துலாம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

மாதம் ராசி ஆளுமை(துலாம் ராசி)

Sunday, June 4, 2023

துலாம் ராசியினரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்தமாதம் அமைதியான தாக்கம் ஏற்படலாம். நீங்கள் விரும்பும் ஒருவரிடம் உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதிலும், அந்த உறவை மேம்படுத்துவதிலும் ஆர்வமாக இருப்பீர்கள். மாதம் செல்லச் செல்ல, நீங்கள் சில சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளலாம். இது ஒரு மாயையான நேரமாக இருக்கும், எனவே இருக்கும் நிலைமையின் சிக்கலான தன்மையை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இந்த மாதத்தின் இறுதிவாரம் காதலுக்கும் புதிய உறவுகளைப் பெறுவதற்குமான வாய்ப்புகளை வழங்கும். சனிப்பெயர்ச்சி பணவரவுகளில் சில தாமதங்களை ஏற்படுத்தலாம். எனவே குறிப்பிடத்தக்க பண ஆதாயங்கள் எதையும் எதிர்பார்க்காதீர்கள். ஆனால் இந்தமுறை நிலையான வருமானம் இருக்கும். நல்ல வருமானம் இருந்தாலும், மாதம் செல்லச் செல்ல உங்கள் நிதிநிலைமையில் சில சிக்கல்கள் இருக்கும். கடன் வாங்காதீர்கள், கடன் கொடுக்கவும் செய்யாதீர்கள். புதனின் சஞ்சாரத்தினால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க எதிலும் நீண்டகாலக் கண்ணோட்டத்துடன் பார்த்து முதலீடுசெய்யுங்கள். வேலையில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த சில சிறந்தவாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால் புதிய பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த இது சிறந்தமாதம் அல்ல. உங்கள் நலத்திற்காக ஆலோசனை சொல்பவர்களின் கருத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாத இறுதியில் நீங்கள் வேலை செய்யுமிடத்தில் சில இடையூறு விளைவிக்கும் காரணிகளால் பாதிப்பு ஏற்படலாம். நீங்கள் தொழிலில் முன்னேற விரும்பினால், புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் கல்வி இலக்குகளை அடைய புதிய தொழில்நுட்பங்கள், மற்றும் திறன்களைக் கற்றுக்கொள்வதற்கு இந்தமாதம் கிரகங்கள் ஆதரவாக இருக்கும். இப்போது உட்கார்ந்து ஓய்வெடுக்க நேரம் இருக்காது. உங்கள் வாழ்க்கைப்பயணம் முன்னேறும் போது, சிரமங்கள் இருக்கலாம், எனவே நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

ஜோதிட ஆளுமை

துலாம் ராசியின் கிரகம் ரிஷபம். துலாம் ராசிக்காரர்களுக்கு தனியாக இருப்பது பிடிக்காது. அவர்கள் எப்போதும் மக்களால் சூழப்படுவதை விரும்புகிறார்கள், அவர்களுடன் பேச விரும்புகிறார்கள். மற்றவர்கள் மனதை எப்படி வெல்வது என்பதையும் அறிந்து வைத்திருப்பதில் கில்லாடிகள்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:05:53

இன்றைய திதி:பௌர்ணமி

இன்றைய நட்சத்திரம்:கேட்டை

இன்றைய கரணன்: பவம்

இன்றைய பக்ஷம்:பௌர்ணமி

இன்றைய யோகம்:சித்தம்

இன்றைய நாள்:ஞாயிறு

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:17:41 to 19:22

எமகண்டம்:12:37 to 14:18

குளிகை காலம்:15:59 to 17:41