நிர்ஜலா ஏகாதசி விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான நாள். ஜ்யேஷ்ட மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் 11 வது நாளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, மே 31, 2023 அன்று நிர்ஜலா ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் விரதம் அனுஷ்டித்து, பிரார்த்தனை செய்து, விஷ்ணுவிடம் ஆசி பெறுவார்கள். இந்த விரதம் மே 31 ஆம் தேதி சூரிய உதயத்தில் தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி மதியம் 01:40 மணிக்கு துவாதசி திதியில் முடிவடைகிறது. இந்த நாள் உயர் மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது இந்துக்களால் கடைபிடிக்கப்படும் புனிதமான விரதங்களில் ஒன்றாகும்.
ஒரு ஆண்டுக்கு மொத்தம் 24 ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் நிர்ஜலா ஏகாதசி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நிர்ஜலா ஏகாதசி அன்று தண்ணீர் இல்லாமல் விரதம் இருப்பது விரும்பிய பலன்களையும் முக்தியையும் தரும் என்பது ஐதீகம். இந்த விரதத்தை மகாபாரத வீரனான பீமனும் கடுமையாக கடைபிடித்ததாக கூறப்படுகிறது. நீங்கள் நினைக்கலாம், 10,000 யானைகளின் பலம் கொண்ட பீமன் விரதம் இருந்தாரா என. இதற்கான உண்மையான காரணத்தை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
புராணங்களின் படி, மகாபாரதத்தின் வலிமைமிக்க வீரரான பீமனும் இந்த விரதத்தை கடைபிடித்தார் என கூறப்படுகிறது. உண்மையில், 10,000 யானைகளின் பலம் கொண்ட பீமனால் பசியை தாங்க முடியவில்லை. ஆனால், நோன்பு முக்திக்கு வழிவகுக்கும் என்பது பீமனுக்கு நன்றாக தெரியும். ஆனாலும், பீமனால் அப்படிப்பட்ட விரதத்தைக் கடைப்பிடிக்க முடியவில்லை.
பகவான் கிருஷ்ணரின் உத்தரவின் பேரில், பீமன் தனித்துவமான நிர்ஜல ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தார். பசி தாங்க முடியாமல் மாலையில் மயங்கி விழுந்தார். இந்த ஏகாதசியில் பீமன் விரதம் இருந்ததால் இதற்கு பீமசேனி ஏகாதசி என்றும் பெயர் வந்தது. இந்த நாளில் தண்ணீர் இல்லாமல் விரதம் இருப்பது வருடத்தின் அனைத்து ஏகாதங்களின் புண்ணிய பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது.
நிர்ஜலா ஏகாதசியின் முக்கியத்துவம் என்ன?
நிர்ஜல ஏகாதசியில் விரதம் இருப்பதன் மூலம் தர்மம், அர்த்த, காமம், மோட்சம் ஆகிய நான்கு புருஷார்த்தங்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்த நாளில் விரதம் இருப்பது நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தருகிறது. இந்நாளில் விரதம் இருப்பதால், பாவங்கள் அழிந்து மனம் தூய்மை அடையும். இந்த ஏகாதசி தியாகம் மற்றும் தவம் செய்வதற்கு சிறந்த ஏகாதசியாக கருதப்படுகிறது.
Also Read | வீட்டில் பறவை கூடு கட்டினால் நல்லதா..? கெட்டதா..? - ஜோதிடம் கூறும் உண்மை இங்கே!
நிர்ஜலா ஏகாதசிக்கான நல்ல நேரம் :
ஜ்யேஷ்ட சுக்ல ஏகாதசி திதி மே 30 அன்று மதியம் 01:07 மணிக்கு தொடங்கி மே 31 அன்று மதியம் 01:45 மணிக்கு முடிவடைகிறது. இந்த திதியை முன்னிட்டு, இந்த நிர்ஜல ஏகாதசி விரதம் மே 31 அன்று அனுசரிக்கப்படுகிறது. நிர்ஜலா ஏகாதசி ஜூன் 01 அன்று கொண்டாடப்படுகிறது.
விரத முறை :
நிர்ஜல ஏகாதசி நாளில், அதிகாலையில் குளித்துவிட்டு, சூரிய பகவானுக்கு நீர் சமர்பிக்கவும். அதன் பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, விஷ்ணு அல்லது கிருஷ்ணரை வணங்குங்கள். மஞ்சள் பூக்கள், பஞ்சாமிர்தம், துளசி, பருப்பு ஆகியவற்றை இறைவனுக்கு படைக்கவும்.
பின்னர், விஷ்ணு மற்றும் அன்னை லட்சுமியின் மந்திரங்களை உச்சரித்து விரதம் இருந்து. மறுநாள் சூரிய உதயம் வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட எடுக்க வேண்டாம். அடுத்தநாள் காலை உணவு மற்றும் பழங்களை இறைவனுக்கு சமர்ப்பித்து, துவாதசி திதியில் நீராடி, ஸ்ரீ ஹரியை மீண்டும் வணங்கிவிட்டு, உணவும், தண்ணீரும் எடுத்து விரதத்தை விடுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Vaikunda ekadasi