முகப்பு /செய்தி /ஆன்மிகம் / உங்கள் பிறந்த தேதி சொல்லும் மே மாத பலன்கள்.. எண் கணித கணிப்பு இதோ!

உங்கள் பிறந்த தேதி சொல்லும் மே மாத பலன்கள்.. எண் கணித கணிப்பு இதோ!

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

May Month Numerology Benefits | மே மாதம் பிறந்த தேதிகளின் எண்ணிக்கையில் எண் கணித பலன்களைப் பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மே மாதம் ஆண்டின் 5 வது மாதமாகும். இந்த மாதம் பலருக்கும் ஒரு சாகசமான மாதமாக இருக்கும். உங்களுக்குத் தேவைப்படும் மாற்றங்களைச் செய்ய போதிய தைரியம் இருக்க வேண்டும். இந்த மாதம் பிறந்த தேதிகளின் எண்ணிக்கையில் எண் கணித பலன்களைப் பார்க்கலாம்.

எண் 1: (1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

வலியை, பிரச்சனைகளை ஏற்படுத்திய சூழல்கள், காரணங்கள் ஆகியவை முடிவுக்கு வரும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும். காதலை தெரிவிக்க, மற்றும் காதல் உணர்வுகளை பரிமாறிக்கொள்வது உங்கள் காதலை, உறவை வலுப்படுத்தும். நிலம் சார்ந்த வணிகத்தில் பார்ட்னர்ஷிப்பில் சேர இது இது சிறந்த காலமாகும். முதலீடு செய்யலாம், புதிய வேலைக்கு விண்ணப்பிக்கலாம், மற்றும் அரசியல் பயணத்தைத் தொடங்கலாம். ஆனால் சட்ட ரீதியான செயல்களில் ஈடுபடக் கூடாது. மதுபானத்தை தவிர்க்க வேண்டும். திருமணமான தம்பதிகள் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய் மற்றும் ஞாயிறு

அதிர்ஷ்ட எண்:  1 மற்றும் 9

தானம்: கோவிலில் மஞ்சள், கடுக்காய் தானம் செய்யுங்கள்

எண் 2: (2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

அப்புறமாக பார்த்துக்கொள்ளலாம் என்ற சோம்பல் மனப்பான்மை எதிர்காலத்தில் உங்கள் பிரச்சனையாக மாறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடுத்த அடுத்த மாதத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ள இது சரியான நேரம் என்பதால் இப்போதே சிறந்த முயற்சிகளை தொடங்குங்கள். அரசு வேலைகள் மற்றும் ஐடி துறையில் வளர்ச்சி பெற நீங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். பால், தண்ணீர், ரசாயனம், பெயிண்ட், மருந்துகள், உணவுத் தொழில் போன்ற துறைகளில் லாபம் கிடைக்கும். திங்கட்கிழமையன்று சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, விநாயகப் பெருமானின் மந்திரத்தை மாதந்தோறும் உச்சரிக்கவும்

மற்றவர்களின் விமர்சனங்கள் வெறும் போலி என்று நீங்கள் புறக்கணிக்க வேண்டும். நீங்கள் இயற்கையான உள்ளுணர்வால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள், எனவே எப்போதும் உள்ளுணர்வு சொல்வதை தவிர்க்கக் கூடாது.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2

தானம்: பிச்சைக்காரர்களுக்கு தயிர் தானம் செய்யுங்கள்

எண் 3 (3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவுகள் நம்பிக்கையின் அடிப்படையில் வலுவாகும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய மாதமிது. அறிவை வளர்க்க, புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள, பயணிக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் திருமணம் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் தொழில் வாய்ப்புகளை ஆராய வேண்டும். குறிப்பாக பாடகர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்களாக இருந்தால், உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள். ஆடைகள், நகைகள், புத்தகங்கள், அலங்காரம், தானியங்கள் அல்லது பயண செல்வதற்கான சிறந்த காலம். வடிவமைப்பாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், அறிவிப்பாளர்கள், வாழ்க்கை மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் நிதியளிப்பவர்கள், இசைக்கலைஞர்கள் இன்று சிறப்பான சாதனைகளை செய்வார்கள். தினசரி ஓரிரு துளசி இலைகளை சாப்பிட்டு உங்கள் நாளைத் தொடங்குங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு மற்றும் பீச்

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7

தானம்: ஆசிரமங்களில் ஒரு மரப் பொருளை தானம் செய்யுங்கள்

எண் 4 ( 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

மாதத்தின் முதல் பாதியானது வணிக ரீதியான சந்திப்பு அல்லது குடும்பத்துடன் விடுமுறைக்கு செல்ல திட்டமிடும் சரியான நேரமாகும். எனவே நேர்மறையாக வேலை செய்யுங்கள்.

மருத்துவத் துறை, சட்டம், தணிக்கை, பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு இது சாதகமான நேரம். வணிக ஒப்பந்தங்கள் அல்லது அரசாங்க உத்தரவுகள் நிலுவையில் இருக்கும். பங்குகள் தொடர்பான முக்கிய முடிவு தாமதமாகிறது, பொறுமை காக்கவும். விற்பனை ஊழியர்கள், ஐடி ஊழியர்கள், நாடக கலைஞர்கள் அல்லது நடிகர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மற்றும் நடன கலைஞர்கள் போட்டித்தன்மையுடன் செயல்பட வேண்டும். வீட்டின் மையத்தில் மின்சாரப் பொருட்களை வைப்பதைத் தவிர்க்கவும், வீடு அல்லது அலுவலகத்தைத் துடைத்து சுத்தம் செய்யும் போது உப்பு சேர்க்கவும்.

அதிர்ச்தமான நிறங்கள்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் மற்றும் வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: பூனைகள் அல்லது ஏழைகளுக்கு உப்பு உணவை தானம் செய்யுங்கள்

எண் 5 ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

கடவுள் மற்றும் இறை தூதர்களின் ஆசீர்வாதத்தால் விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கிடைக்கும் ஒரு சிறப்பான மாதம் ஆகும். உங்களுக்கும், முதலாளி மற்றும் உங்கள் குழுவில் பணியாற்றும் சக ஊழியர்களுக்கும் இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பு ஏற்படும்; இது எல்லா சூழ்நிலைகளிலும் வெற்றி பெற உதவும். விநாயகப் பெருமானை வழிபாட்டு, அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். நீண்ட காலப் பிரச்சினைகளைத் தீர்க்க மனைவி மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். லாபம் அதிகரிக்கும், வணிகம் நல்ல வளர்ச்சி காணும். சொத்து மற்றும் பங்கு முதலீட்டிலிருந்து வருமானம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, அரசியல், நகை முதலீடு, விளையாட்டு, நிகழ்வுகள், போட்டி ஆகியவற்றில் உங்கள் அதிர்ஷ்டத்தைப் பற்றிக் கொள்ளவும். 2023 மே மாதத்தில் நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் உங்கள் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் நிதி ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் உங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: டீல்

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

தானம்: விலங்குகள் அல்லது அனாதை இல்லங்களுக்கு பச்சை பழங்களை தானம் செய்யுங்கள்

எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

பகவான் கிருஷ்ணரையும், ராதா தேவியையும் தரிசித்து அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள், இது இந்த மாதம் ஏற்படக்கூடிய தடைகளை தகர்க்கும். நீங்கள் கொண்டாட்டம், பார்ட்டி, ஷாப்பிங், கிளப்பிங் மற்றும் பயணம் செல்வதற்கு ஏற்ற காலம். பணம் மற்றும் மரியாதை, இரண்டும் சமூகத்தில் இருக்கும் உங்களுடைய அழகிய பிம்பத்தால் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பணியிடத்தில் கொஞ்சம் விலகியே இருப்பீர்கள். இல்லத்தரசிகள், விளையாட்டு வீரர், சொத்து விற்பனையாளர்கள், சரும மருத்துவர்கள், பாடகர்கள், டிசைனர்கள், தரகர்கள், சமையல்காரர்கள், மாணவர்கள் வளர்ச்சியை மேம்படுத்தும் புதிய பாராட்டுகளைப் பெறுவார்கள். காதல் உறவும் கொஞ்சம் கசந்து போகலாம்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வயலட்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: ஆசிரமங்களில் சர்க்கரை தானம் செய்யுங்கள்

