கிரகணம் இயற்கையாக நிகழும் ஒரு வானியல் நிகழ்வு. இது அறிவியல் மற்றும் ஜோதிடம் ரீதியில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. என்ன தான் இவை அறிய நிகழ்வுகளாக இருந்தாலும், அசுபமாகவே பார்க்கப்படுகிறது. கிரகணத்தின் போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வருவதால் சூரிய கிரகணம் (Solar Eclipse) நிகழ்கிறது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ( chandra grahan) நிகழ்கிறது.
அந்தவகையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5, 2023 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சித்ராபௌர்ணமி அன்று நிகழ உள்ளது. கிரகணம் பொதுவாக கர்ப்பிணிகளுக்கு அசுபமாக கருதப்படுகிறது. பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியில் வந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து என கூறப்படுகிறது. அந்தவகையில், கிரகணத்தின் போது கர்பிணிப்பெண்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் மனதில் கொள்ளவேண்டிய சில விஷயம் :
1. பழங்கால நம்பிக்கைகளின்படி, சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும். ஏனெனில், கிரகணத்தின் போது வெளியாகும் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கலாம்.
2. கிரகண நேரத்தில் ஊசி, கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
3. சந்திர கிரகணத்தின் போது எந்த உணவுப் பொருளையும் உன்ன வேண்டாம். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் மருந்துகளை உட்கொள்ள உணவை உட்கொள்ளலாம்.
4. சந்திரகிரகணத்தின் போது வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைப்பது நல்லது.
5. சந்திர கிரகணத்தின் போது ஏற்படும் எதிர்மறையான விளைவுகளை குறைக்க தியானம் மற்றும் இறை மந்திரங்களை உச்சரிக்கவும்.
6. சந்திர கிரகணத்திற்கு முன்னும் பின்னும் குளிப்பது கிரகணத்தின் பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.
7. இந்த வான நிகழ்வின் போது கர்ப்பிணிப் பெண்கள் வளையல்கள், ஊசிகள், ஊக்கு போன்ற எந்த உலோகப் பொருட்களையும் அணியக்கூடாது.
8. சந்திர கிரகணம் நடைபெறும் நேரம் அசுபமாக கருதப்படுவதால் அந்த நேரத்தில் தூங்குவதை தவிர்க்கவும்.
9. கர்பிணிப்பெண்கள் சந்திர கிரகணத்தின் போது எந்த வேலையும் செய்யாமல் முழு ஓய்வு எடுக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Lunar eclipse, Solar eclipse