ரிஷபம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

மாதம் ராசி ஆளுமை(ரிஷபம் ராசி)

Sunday, October 17, 2021

ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் பயணங்களை மேற்கொள்வீர்கள். இருப்பினும், உங்கள் உறவைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு ஆக்ரோஷமான விவாதத்திலும் நீங்கள் ஈடுபடக் கூடாது. நீங்கள் தாம்பத்திய உறவில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில்முறை விஷயத்திலும், அலுவலகம் மற்றும் வியாபாரத் திட்டங்களிலும் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணியிடத்திலும் தொழிலிலும் நிலுவையில் உள்ள பணிகளை விரைவாகச் செய்து முடிக்க முயற்சிக்கவும், புதிய திட்டங்களைத் தொடங்கும் முன் மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் அலுவலக சக பணியாளர்களுடன் சுமூகமான உறவுவைப் பராமரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். கிரகங்களின் சாதகமற்ற சூழலால் உங்கள் முதலாளிகளுடனோ அல்லது மேலதிகாரிகளுடனோ மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அலுவலகம் பணிசார்ந்த கூட்டங்களின் போதும் ஆலோசனை செய்யும் போதும் அமைதியாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். பணியிடத்தில் தேவையற்ற சண்டைகளைத் தவிர்க்க முயற்சிப்பதால் மன அழுத்தத்துடம் சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம். மொத்தத்தில், பணம் மற்றும் நிதி அடிப்படையில் இந்த மாதம் நன்றாக இருக்கும். சின்னச் சின்னப் பயணங்கள் நன்மை பயக்கும். உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பண உதவி செய்யலாம். இந்த மாதம் தகவல் தொடர்பு சாதனங்களான கைபேசி கணினி போன்றவற்றிற்குச் செலவுகள் செய்யலாம். படிப்புச் செலவுகளும் இருக்கலாம். படிப்பில், மாணவர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். படிப்பில் கவனச்சிதறல்களைத் தவிர்க்க எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் படிப்பில் சவால்களை எதிர்கொள்ளக்கூடும். உங்கள் உடல்நிலை சீராக இருக்க வழக்கமான பரிசோதனைகளைத் தவறாமல் பெற வேண்டியிருக்கலாம். இருப்பினும், பணிச்சுமை அதிகரிப்பு உங்கள் தூக்கத்தைப் பாதிக்கலாம்.

ஜோதிட ஆளுமை

ரிஷப ராசியின் முதன்மை கிரகம் சுக்கிரன். இந்த இராசி அடையாளத்துடன் பிறந்தவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனை எந்த விலையிலும் விரும்புகிறார்கள். ரிஷப ராசி அடையாளம் உள்ளவர்கள் எந்த வேலையும் எடுப்பதற்கு முன்பு அதிகம் யோசிப்பதில்லை.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:06:36

இன்றைய திதி:சுக்லபட்ச துவாதசி

இன்றைய நட்சத்திரம்:சதயம்

இன்றைய கரணன்: பவம்

இன்றைய பக்ஷம்:சுப்பிரம்

இன்றைய யோகம்:விருதி

இன்றைய நாள்:ஞாயிறு

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:16:45 to 18:12

எமகண்டம்:12:24 to 13:51

குளிகை காலம்:15:18 to 16:45