எண் 7 ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

நீங்கள் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு சாம்பியனாக இருக்கிறீர்கள். எனவே இந்த மாதம் தொழில்நுட்ப வல்லுநர்கள், பெண் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடக தொழில்முனைவோருக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது.

பெற்றோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்று, எதிர் பாலினத்தவரின் கருத்தைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும், அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் மனைவியுடன் உங்கள் திட்டத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள், நீங்கள் நல்ல தீர்வுகளைப் பெறுவீர்கள். யாரோ ஒருவர் உங்களை மட்டம் தட்ட வாய்ப்புள்ளது ஆனால் அது நிறைவேறாது. நகைக்கடையில் இருப்பவர்கள், வழக்கறிஞர்கள், கூரியர், விமானிகள், அரசியல்வாதிகள், நாடக கலைஞர்கள், சி.ஏ., சாப்ட்வேர் தோழர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்டம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு மற்றும் டீல்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 3

தானம்: ஆசிரமங்களில் பெருஞ்சீரகம் விதைகளை தானம் செய்யுங்கள்

எண் 8 ( 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

உங்கள் அன்பான அணுகுமுறையை பலரும் பயன்படுத்திக் கொள்வார்கள், எனவே இந்த மாதம் நன்றாக ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. மென்பொருள் பொறியாளர்கள், விளையாட்டு வீரர்கள், இளம் அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், ஒப்பனை கலைஞர்கள், கலைஞர்கள்,வெளிநாட்டு மற்றும் பயிற்சி வணிகம் ஆகியோருக்கு நல்ல வளர்ச்சி காணும் மாதம். குடும்பத்தில் உள்ள பெண்கள் அறியாமை மற்றும் கோபத்தைத் தவிர்க்க வேண்டும். தம்பதிகள் மகிழ்ச்சியாகவும், ரொமாண்டிக்காகவும் இருப்பார்கள். காதலிப்பவர்கள் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புகளைச் செய்வதற்கான அருமையான மாதம். வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் நிறைவேறும். மாணவர்கள், பயிற்சியாளர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு பொற்காலம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: தயவு செய்து ஒரு பிச்சைக்காரனுக்கு குடை தானம் செய்யுங்கள்

எண் 9: (9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

பாடகர்கள், இசைக்கலைஞர்கள், விஞ்ஞானி, அரசியல்வாதிகள், பயிற்சியாளர்கள், ஊடகங்கள், வழக்கறிஞர்கள், CAக்கள் மற்றும் ஆசிரியர்கள் உயர் பதவி வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஏற்கனவே இருக்கும் வேளையில் உயர்ந்த ஊதியம் கிடைக்கும் சிறந்த மாதம் இது. வெகுஜன ஊடகம் மற்றும் அரசியலில் புதிய வாய்ப்புகளை அனுபவிப்பதால், வார்த்தைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருங்கள். ம் வீட்டு செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும், இதன் மூலம் நீங்கள் எதிர்காலத்திற்காக நிறைய சேமிக்க முடியும். திருமணமான தம்பதிகள் தங்களுக்கு இடையே உருவாகும் பிரச்சினைகளை தீர்க்க, அதிக நேரம் செலவிட வேண்டும். ஐடி ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்கள் பெயரையும் புகழையும் பெறுவார்கள். விளையாட்டு வீரர் வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்காக இன்னும் காத்திருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

top videos

    தானம்: கால்நடைகள் அல்லது ஏழைகளுக்கு தர்பூசணி தானம் செய்யுங்கள்

    First published:

    Tags: Life18, Numerology, Tamil News