சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில், முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போதும் அறுபத்து மூவர் திருவிழாவின் போதும் கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பங்குனி மாத திருவிழா கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. 4 மாடவீதிகளில் அசைந்தாடி வந்த தேரை காண பக்தர்கள் குவிந்தனர். 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்ட தேரை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கற்பகாம்பாளுடன் தேரில் எழுந்தருளிய கபாலீஸ்வரரை மெய்சிலிர்த்தபடி பக்தர்கள் வணங்கினர்.தேரோட்டம் காரணமாக, மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இன்று பக்தர்களின் பாதுகாப்புக்காக அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தேரோட்டத்தை தொடர்ந்து, நாளை ஏப்ரல் 4ஆம் அறுபத்தி மூவர் வீதியுலா நடைபெறும். எட்டாம் நாள் விழாவாக நடைபெறும் அறுபத்து மூவர் விழா உலகப்புகழ் பெற்றது.
Also see... பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்..!
அன்று நடைபெறும் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி விழாவும் மிகவும் புகழ்பெற்றது. அன்றைய தினம் மாலையில் வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு ஐந்திரு மேனிகள் விழாவும் நடைபெறுகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mylapore Temple