முகப்பு /செய்தி /ஆன்மிகம் / நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் உங்களுக்கு அதிர்ஷ்டமானதா என்பதை எப்படி அறிவது.?

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் உங்களுக்கு அதிர்ஷ்டமானதா என்பதை எப்படி அறிவது.?

மொபைல் எண் கணிதம்

மொபைல் எண் கணிதம்

Mobile Numerology | நியூமராலஜி முறைப்படி ஒருவர் தனக்கான மொபைல் நம்பரை தேர்வு செய்வது குறிப்பிட்ட நபர் அல்லது அவர் ஈடுபட்டுள்ள வணிகத்திற்கு மிகவும் அதிர்ஷ்டத்தை தருவதோடு, அனைத்தையும் சாதகமாகவும் மாற்றும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போது ஜோதிடம் பார்க்கும் பழக்கம் மக்களிடம் எந்தளவிற்கு அதிகமாக உள்ளதோ, அதே அளவிற்கு நியூமராலஜி எனப்படும் எண் கணித முறை மீது பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். பிறந்த நேரம், பெயர் ஆகியவற்றை கொண்டு எந்த எண்கள் மற்றும் எந்த எழுத்துக்களில் உங்களது பெயர் ஆரம்பிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது நியூமராலஜி.

இதன் மூலம் தங்கள் வாழ்வின் எதிர்கால வளர்ச்சி, குணாதிசயங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் அதிகம் உள்ளது. அதே போல நியூமராலஜி என்பது ஒரு எண்ணுக்கும் அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு அல்லது உறவின் நம்பிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

நம் எல்லோர் கைகளிலும் தற்போது ஸ்மார்ட் போன் உள்ளது. ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் அல்லது பயன்படுத்த தெரியாதவர்கள் என்றாலும் கூட அவர்களின் கையில் சாதாரண பட்டன் மொபைல் உள்ளது. எங்கு சென்றாலும் கூடவே எடுத்து செல்லும் அத்தியாவசிய பொருளாக இருக்கும் மொபைலுக்கு நாம் பயன்படுத்தும் நம்பர் கூட நமக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரலாம் என்கின்றனர் நியூமராலஜி நிபுணர்கள்.

ஒரு மொபைல் நம்பர் உங்களுக்கு அதிர்ஷ்டமானதா என்பதை எப்படி அறிவது..?

நியூமராலஜி முறைப்படி ஒருவர் தனக்கான மொபைல் நம்பரை தேர்வு செய்வது குறிப்பிட்ட நபர் அல்லது அவர் ஈடுபட்டுள்ள வணிகத்திற்கு மிகவும் அதிர்ஷ்டத்தை தருவதோடு, அனைத்தையும் சாதகமாகவும் மாற்றும். எனவே உங்களுக்கான அதிர்ஷ்ட மொபைல் நம்பரை நீங்கள் தேர்வு செய்ய நினைத்தால் அதற்காக நீங்கள் ஒரு நல்ல எண் கணித நிபுணரை அணுக வேண்டும். டிஜிட்ஸ் என் டெஸ்டினியை (Digits N Destini) சேர்ந்த பிரபல நியூமராலஜிஸ்ட்டான பூஜா ஜெயின், ஹைதராபாத்தில் நியூமராலஜியின் படி மொபைல் நம்பரை தேர்வு செய்து கொடுப்பதில் முன்னணி நிபுணராக இருக்கிறார்.

உங்கள் 10 டிஜிட் மொபைல் நம்பரில் இருக்கும் அனைத்து இலக்கங்களையும் சேர்த்து கூட்டி கொள்வதன் மூலம் இறுதியில் கிடைக்கும் நம்பர் தான் உங்கள் மொபைல் நம்பர் உங்களுக்கு அதிர்ஷ்டமானதா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது. இதற்கு உதாரணம் ஒன்றை கீழே பார்க்கலாம்...

ஒருவரின் மொபைல் நம்பர் 7818526194 என்று வைத்து கொள்வோம். இந்த 10 நம்பரையும் கூட்டி இறுதியில் கிடைக்கும் சிங்கிள் டிஜிட் நம்பரின் குணாதிசயங்களை மொபைல் நம்பர் நியூமராலஜிபடி ஒப்பிடுவதன் மூலம் அந்த நம்பர் அதிர்ஷ்டமானதா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். மேலே நாம் பார்த்த ரேண்டம் ஃபோன் நம்பரில் அனைத்து டிஜிட்களையும் கூட்ட வேண்டும். அதன்படி 7+8+1+8+5+2+6+1+9+4இவற்றை கூட்டினால் கிடைக்கும் நம்பர் 51. இப்போது இதனை சிங்கிள் டிஜிட்டாக மாற்ற 5+1 என கூட்டினால் நம்பர் 6 கிடைக்கும். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள், தங்கள் குடும்ப நலன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் மற்றும் இசை மற்றும் கலைகள் மீது அதிக ஈடுபாடுடு மற்றும் ரசனை கொண்டவர்களுக்கு நம்பர் 6 சரியான எண். மேலே உள்ள கால்குலேஷனை பின்பற்றி உங்கள் மொபைல் நம்பரை கூட்டுவதன் மூலம் இறுதியில் கிடைக்கும் சிங்கிள் டிஜிட்டிற்கான விளக்கங்களை சரிபார்ப்பதன் மூலம், உங்கள் மொபைல் நம்பர் உங்களுக்கு அதிர்ஷ்டமானதா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

top videos

    ஒருவேளை உங்களுக்கு அல்லது உங்கள் வணிகத்திற்கு உங்களது மொபைல் நம்பர் சரியாக இல்லை என நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கான அதிர்ஷ்ட மொபைல் எண்களின் சரியான கலவையை கண்டறிய சிறந்த எண் கணித வல்லுநர்களை அணுகவும். நியூமராலஜி முறைப்படி உங்கள் மொபைல் நம்பராக சரியான எண்ணை தேர்ந்தெடுப்பது உங்களது வாழ்க்கையை வெற்றிகரமாக மாறலாம்.

    First published:

    Tags: Numerology, Tamil News