#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று அனைத்து தலைவர்களும் மக்களை கவரும் வகையில் பல விஷயங்களை மேற்கொள்வாரக்ள்.அன்புக்குரியவர்களிடமிருந்து பாராட்டுகள், முன்மொழிவுகள், வெகுமதிகள் அல்லது ஆதரவைப் பெறுவதால் புன்னகைக்கு ஒரு அழகான நாள் இன்று. நடிப்பு, சூரிய ஆற்றல், கலைப்படைப்பு, அழகுசாதனப் பொருட்கள், விவசாயம் மற்றும் சொத்து ஆகியவற்றில் உள்ளவர்கள் இன்று சந்தையில் முதலிடம் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அக்வா மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
பரிகாரம்: கோயிலில் மஞ்சள் பழங்களை தானம் செய்யுங்கள்.
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
குழந்தைகள் தங்கள் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை இன்று அடைவீர்கள். இவர்களின் கல்வித்திறனை அறிந்து பெற்றோர்கள் பெருமைப்படுவார்கள். காதலும், நம்பிக்கையும் இணைந்து தம்பதிகளின் உறவை பலப்படுத்தும். முக்கியமான சந்திப்புகள் மற்றும் நேர்காணலில் ஈடுபடுவீர்கள். அரசியல் வாதிகள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நடிகர்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்டமான நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண் :2 மற்றும் 6
பரிகாரம்: ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யுங்கள்
#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
வாழ்க்கையில் நேர்மையான எண்ணங்களுடன் பயணிப்பதன் மூலம் மகிழ்ச்சியை அடைவீர்கள்.விளையாட்டு வீரர், பங்கு தரகர்கள், விமான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், கல்வியாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ப் பதவி உயர்வு கிடைக்கும். மதிய உணவுக்குப் பிறகு வாடிக்கையாளர்களைச் சந்தித்தால் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு மற்றும் ஊதா
அதிர்ஷ்டமான நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1
பரிகாரம்: ஆசிரமங்களில் பழுப்பு சர்க்கரையை தானம் செய்யுங்கள்
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் சக ஊழியர்கள் அல்லது காதல் துணையின் அபரிமிதமான ஆதரவு அனைத்து சவால்களையும் எதிர்க்கொள்வதற்கு உதவியாக இருக்கும். உங்களின் கடின உழைப்பு வாழ்க்கையில் வெற்றியைக் கிடைக்கச் செய்யும். மார்க்கெட்டிங் உத்திகளை சரியாக கையாண்டால் நல்ல பண வரவு கிடைக்கும்.இளைஞர்கள் காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், நட்பை அல்லது உறவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தயவு செய்து அசைவம் அல்லது மதுவை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 6
பரிகாரம்: தயவு செய்து ஏழைகளுக்கு உடைகள் மற்றும் உப்பு உணவுகளை தானம் செய்யுங்கள்
#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களைச் சுற்றியுள்ள அனைத்து ஆற்றல்களின் ஆசீர்வாதங்களைப் பெறும் நாள் இன்று. உங்களுக்கு சாதகமான நாள் இன்று. வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் மேம்பட்ட தொழில் வளர்ச்சி ஆகிய இரண்டிலும் வெற்றிக் காண்பீர்கள். ஷாப்பிங் செய்யவும்பங்குகளை வாங்கவும், போட்டிகளில் விளையாடவும், போட்டியை எதிர்கொள்ளவற்கான நாள் இன்று. வாழ்க்கையில் சிறந்த நபரை நீங்கள சந்திக்கக்கூடிய சூழல் உண்டாகும். பங்கு அல்லது சொத்தில் முதலீடு செய்வதால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்டமான நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
பரிகாரம்: பச்சை தானியங்களை கால்நடைகள் அல்லது ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
