அறிவியலில் பெயர்கள் மற்றும் வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களின் நியூமரிக்கல் வேல்யூ பற்றிய ஆய்வும் அடங்கும். நியூமராலஜி என்பது ஒரு பாரம்பரிய அறிவியலாகும். நியூமராலஜி அதாவது எண் கணிதம் என்பது ஒரு எண்ணுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு அல்லது உறவின் நம்பிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
நியூமராலஜியானது பல மக்களுக்கு பதவி உயர்வு, தொழிலில் வெற்றி, இனிமையான காதல் வாழ்க்கை என பல நன்மைகளை வழங்கியுள்ளது. வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட 1- 9 நம்பர்களை அடிப்படையாக கொண்டது எண் கணிதம். வெவ்வேறு எண்களை கொண்ட இரு நபர்களுக்கு இடையிலான உறவில் பொருந்த கூடிய தன்மையை கணக்கிடவும் எண் கணிதம் உதவுகிறது. எண்களின் அடிப்படையில் காதல் அல்லது உறவு இணக்கத்தன்மை கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் நம்பர் 8-க்கு நம்பர்கள் 1 மற்றும் 2 எவ்வளவு இணக்கமானவை என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
நம்பர் 1-உடன் நம்பர் 8 எவ்வளவு இணக்கமானது..?
கணக்கீடுகளின் படி சூரியன் மற்றும் சனி கிரகங்கள் முதல் ஒன்றுக்கொன்று எதிராக நிற்பதாக வெளிப்படையாக அறியப்படுகிறது. நியூமராலஜியில் சூரியன் மற்றும் சனி கிரகங்கள் முறையே எண் 1 மற்றும் எண் 8 என குறிப்பிடப்படுகின்றன. எனவே ஒரு சாதாரண மனிதன் கூட வணிக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த நம்பர்களை நியூமராலஜியாக கொண்ட பார்ட்னர்கள் எப்படி ஒத்து போவார்கள் என்பதை யூகிக்க முடியும். நம்பர் 1-ஐ நியூமராலஜியாக கொண்டவர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கும் அதே நேரம், 8-ஐ நியூமராலஜியாக கொண்டவர்கள் தீர்ப்பு வழங்கும் அளவுக்கு இருப்பார்கள்.
இந்தவகையில் இவர்கள் இருவருமே முற்றிலும் வலிமையானவர்கள் மற்றும் தாங்கள் இருக்கும் இடத்தில தலைவர்களாக மாற முயற்சி செய்வார்கள். எனவே இந்த 2 எண்களை நியூமராலாஜியாக கொண்டவர்கள் தம்பதிகளாக இருக்கும்பட்சத்தில் அவர்களிடையே சிக்கல்கள், அவநம்பிக்கை ஏற்படும். எனினும் இந்த 2 நம்பர்களிடையே உணவு மற்றும் நில வணிகம் வெற்றிகரமாக இருக்கும் என்றாலும் மற்ற வகை வணிகங்களில் கூட்டு சேர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நிதி தொழில், சூரியசக்தி பொருட்கள் உற்பத்தி, வைரம், ரத்தினங்கள், மென்பொருள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறையில் ஈடுபட்டால்எ அது நியாயமான அளவில் வெற்றியடையும்.
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள் மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் : ஞாயிறு மற்றும் சனி
அதிர்ஷ்ட எண் : 5
நம்பர் 2-உடன் நம்பர் 8 எவ்வளவு இணக்கமானது..?
பொதுவாக 2-ஐ நியூமராலஜியாக கொண்டவர்கள் 8-ஐ நியூமராலஜியாக கொண்ட நபர்களை மிகவும் சீராக மற்றும் திறமையாக நிர்வகிக்க முடியும். இந்த 2 எண்களை நியூமராலஜியாக கொண்டவர்கள் சிவபெருமானின் உண்மையான பக்தர்களாக இருப்பர். இது அவர்களுக்கு சரியான கர்மாக்கள் மற்றும் விசுவாசத்தின் மீது சிறந்த நம்பிக்கையை அளிக்கிறது. நம்பர் 2 சிவபெருமானின் தலையில் எப்போதும் இருக்கும் சந்திரனை குறிக்கிறது. நம்பர் 8 சனி கிரகத்தை குறிக்கிறது.
எனவே நம்பர் 2 மற்றும் 8-ஐ நிமராலஜியாக கொண்ட நபர்கள் வணிகத்தில் கூட்டு சேர்வது நம்பகத்தன்மையாக இருக்கும் மற்றும் கடின உழைப்பையும் கொண்டிருக்கும். மேலும் இவர்கள் எல்லையற்ற திறமை மற்றும் அனைவர் மீதும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் நல்ல உள்ளுணர்வுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இரு நம்பர்களையும் நியூமராலஜியாக கொண்டவர்கள் வெற்றிக்காக கடின உழைப்பை மேற்கொள்பவர்களாக இருப்பார்கள். இருவரும் பார்ட்னராக இருக்கும் இடத்தில் பரஸ்பரம் கண்மூடித்தனமான நம்பிக்கையை கொண்டிருப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம்
அதிர்ஷ்டமான நாள்: வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடை: ஏழைகளுக்கு பால் மற்றும் ஆடைகளை தானம் செய்யுங்கள்
அசைவம், மதுபானம், புகையிலை, விலங்குகளின் தோல் மற்றும் லெதர் பொருட்களை தவிர்க்கவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News