முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண்கணித பரிந்துரைகள் : எண் 6 என்பது எண் 3 மற்றும் 4 ஆகியவற்றுடன் எந்த வகையில் ஒத்துப்போகும்.!

எண்கணித பரிந்துரைகள் : எண் 6 என்பது எண் 3 மற்றும் 4 ஆகியவற்றுடன் எந்த வகையில் ஒத்துப்போகும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | எண் 6 என்பது எண் 3 மற்றும் எண் 4 ஆகியவற்றுடன் தொடர்பில் வரும்போது எத்தகைய பலன் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

    எண்களுக்கு இடையிலான தொடர்புகளின் அடிப்படையில் உங்களுக்கான பலன்களை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்க இருக்கின்ற எண் 6 ஆகும். இந்த எண் 6 என்பது எண் 3 மற்றும் 4 ஆகியவற்றுடன் எந்த வகையில் ஒத்துப்போகும்?

    நம்பர் 3 : எண் 3 மற்றும் எண் 6 ஆகிய இரண்டுமே புத்தாக்கத்திற்கு அடையாளமான எண்கள் ஆகும். அதாவது எண் 3 இரண்டாம் புத்தாக்க எண் என்றும், எண் 6 மூன்றாம் புத்தாக்க எண் என்றும் அறியப்படுகிறது. ஆக, கலை அல்லது வேறு ஏதேனும் புத்தாக்க தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்கள் இந்த கூட்டு எண்களை கொண்டிருந்தால் இந்த உலகையே ஆளுவார்கள்.

    எண் 3 மற்றும் எண் 6 ஆகியவற்றுடன் தொடர்புடைய தனிநபர் வாழ்க்கையை பொருத்தவரையில் திருமண வாழ்க்கை சுமாரானதாக அமையும். ஏனெனில் தனி வாழ்க்கையில் எண் 3 என்பது எண் 6 உடன் ஒத்துப் போவதில்லை. எண் 3 உடன் எண் 6க்கு சமரசமான உறவுநிலை உண்டு என்றாலும் கூட, தனி வாழ்க்கையில் அவை இரண்டும் ஒன்றிணைந்து வேலை செய்யாது.

    தொழில்முறை வாழ்க்கையில் மட்டுமே இந்த இரண்டு எண்களும் எந்தவித சிக்கலும் இல்லாமல் இணைந்து பணியாற்றும்.

    இந்த இரண்டு எண்களின் தொடர்பு கொண்டவர்கள் எப்போதுமே பெரும் திரளான கூட்டத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். சமூகம் சார்ந்து செயலாற்றக் கூடியவர்கள் என்பதால் அரசுத் துறைகளில் இடம்பெற்றிருப்பார்கள்.

    பாடகர், விஞ்ஞானிகள், டிசைனர்கள், எழுத்தாளர்கள், தடகள வீரர்கள், பொது மேடை பேச்சாளர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் போன்றவர்கள் இந்த எண்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிறப்பு தேதியில் கொண்டிருப்பின் அவர்கள் வெற்றியாளர்களாக உருவெடுப்பார்கள்.

    அதிர்ஷ்ட நிறம் - பிங்க் மற்றும் வயலெட்

    அதிர்ஷ்ட எண் - 9

    அதிர்ஷ்ட நாள் - வெள்ளிக்கிழமை

    தானம்: நாராயணன் மற்றும் லெட்சுமி தெய்வங்களுக்கு சோறு படைக்கவும்.

    எண் 4: ராகுவுடன் தொடர்புடைய எண் 4க்கு உகந்த எண்ணாக எண் 6 இருக்கிறது. எண் 6 கொண்டிருந்தால் உங்களுக்கு ராகு கிரகத்தின் அனைத்து பலன்களும் கிடைக்கும். கடின உழைப்புக்கான தேவையை குறைத்து, நற்பலனை தரும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். எண் 4 அல்லது எண் 6 ஆகியவற்றை பிறப்பு தேதியில் கொண்டிருப்பவர்கள் அரசியலில் சிறப்பாக செயலாற்றுவார்கள்.

    எண் 4 மற்றும் எண் 6 கொண்டிருக்கும் தம்பதியர்கள் மிக அழகான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வார்கள். வீட்டுப் பணிகள், சமூக கடைமைகளில் எந்தவித தாமதமும் இருக்காது. பிறருடைய ஆசிர்வாதம் மற்றும் நம்பிக்கையை பெருவார்கள்.

    அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் வெள்ளை

    அதிர்ஷ்ட நாள் - வெள்ளிக்கிழமை

    அதிர்ஷ்ட எண் - 6

    தானம் - பணியாளர்களுக்கு வீட்டு பயன்பாட்டு பொருட்களை வழங்கவும்.

    First published:

    Tags: Numerology, Tamil News