தன சாம்ராஜ்ய யோகத்தால் ஜாக்பாட் அடிக்கப் போகும் 4 ராசிகள்!
Dhan Samrajya Yoga 2023 : வேத ஜோதிடத்தில், தன சாம்ராஜ்ய யோகாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. புதன் கிரகம் வலுவிழப்பதால் இந்த யோகம் உருவாகும். இந்த யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவேளையில் தான் இருக்கும் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடப்பெயர்ச்சி செய்யும். அப்படி கிரகங்கள் தனது ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்கள் சில ராசியில் உச்சம் பெற்றும். இல்லையெனில், சில ராசியில் நீசமடைந்தும் காணப்படும். இந்நிலையில், தற்போது மீன ராசியில் புதன் நீசமடைந்துள்ளதுடன், மீனத்தில் அஸ்தமன நிலையிலும் காணப்படுவார். இதனால், மீன ராசியில் புதனால் தன சாம்ராஜ்ய யோகம் உருவாகும். இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது அதிகமான சுப பலன்களை கொடுக்கும். இப்போது புதனால் உருவாகும் தன சாம்ராஜ்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் அந்த 4 ராசிக்காரர்கள் பற்றி பார்க்கலாம்.
ரிஷபம் : தன சாம்ராஜ்ய யோகமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும். இந்த யோகத்தால், பொருளார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் பண வரவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் அத்துடன் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் ஏற்கனவே செய்து வைத்துள்ள பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
மிதுனம் : மிதுன ராசிக்காரர்களுக்கு தன சாம்ராஜ்ய யோகமானது மங்களகரமானதாக இருக்கும். ஏனெனில், உங்களின் ராசி அதிபதி புதன். எனவே, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். நீண்ட நாட்களாக உங்கள் கைக்கு கிடைக்காத பணம் உங்களுக்கு கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு, இக்காலகட்டம் நல்ல அதிர்ஷ்டமானதாக இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். நீங்கள் எதை செய்தாலும் அது உங்களுக்கு வெற்றியை தரும்.
கன்னி : தன சாம்ராஜ்ய யோகமானது கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக பல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகளால் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.
தனுசு : தனுசு ராசிக்காரர்களுக்கு தன சாம்ராஜ்ய யோகமானது தொழில் மற்றும் வியாபார ரீதியாக நல்ல பலனைத் தரும். மேலும், புதனின் பார்வை 7 ஆவது வீட்டில் விழுவதால் தொழிலில் நல்ல வருமானத்தைப் பெறக்கூடும். சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்கள் அமையும். இதுவரை தொழில் மந்தமாக இருந்தால், இனிமேல் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
top videos
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.