முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பரிந்துரைகள் : எண் 5 மற்றும் எண் 6 இல் பிறந்தவர்கள் எண் 8 இல் பிறந்தவர்களுடன் எவ்வளவு இணக்கமாக இருப்பார்கள்.!

எண் கணித பரிந்துரைகள் : எண் 5 மற்றும் எண் 6 இல் பிறந்தவர்கள் எண் 8 இல் பிறந்தவர்களுடன் எவ்வளவு இணக்கமாக இருப்பார்கள்.!

எண் கணித பரிந்துரைகள்

எண் கணித பரிந்துரைகள்

Numerology | எண் 5 மற்றும் எண் 6 இல் பிறந்தவர்கள் எண் 8 இல் பிறந்தவர்களுடன் எவ்வளவு இணக்கமாக உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்வோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

எண் 5: பொதுவாக, 8 ஆம் தேதி, 17 ஆம் தேதி, 26 ஆம் தேதியில் பிறந்த அனைவருக்கும் எண் 5 ஆனது மிகவும் முக்கியமான ஒரு எண்ணாக கருதப்படுகிறது. 5 என்பது ஒரு லக்கியான நம்பர் என்றும் கூட சொல்லலாம். 8 என்பது முயற்சிகளுக்கான (கடின உழைப்பு) எண் ஆகும். எனவே, 5 உடன் 8 சேரும் போது, எண் 8 இன் காரணமாக ஒருவர் மேற்கொள்ளக் கூடிய கடின உழைப்பை அது குறைக்கிறது. அதற்குப் பதிலாக, எண் 8 ஆனது சமநிலை மற்றும் உண்மைத் தன்மையை (நேர்மை) 5 இல் புகுத்துகிறது. இரண்டு எண்களும் உடையவர்கள் ஒன்றாக இணையும் பட்சத்தில், அது அவர்களின் வாழ்க்கையை அழகுபடுத்துகிறது. இது மிகவும் அற்புதமான ஜோடிகளை உருவாக்குகிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது. எண் 5 மற்றும் எண் 8 உடையவர்கள் ஒன்றாக இணைந்து வாழும் போது அவர்கள் நன்கு ஒருங்கிணைந்து, ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைத்து விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் அனைத்தையும் தொடர்பு கொள்வார்கள். ஒருவரின் வரவு இன்னொருவரின் வாழ்க்கையை பூரித்தி செய்யும் விதமாக அமையும். இதுவே அவர்கள் பிசினஸ் பார்ட்னர்களாக இருந்தால், கண்டிப்பாக வெற்றியின் உச்சத்தை எட்டலாம். அவர்களின் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அனுகூலமான நிறம்: நீல-பச்சை

அனுகூலமான நாள்: புதன் கிழமை

அனுகூலமான எண்: 5

நன்கொடை அல்லது பரிகாரம்: உங்கள் வீட்டின் அருகில் உள்ள பூனை அல்லது வறுமையில் வாடும் ஏழைகளுக்கு தயவு செய்து பச்சை காய்கறிகளை தானமாகக் கொடுங்கள்.

எண் 6: சனி பகவானுக்கு சொந்தமான 6 மற்றும் 8 இல் சுக்கிரன், ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக வாழ வழிவகை செய்யும். ஒருவரின் வாழக்கைக்கு இன்னொருவர் பூர்த்தி செய்யும் விதமாக இருவரும் நீண்ட ஆயுளுடன் விசுவாசம் மிக்க நண்பர்களாக பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்வார்கள். 6 மற்றும் 8 எண் இல் பிறந்த தம்பதிகள் ஒன்றாக வாழ்ந்தால், அவர்கள் சிறந்த மற்றும் வளமான வாழ்க்கையை வாழ்வார்கள். இதில் ஆண் 8 ஆம் எண்ணிலும் பெண் 6 ஆம் எண்ணிலும் பிறந்து இருந்தால், அவர்கள் நல்ல வருமானம் பெற்று குடும்பத்தில் அன்பு பெருகி மிகவும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள். அரசியல்வாதிகள், மருத்துவர்கள், ஒப்பனை கலைஞர்கள், செய்தி தொகுப்பாளர்கள், உணவு வணிகர்கள் மற்றும் ரேடியோ அல்லது வீடியோ ஜாக்கிகள் 6 மற்றும் 8 கள் கொண்டு இருந்தால், அவர்கள் மாபெரும் வளர்ச்சி அடித்து தங்கள் வெற்றியை கொண்டாடி மகிழலாம். இந்த காம்பினேஷன் கொண்ட மாணவர்கள் லெதர் பெல்ட் உடைய வாட்ச் அணிவதற்குப் பதிலாக மெட்டாலிக் வாட்ச் அணிந்து கொள்வது நல்லது.

அனுகூலமான நிறம்: நீலம்

அனுகூலமான நாள்: வெள்ளிக் கிழமை

அனுகூலமான எண்: 6

top videos

    நன்கொடை அல்லது பரிகாரம்: உங்கள் வீட்டில் வேலைப் பார்ப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு பாத்திரத்தை தானமாக வழங்குங்கள்.

    First published:

    Tags: Numerology, Tamil News