முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மார்ச் 17, 2023) ஏழைகளுக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மார்ச் 17, 2023) ஏழைகளுக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | மார்ச் 17ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் பெயர் மற்றும் புகழ் பெறும் நாள். ஒரு போர் வீரனை போல அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று உங்களுக்கான வலுவான அடையாளத்தை உருவாக்கும் நாள் இன்று. உங்கள் ஆக்கப்பூர்வமான பாணி மற்றவர்களுக்கு உங்கள் மீது பிரகாசமான தோற்றத்தை ஏற்படுத்தும். திருமணமான தம்பதிகளுக்குள் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கிளாமர் துறையில் உள்ளவர்கள் இன்று பெரும் புகழ் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு மற்றும் செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9

தானம்: பிறருக்கு மாதுளை தானம் செய்யுங்கள்

#எண் 2: ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று முழுவதும் உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதை கேட்டு நடங்கள். நீங்கள் கடந்த காலத்தில் செய்த சில சமூக பணிகள் மூலம் இன்று நிறைய ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துகளை பெறுவீர்கள். மிகவும் அப்பாவியாக நீங்கள் இருந்தால் மனதளவில் எளிதில் காயப்படுவீர்கள். பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி வர்த்தக ஒப்பந்தங்களை தயக்கமின்றி மேற்கொள்ளலாம். குருட்டு நம்பிக்கையின் பேரில் இன்று செயல்படுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

தானம்: கோயிலில் வெள்ளி நாணயம் கொடுங்கள்

#எண் 3: (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று புதிய மக்களுடன் தொடர்பு கொள்வதில் நேரத்தை செலவிடுங்கள். உங்களுக்கான சிறந்த நேரம் இன்று என்பதால் பணம் சம்பாதிப்பதற்கான நேரமாகவும் இன்று இருக்கும். உங்கள் திட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்த திட்டமிடுங்கள். அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மிகவும் சிறந்த நாள். ஷாப்பிங் செய்ய, வீடு அல்லது வாகனம், உடைகள் வாங்கவும் இன்று சிறந்த நாள். டிசைனர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஃபின்ஸ்ன்சர்கள், இசைக்கலைஞர்கள் இன்று சிறப்பான சாதனைகளை அனுபவிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வயலட்

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

தானம்: கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்

#எண் 4: ( 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

இன்று உங்கள்து ஆற்றலை பயன்படுத்த ஒரு சிறந்த நாள், வேலைகளை சீராகச் செய்து முடிப்பீர்கள் வியாபார ஒப்பந்தங்களில் சில இன்று முறியலாம். நாடக கலைஞர்கள் அல்லது நடிகர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் இன்று சிறப்பான பலன்களை பெறுவார்கள். உலோக உற்பத்தியாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், விநியோகஸ்தர்கள், உள்கட்டமைப்பு வணிகம், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆடை வணிகர்கள் உள்ளிட்டோருக்கு இன்றைய நாள் பெரிய லாபத்துடன் நிறைவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: பர்பிள்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்

#எண் 5: ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

உங்களுக்கு இருந்து வரும் கடந்த கால பிரச்சனைகள் அனைத்திற்கும் இன்று எளிதில் தீர்வு கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகளை தீர்க்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். பல்துறை நபர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளை இன்று பெறுவீர்கள். அரசியல், கட்டுமானம், நடிப்பு துறை, பங்குச் சந்தை, ஏற்றுமதி துறையில் உள்ளவர்கள் மற்றும் போட்டி தேர்வுகள், நேர்காணல்களில் பங்கு பெறுவோருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

தானம்: ஏழைகளுக்கு பிரவுன் அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 6: (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று உற்பத்தியாளர்கள், விளையாட்டு தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பாடகர்கள், கமிஷன் ஏஜெண்டுகள் மற்றும் நிதி வழங்குபவர்களுக்கு நாள் சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு பரபரப்பான வேலைகள் நிறைந்த நாளாக இருந்தாலும் திட்டமிட்டபடி அனைத்து வேலைகளையும் முடிக்க முடியும். டிசைனர்கள், தரகர்கள், சமையல்காரர்கள், மாணவர்கள் வளர்ச்சியை மேம்படுத்தும் புதிய வாய்ப்புகளை இன்று பெறுவார்கள். காதல் உறவு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: வீட்டில் வேலை பார்க்கும் பெண் உதவியாளருக்கு தேவையான உதவிகளை செய்யவும்

#எண் 7: ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

தவறான புரிதலை தவிர்க்க நெருங்கியவர்களுடன் வெளிப்படையான உறவை பேணுங்கள். வக்கீல்கள், சிஏ, பாதுகாப்பு அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் இன்று சமூகத்தில் உயர் அங்கீகாரத்தைப் பெறுவார்கள். இன்று நீங்கள் திட்டமிட்டப்படி அனைத்தும் சரியாக நடக்கும். உங்கள் முன் வரும் சவால்களை தைரியமாக ஏற்கவும். வழக்கறிஞர்கள், தியேட்டர் கலைஞர்கள், சிஏ, சாப்ட்வேர் நபர்கள் இன்று சிறப்பு அதிர்ஷ்டத்தை எதிர்கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

தானம்: தாமிர உலோகத்தின் சிறிய பீஸ்களை பிறருக்கு தானம் செய்யுங்கள்

#எண் 8: ( 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று உங்களது உடல்நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு கீழ் செய்பவர்களிடம் கோபத்தை காட்டினால் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், எனவே பொறுமை காக்கவும். இன்று அதிகாரம் மற்றும் செல்வம் என இரண்டையும் தவறாமல் அனுபவிப்பீர்கள். குறிப்பாக இன்று நிதி நன்மைகள் அதிகமாக இருக்கும். சொத்து தொடர்பான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். உற்பத்தியாளர்கள், ஐடி ஊழியர்கள், அரசு அதிகாரிகள், தரகர்கள் மற்றும் நகை வியாபாரிகள், மருத்துவர்கள் மற்றும் பொது பேச்சாளர்கள் இன்று புதிய சாதனைகள் படைப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: டீப் பர்பிள்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: ஏழைகளுக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்

#எண் 9: ( 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று நீண்ட தொலைவு வாகனம் ஓட்டுவதையும், வெளியில் சாப்பிடுவதையும் தவிர்க்கவும். காதலிப்பவர்கள் தங்கள் பெற்றோரை சமாதானப்படுத்த இன்று ஒரு அருமையான நாள்.வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் இன்று சிறப்பான உயரத்தை. கவர்ச்சி தொழில் மற்றும் ஊடகங்களில் உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள். பயிற்சியாளர்கள், பேக்கர்ஸ், ஹோட்டல் நடத்தவோர், பங்கு தரகர்கள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் நடிகர்கள் சிறந்த பலன்களை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: உங்களது உதவி தேவைப்படும் நபர்களுக்கு எந்த வகையிலாவது உதவுங்கள்

மார்ச் 17-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: கல்பனா சாவ்லா, புனித் ராஜ்குமார், ஸ்வேதா பச்சன் நந்தா, சாய்னா நேவால், பங்காரு லக்ஷ்மன், ராகுல் ராஜ்

First published:

Tags: Numerology, Tamil News