அறிவியலில் பெயர்கள் மற்றும் வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களின் நியூமரிக்கல் வேல்யூ பற்றிய ஆய்வும் அடங்கும். நியூமராலஜி என்பது ஒரு பாரம்பரிய அறிவியலாகும். நியூமராலஜி அதாவது எண்கணிதம் என்பது ஒரு எண்ணுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு அல்லது உறவின் நம்பிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
நியூமராலஜியானது பல மக்களுக்கு பதவி உயர்வு, தொழிலில் வெற்றி, இனிமையான காதல் வாழ்க்கை என பல நன்மைகளை வழங்கியுள்ளது. வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட 1- 9 நம்பர்களை அடிப்படையாக கொண்டது எண்கணிதம். வெவ்வேறு எண்களை கொண்ட இரு நபர்களுக்கு இடையிலான உறவில் பொருந்த கூடிய தன்மையை கணக்கிடவும் எண்கணிதம் உதவுகிறது. எண்களின் அடிப்படையில் காதல் அல்லது உறவு இணக்கத்தன்மை கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் நம்பர் 6-க்கு நம்பர்கள் 1 மற்றும் 2 எவ்வளவு இணக்கமானவை என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
நம்பர் 1: சூரிய பகவானுக்கு சொந்தமானது எண் 1. இது வெள்ளி கிரகத்திற்கு சொந்தமான நம்பர் 6-க்கு முற்றிலும் எதிரான தன்மை கொண்டது. பிசினஸ் பார்ட்னர்ஷிப் மற்றும் திருமணம் உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் இருந்து இந்த 2 நம்பர்களும் ஒதுங்கி இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த 2 நம்பர்களும் எதிராக உள்ளதற்கு மிகப்பெரிய காரணம் இவர்களின் உணர்ச்சிகளின் அளவு. வீடு, குடும்பம், மக்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் மீது அன்பாக இருப்பது நம்பர் 6 ஆகும். ஆனால் எண் 1 என்பது ஆதிக்கம் செலுத்தும் நம்பர் மட்டுமல்லாமல் சற்று சுயநலம் வாய்ந்தது.
நம்பர் 1-ஐ நியூமராலஜியாக கொண்டவர்கள் தனித்து வேலை செய்வர் ஆனால் நம்பர் 6-ஐ கொண்டவர்கள் மற்றவர்களை சார்ந்து இருப்பதையும் அல்லது ஆதரவையும் எதிர்பார்க்கிறார்கள். அதேசமயம் நம்பர் 6 அனைத்திற்கும் தயாராக உள்ளது மற்றும் தேவைகளுக்கு பிறருடன் இணைந்து செயல்படுவார்கள். ஆனால் நம்பர் 1 வலுவான ஆளுமையை கொண்டவர்கள் என்பதால் இருவரும் ஒரே விஷயத்தில் சேர்ந்து இருப்பது சச்சரவுகளுக்கு வழிவகுக்கும். ஒருவேளை இந்த 2 நம்பர்களை நியூமராலஜியாக கொண்டவர்கள் ஒரே விஷயத்தில் சேர்ந்து செல்லப்பட வேண்டியதிருந்தால் சச்சரவுகளைத் தீர்ப்பதில் சிறந்தவர்களாக இருக்கும் நமபர் 2-ஐ நியூமராலஜியாக கொண்டவர்களின் உதவியை நாடலாம்.
அதிர்ஷ்ட நிறம் - பீஜ்
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 5
தானம்: குழந்தைகளுக்கு குங்குமப்பூ பால் தானம் செய்யுங்கள்
நம்பர் 2: நம்பர் 2 என்பது நம்பர் 6 உடன் நன்கு பரிச்சயமானதாக இருப்பதோடு நம்பர் 6 உடன் நடுநிலை உறவை பேண கூடியது. மறுபுறம் நம்பர் 6 அதன் பேனலில் 2-ஐ வைப்பதை கடினமாக காண்கிறது. ஏனென்றால், இவர்கள் வாழ்வதற்கு ஒரே பேட்ட்டர்னை பின்பற்றுகிறார்கள், ஆனால் வெவ்வேறு தத்துவங்களுடன். இவர்களுக்குள் அடிக்கடி விவாதங்கள் நடந்தாலும் எளிதில் சமாதானமாகிவிடுவார்கள். இவர்கள் இருவரும் உறுதியான மற்றும் உணர்ச்சிவசமிக்கவர்கள், இவர்கள் திருமணம் அல்லது காதல் உறவுகளில் தூய்மையான மற்றும் விசுவாசமான பார்ட்னராக ஒருவருக்கொருவர் இருப்பார்கள்.
இந்த காம்பினேஷனுடன் கூடிய பெண் அதிர்ஷ்டசாலி மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவான பெண் என்பதை நிரூபிக்கிறார். படைப்பாற்றல் தொடர்பான தொழில், திரவங்கள் அரசாங்க உத்தரவுகள் வடிவமைத்தல், நகைகள், வைரம் போன்ற ரத்தினங்கள், அழகு சாதனப் பொருட்கள், அலங்காரங்கள், சுற்றுலா மற்றும் பயணங்கள், ஏற்றுமதி இறக்குமதி மற்றும் தானியங்கள் என அனைத்தும் இவர்களால் வெற்றிகரமாக இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு நம்பர்களும் மற்றவர்களின் ஆதரவைக் கோருவது மற்றும் சுயாதீனமாக வேலை செய்வதை கட்டுப்படுத்துவது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் வெள்ளை
அதிர்ஷ்ட தினம் - திங்கள் மற்றும் வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6
தானம்: கிருஷ்ணர் மற்றும் ராதா தேவிக்கு கல்கண்டு வைத்து வழிபடவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News