முகப்பு /ஆன்மிகம் /

நாட்டாணி ஸ்ரீ சதுரமுடைய அய்யனார் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் - திரளான மக்கள் பங்கேற்பு! 

நாட்டாணி ஸ்ரீ சதுரமுடைய அய்யனார் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் - திரளான மக்கள் பங்கேற்பு! 

X
நாட்டாணி

நாட்டாணி ஸ்ரீ சதுரமுடைய அய்யனார் கோயில்

விழாவின் முக்கிய நிகழ்வாக பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணி  ஸ்ரீ நந்தனவிநாயகர், ஸ்ரீ பூரண புஷ்கல அம்பிகை சமேத ஸ்ரீ சதுரமுடைய அய்யனார் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, நாட்டாணி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ நந்தனவிநாயகர், ஸ்ரீ பூரண புஷ்கல அம்பிகை சமேதஸ்ரீ சதுர முடைய அய்யனார் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அந்த கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்காக யாகசாலை அமைத்து, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3 நாட்களாக 4 கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் சுவாமி அருள் பெற்றுச் சென்றனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

top videos
    First published:

    Tags: Local News, Pudukottai