புதிய வீடு, வேலை, புதிய உறவுகள், பண ஆதாயம், ஆடம்பரம், செழிப்பான சூழலை இன்று அடைவீர்கள். அனைத்து இலக்குகளையும் அடைவதற்கு பல்வேறு முயற்சிகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். அரசியல் வாதிகள்,வீடுகள், விளையாட்டு வீரர்கள், தரகர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஓட்டல் வியாபாரிகள் மற்றும் மாணவர்கள் களத்தில் இலக்குகளை எட்டி வெற்றியைத் தக்கவைக்க முயல்வார்கள்.. இல்லத்தரசிகள் மற்றும் ஆசிரியர்கள் உங்கள் குடும்பத்தினரால் மரியாதை மற்றும் பாசத்தை உணருவார்கள்.அரசுப்பணிகள் மற்றும் சொத்து பேரங்கள் எளிதில் கையாளப்படும். எதிர்பார்த்து காத்திருந்த அனைத்தும் இன்று நிறைவேறக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ மற்றும் வெள்ளை
அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் :6 மற்றும் 2
பரிகாரம்: குழந்தைகளுக்கு நீல பென்சில் அல்லது பேனாவை தானமாக வழங்குங்கள்
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
நேர்காணல்களில் கலந்துகொள்வதற்கான வெளிநாட்டு பயணங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் தடைகளைக் குறைப்பதற்கு கேது கிரகத்திற்கான சடங்குகளை செய்யவும். சட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வணிக ஒப்பந்தங்களில் அதிர்ஷ்டத்தை அடைவீர்கள். பார்டனர்களின் அபரிமிதமான நம்பிக்கையால் மன நிறைவை அடைவீர்கள். இன்றைய தினத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெறவும். வழக்கறிஞர்கள் மற்றும் ஐடி தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்திற்கு சென்று வேலைப்பார்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டமான நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7
பரிகாரம்: தாமிர பாத்திரத்தை தானம் செய்யுங்கள்
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
புதன் கிரகத்தின் ஆதரவுடன், நீங்கள் ஒரு ஹீரோ போன்று இக்கட்டான சூழ்நிலைகளில் வெற்றி பெறுவீர்கள். சொத்துக்கள் எதுவாக இருந்தாலும் முடிந்தவரை எதிலாவது முதலீடு செய்யுங்கள். சனிக்கிழமை கடவுளுக்கு பூஜை செய்யவும். கால்நடைகளுக்குத் தேவையான உதவிகளை செய்யவும். காதல் உறவுகள் தம்பதிகளுக்கு இடையே மகிழ்ச்சியாக இருக்க ஒரு சிறப்பு தருணமாக இருக்கும். மருத்துவர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், நாடகக் கலைஞர்கள், மருந்தாளுனர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் வாழ்க்கையில் அதிக பண பலன்களைப் பெறுவார்கள். தேவையில்லாமல் உட்கார்ந்து பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
பரிகாரம்: அனாதை இல்லத்திற்குத் தேவையான பொருள்களைத் தானம் செய்யுங்கள்.
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைக்கு நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்றால், சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற ஆடையை அணியுங்கள். நடிகர்கள், பாடகர்கள், வடிவமைப்பாளர்கள், அரசியல்வாதிகள் அல்லது மருத்துவர்கள், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள் என மக்கள் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு பெயர், புகழ், அதிர்ஷ்டம் மற்றும் சொத்து ஆகியவை சிறந்த நாளாக இன்று அமையும். பங்குகள் மற்றும் நிலங்களில் வணிக முதலீடுகள் செய்ய ஏற்ற நாள்.ஹோட்டல்கள், உறவினர்களின் குடும்ப நிகழ்வில் கலந்துகொள்வது, பார்ட்டி நடத்துவது, விளையாட்டில் ஈடுபடுவது போன்றவை நீங்கள் அனுபவிக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்டமான நாள் :செவ்வாய்
அதிர்ஷ்ட எண் 9 மற்றும் 6
பரிகாரம்: தயவு செய்து ஒரு பெண் குழந்தைக்கு சிவப்பு கைக்குட்டையை தானம் செய்யுங்கள்
மார்ச் 23 அன்று பிறந்த பிரபலங்கள்: கங்கனா ரனாவத், ஸ்மிருதி இரானி, அர்மான் கோலி, கிரண் மசூம்தார் ஷா, விஜய் யேசுதாஸ் மற்றும் ராம் மனோகர் லோஹியா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News