தனுசு  ராசி

Share: Facebook Twitter Linkedin

வருடம் ராசி ஆளுமைதனுசு ராசி)

Monday, October 3, 2022

இந்த 2022 ஆம் ஆண்டு உங்களைப்பற்றி நீங்களே தெரிந்து புரிந்துகொள்ளும் ஆண்டாகும், ஏனெனில் நீங்கள் இந்த ஆண்டு நிறைய பயணம் செய்ய வேண்டும். இந்த ஆண்டின் சிறந்த பகுதி என்று சொல்லவேண்டுமென்றால் அது சனிபகவானின் பெயர்ச்சி காலமாகும். கடந்த காலத்தில் செய்யாத வேலைகளை எல்லம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே செய்வீர்கள். நீங்கள் புதுப்புது இடங்களுக்குச் செல்ல விரும்புவீர்கள். நீங்கள் சில ஆச்சரியமான இடங்களுக்கெல்லம் சென்று வருவீர்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிதிநிலையை உயர்த்த ஒரு வாய்ப்பு கிடைக்கும், அதைத் தவரவிடுவது புத்திசாலித்தனமல்ல, அதை அடைவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். உங்கள் தாயின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். ஏப்ரல் மாதம் நிகழும் குருபெயர்ச்சி உங்களுக்கு மகிழ்சியைக் கொடுக்கும். நீங்கள் புது வீடு, இடம் அல்லது வாகனம் வாங்கலாம். தொழில் புரிபவர்களுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாகும். உங்கள் உடன் பிறந்தவர்களுடனான உறவு வலுவடையும். அவர்களுக்கு இடையே ஏதேனும் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அவை அனைத்தும் மறைந்துவிடும். இந்த ஆண்டு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உங்களைத் தேடிவரும். முன்பே பதிவு செய்திருப்போர் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் செல்ல வாய்ப்புள்ளது. மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கலாம். ஏப்ரல் மாதத்தில் நிகழும் ராகு கேது பெயர்ச்சி சில புதிய மாற்றங்களைக் கொண்டுவரும். மாணவர்கள் வெற்றிபெற கடினமாக படிக்க வேண்டும். சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்திடுங்கள். குழந்தை தொடர்பான கவலைகளும் உங்களுக்கு இருக்கலாம். வருமானம் குறைவாகவும், செலவு அதிகமாகவும் இருப்பதை நீங்கள் உணரலாம், ஆனாலும் அதை சமாளிப்பீர்கள். மொத்தத்தில் இந்த ஆண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பல புதிய அனுபவங்களை உங்களுக்கு வழங்கப்போகிறது.

ஜோதிட ஆளுமை

விருச்சிக ராசியின் முதன்மை கிரகம் செவ்வாய். இந்த இராசி உள்ளவர்கள் புனிதமான, அச்சமற்ற, பிடிவாதமான, விரைவான மற்றும் உணர்ச்சிவசப்பட்டவர்கள். அவர்களை யாரும் லேசாக எண்ணிவிடக் கூடாது. அவர்கள் தங்கள் சொந்தக்காலில் வாழ்க்கையை நடத்த விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் விதியின் மீது முழு நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:06:31

இன்றைய திதி:சுக்லபட்ச அஷ்டமி

இன்றைய நட்சத்திரம்:பூராடம்

இன்றைய கரணன்: பத்திரை

இன்றைய பக்ஷம்:சுப்பிரம்

இன்றைய யோகம்:சோபனம்

இன்றைய நாள்:திங்கள்

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:08:00 to 09:30

எமகண்டம்:10:59 to 12:28

குளிகை காலம்:13:57 to 15:26