முகப்பு /ஆன்மிகம் /

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான மே மாத ராசி பலன்கள் இவைதான்..

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான மே மாத ராசி பலன்கள் இவைதான்..

X
மாதிரி

மாதிரி படம்

May Month Rasipalangal 2023 : கடகம், சிம்மம் கன்னி ஆகிய ராசிகளுக்கு மே மாத பலன்களை புதுக்கோட்டை ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன் கணித்து கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜோதிடர்கள் ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன் கடகம், சிம்மம் கன்னி ஆகிய ராசிகளுக்கு மே மாத பலன்களை கணித்து கூறியுள்ளார்.

கடகம்

உங்களுக்கு தற்போது மிகவும் தேவை துணிச்சலும் திட்டமிடுதலும் தான் உடல் நலக்குறைவு ஒரு பக்கம் கடன் ஒரு பக்கம் அத்துடன் தொழில் மந்தமாக இருக்கிறது என்று கவலை ஒரு பக்கம் இருக்கும். ஏதாவது ஒன்றை விற்று கடனை அடைக்க முயற்சிப்பீர்கள் அல்லது நிலம் வீடு மனை இவற்றில் ஏதாவது ஒன்றை அடமானம் வைக்கும் நிலை ஏற்படும். வண்டி வாகனங்களில் நாய் போன்றவற்றால் ஆபத்துக்கள் நேரிடும். மாத பிற்பகுதிக்கு மேல் உங்கள் குடும்ப உறவுகளால் மன அமைதி கெடும். மே 13, 14, 15 வில்லங்கங்கள் வர வாய்ப்பு உண்டு அதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

சிம்மம்

கோள்களின் ஓட்டம் உங்களுக்கு மிக சாதகமாக உள்ளது. உங்கள் மதிப்பும் பொருளாதாரம் உயரும் காலம். துணைவரின் யோகம் உங்களுக்கு கை கொடுக்கும் பொன் பொருள் வந்து. சேரும் குழந்தைகள் முன்னேற்றம் உறுதி . மே 16, 17 நீங்கள் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கன்னி

top videos

    முதலில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையுடன் பகைமை கொள்ள வேண்டாம். மருத்துவ செலவுகள் ஏற்படும் காலம் என்பதால் புனித தளங்களுக்கு சென்று புண்ணிய நீராடி வரவும். குடும்பத்தில் ஏற்றமும் இறக்கமும் மகிழ்ச்சியும் துன்பமும் மாறி மாறி வரும். சிலர் பூமி வாகனம் மீது முதலீடு செய்வார்கள். அசையா சொத்துக்கள் மீது முதலீடு செய்வது நலம் மே 17, 18 ,19 இல் கவனமுடன் செயல்பட வேண்டிய நாட்கள்.

    First published:

    Tags: Local News, Pudukkottai