மேஷம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

மாதம் ராசி ஆளுமை(மேஷம் ராசி)

Monday, March 27, 2023

இந்த மாதம் உங்களுக்கு ஒரு நல்ல தனித்துவமான மாதமாகவும் நல்ல யோசனைகளைக் கொண்டு செயல்படும் மாதமாகவும் அமைகிறது. சூரியனும் புதனும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் படைப்பாற்றல் மேலோங்கும், உங்கள் எண்ணங்களிலும் சுற்றுப்புறத்தின் மீதும் கவனமாக இருப்பீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சுக்கிரனும் ராகுவும் உங்கள் தொழிலில் திடீர் வளர்ச்சியைத் தருவார்கள். நீங்கள் எந்த விஷயத்தையும் நேரடியாகத் தொடர்புகொண்டு நல்ல முறையில் பேசுவதன் மூலம் தவறான புரிதல்களைத் தவிர்க்கலாம். ஒரு பயணத்தின் மூலம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு அன்யோன்யமான தொடர்பு ஏற்படும். இதனால் உங்களுக்கு பிடித்தவர்களுடன் உற்சாகமாக நேரத்தை செலவிடலாம். குருபகவானின் அருளால் இந்த மாதம் சிலருக்கு தொழிலில் அதிர்ஷ்டமும், திருமணமும் கைகூடும். இந்த மாதம் மாணவர்கள் கடினமாக உழைக்கும் போது நேர்மறையான கண்ணோட்டம் அவர்களை கவனச்சிதறல்களிலிருந்து காப்பாற்றும். சனி பகவானும் ராகுவும் உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தலாம். மார்ச் மாதத்தில் நிகழும் சூரியன், புதன் சஞ்சாரத்தால் உடல் உபாதைகள் ஏற்படலாம். இந்த மாதம் உங்கள் தந்தையுடன் சில கருத்து வேறுபாடுகளும் ஏற்பட வாப்புள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் இருக்க ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். நல்ல ஆரோக்கியம் உங்களை எந்த வகையான மன அழுத்தத்திலிருந்தும் பாதுகாக்கும். கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைத்து வறுத்தப்படாதீர்கள். கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருந்தால் தற்போதைய மனநிலையைப் பாதிக்கும், குறிப்பாக உங்கள் பணியினை அது பாதிக்கும். உங்கள் திறமைகளை மேலும் பொழிவூட்டுங்கள். கடந்த கால தவறுகளை மறந்து மன உறுதியுடன், கடினமாக உழைத்திடுங்கள். இதற்கான பலனை அடுத்தடுத்த மாதங்களில் பெறுவீர்கள். ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளும் உயர்ந்த தரமான வாழ்க்கையும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களும் சில லாபங்களை எதிர்பார்க்கலாம். வடிவமைத்தல், பிராண்டிங் போன்றவற்றில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் கல்விக்காக திடீர் செலவுகள் ஏற்படலாம். மதம் சார்ந்த கல்வியிலும், ஆன்மீக பணிகளிளும் நாட்டம் கொள்வீர்கள்.

ஜோதிட ஆளுமை

ராசி அடையாளம் மேஷத்தின் முதன்மை கிரகம் செவ்வாய் கிரகம். இந்த கிரகம் இந்த ராசி அடையாளத்துடன் பிறந்த நபரின் வாழ்க்கையில் சக்தி மற்றும் உற்சாகத்தின் ஆதாரமாக கருதப்படுகிறது. ஒருவேளை இதற்காக, மேஷத்தின் அறிகுறிகள் உள்ளவர்கள் எப்போதும் புதிய ஆற்றலையும், வாழ்க்கையின் உற்சாகத்தையும் நிரப்புவார்கள்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:06:37

இன்றைய திதி:சுக்லபட்ச ஷஷ்டி

இன்றைய நட்சத்திரம்:ரோகிணி

இன்றைய கரணன்: சைதுளை

இன்றைய பக்ஷம்:சுப்பிரம்

இன்றைய யோகம்:ஆயுஷ்மான்

இன்றைய நாள்:திங்கள்

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:08:09 to 09:41

எமகண்டம்:11:13 to 12:45

குளிகை காலம்:14:17 to 15:49