முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மதுரை சித்திரை திருவிழா.. பக்தர்களின் தாகத்தை தீர்த்த இஸ்லாமியர்கள்..!

மதுரை சித்திரை திருவிழா.. பக்தர்களின் தாகத்தை தீர்த்த இஸ்லாமியர்கள்..!

 பக்தர்களின் தாகம் தீர்க்க பள்ளிவாசலில் குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்

பக்தர்களின் தாகம் தீர்க்க பள்ளிவாசலில் குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்

Madurai chithirai festival | மதுரை சித்திரை திருவிழாவிற்கு வந்த பக்தர்களின் தாகம் தீர்க்க பள்ளிவாசலில் குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை சித்திரை பெருவிழாவில் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் அம்மனும் சுவாமியும் மாசி வீதிகளில் வீதி உலா வருகின்றனர். வீதி உலாவின் போது பல்வேறு பகுதிகளிலும் மக்களின் தாகம், பசி தீர்ப்பதற்காக ஏராளமானோர் குடிநீர் பந்தல்களை அமைத்தும், அன்னதானமாக பிரசாதங்களை வழங்கியும் வருகின்றனர்.

பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் மத நல்லிணக்கத்தோடு தெற்குவாசல் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

Also see... மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வேடமணியும் பக்தர்கள் உருமா கட்டும் கூடை எதற்காக தெரியுமா?

மீனாட்சியின் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்த சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்திரை பெருவிழா சாதி, சமயங்களை கடந்த கொண்டாட்டங்களை உள்ளடக்கியது என்பதற்கு இதுவே சாட்சி.

First published:

Tags: Madurai, Madurai Chithirai Festival