வழக்குகளில் நிதானத்துடன் செயல்படவும். வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு குரு மந்திரத்தைப் படிக்கவும். அரசியல் வாதிகளுக்கு வெற்றியைக் கொடுக்கும் நாள் என்பதால் நிதானத்துடன் எப்போதும் பேசவும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் உங்களை நல்வழிப்படுத்தும்..

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

பரிகாரம்: ஆசிரமங்களுக்கு பொருள்களைத் தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தேவைப்படுகின்ற இடத்தில் கடின உழைப்பை மேற்கொள்ளவும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளில் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி உங்களுக்கு நிச்சயம். உயர் இடத்திற்கு செல்வதற்கு அதிக கால நேரம் தேவை. முயற்சியை கைவிடாதீர்கள். பொது நபர்கள் மாலைக்குள் பண பலன்களை அடைவார்கள். குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதால் பிரச்சனைகள் ஏற்படும். தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

பரிகாரம்: ஏழைகளுக்குத் தர்பூசணி தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெண்கள் தங்களின் படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் நாளாக அமையும். வாழ்க்கையில் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கும். அரசாங்க உத்தரவுகளின் படி, பணிகளைச் செய்து சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு வீரர்களுக்கும், மாணவர்களுக்கும் அற்புதமான நாள் என்பதால், வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைவீர்கள். சமையல் கலைஞர்கள், பெண் நடிகர்கள், பாடகர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

பரிகாரம்: பெண்களுக்கு அழகுசாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்

ஜனவரி 12 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: பிரியங்கா காந்தி, சுவாமி விவேகானந்தர், சாக்ஷி தன்வார், அருண் கோவில், ஜிஜாபாய், மகரிஷி மகேஷ் யோகி, முஃப்தி முகமது சயீத், அஜய் மக்கன், பசந்த் குமார் பிர்லா, நித்தாய்

First published:

Tags: Numerology, Tamil News