முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி காளஹஸ்தி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு...

திருப்பதி காளஹஸ்தி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு...

காளஹஸ்தி

காளஹஸ்தி

Tirupati | திருப்பதி காளஹஸ்தி கோவிலுக்குள் தெரிந்தோ தெரியாமலோ செல்போனை எடுத்து சென்றால் ரூபாய் 5000 அபராதம் என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  • Last Updated :
  • Tirupati, India

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்தலம் ஆகும். மேலும் இது ராகு, கேது தலம் என்பதால் கோவிலை வலம் வருவதும் எதிர் வலமாகவே சுற்றி வர வேண்டும்.

அத்தகைய சிறப்புடைய அந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். அப்படி வருபவர்களில் சிலர் கோவிலுக்குள் செல்போன்களை எடுத்து செல்வதாகவும், அந்த செல்போன்களை பயன்படுத்தி கோவில் வளாகத்தில் வீடியோ, போட்டோ ஆகியவற்றை எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன...

இது தவிர கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் ஆகியோரும் செல்போன்களை எடுத்து சென்று பேசுகின்றனர். இதனால் பல்வேறு விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெறுகின்றன.

Also see... திருப்பதியில் இனி இந்த முறையில்தான் லட்டு தயாரிக்கப்படும்... தேவஸ்தானம் முடிவு...

எனவே கோவிலுக்குள் இனிமேல் யாராவது செல்போனை எடுத்து சென்று பிடிபட்டால் அவர்களுக்கு 5000 ரூபாய் உடனடி அபராதம் விதிக்கப்படும். அபராதம் கட்ட தவறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati