கடகம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

மாதம் ராசி ஆளுமை(கடகம் ராசி)

Sunday, June 11, 2023

இந்த மாதம் கடக ராசியினர் தாங்கள் விரும்பிய முடிவை அடைவதில் தடைகளையும் தாமதங்களையும் சந்திக்க நேரிடலாம். உங்கள் ராசிக்கட்டத்தில் நிகழும் ராகு,கேது சஞ்சாரம் காதலில் பிரிவினையையும்​​திருமண உறவுகளில் மிகவும் ஆக்ரோஷமான தன்மையையும், கணவன் மனைவியை பிரிப்பது போலவும் இருக்கும். சனிபகவானின் சஞ்சாரமானது பங்குச்சந்தையில் இருப்பவர்களுக்கு பணம் சம்பாதிப்பதை கடினமாக்குகிறது மற்றும் எதிலும் ஒருமுறைக்கு இருமுறை பகுப்பாய்வு செய்து மற்றும் தொழில் முறை வழிகாட்டுதல்படி செயல்படுத்த வேண்டும் என்பதை உறுதிசெய்கிறது. நீண்டகால முதலீடுகளில் பலன்களைக் காண்பீர்கள். இந்தமாத இரண்டாம் கட்டத்தில் சந்திரனும் செவ்வாயும் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் கடன்கள் மற்றும் கடன் தொடர்பான கவலைகளை நீங்கள் தீர்க்க முடியும். யோகா கற்றுக்கொள்ளவோ அல்லது பிற உடல்நலம் தொடர்பான விஷயங்களைக் கற்கவோ பணம் செலவாகும். உங்கள் சக ஊழியர்களை கண்ட்ரோல் பண்ண நினைக்கும் உங்கள் எண்ணத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், அவ்வாறு செய்வது வேலையில் எதிர்பாராத சிரமங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதால், உங்களில் சிலர் சக ஊழியருடனோ அல்லது தொழில் பார்ட்னருடனோ மனக்கசப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். புதனின் சஞ்சாரம் சாதகமான வேலை வாய்ப்புகள் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க திட்டங்களை கொண்டுவரக்கூடும். ஃபேமிலி பிஸினசில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கலாம். ஊடகத்தொழில் வெற்றிகரமாக முடியும். இந்தமாத எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். இந்தமாதம் அரசு தொடர்பான வாய்மொழி மற்றும் எழுத்துத் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சட்டம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றியைக் கிடைக்கப் பெறுவீர்கள். ஃபேஷன் தொடர்பான தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். இந்தமாதத்தில், உங்களில் சிலர் திருமணம் மற்றும் ஆன்மீகத்தைப் பற்றி அறிய விரும்பலாம். இந்தமாதம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், உங்கள் தேர்வுகளுக்கு நீங்கள் எவ்வளவு சிறப்பாக தயாராகி வந்தாலும் இறுதி கட்டத்தில் உங்கள் உடல்நிலை எதிர்மறையாக உங்களை பாதிக்கலாம்.

ஜோதிட ஆளுமை

கடக ராசி அடையாளத்தின் முதன்மை கிரகம் சந்திரன். கடக ராசியில் பிறந்தவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படும் நபர்களாக இருப்பார்கள். இருப்பினும், அவர்கள் கோபமாக இருக்கும்போது, அவர்களின் நடத்தை மிகவும் கடுமையானது மற்றும் விஷயங்கள் தவறாக மாறும்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:05:53

இன்றைய திதி:கிருஷ்ணபட்ச அஷ்டமி

இன்றைய நட்சத்திரம்:பூரட்டாதி

இன்றைய கரணன்: கௌலவம்

இன்றைய பக்ஷம்:அமாவாசை/பௌர்ணமி

இன்றைய யோகம்:பிரீதி

இன்றைய நாள்:ஞாயிறு

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:17:43 to 19:24

எமகண்டம்:12:39 to 14:20

குளிகை காலம்:16:01 to 17:43