முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பெரிய நிறுவனத்தில் பணி செய்யக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பெரிய நிறுவனத்தில் பணி செய்யக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

மேஷம்:

உணர்ச்சிகரமான விஷயங்கள், நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் ஆகியவற்றின் மீது நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். பணிச்சுமை காரணமாக உங்களுக்கு தேவையற்ற உடல் சோர்வு ஏற்படக் கூடும். ஆனால், அதை கண்டுகொள்ள வேண்டாம். அது கடந்து சென்றுவிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஸ் குவார்ட்ஸ்

ரிஷபம்:

தேவையற்ற மன அழுத்தம் மற்றும் குழப்பங்கள் காரணமாக தாமதம் ஏற்படும். எப்போதுமே திட்டமிட்டதைக் காட்டிலும் கூடுதலாக செயல்படுவீர்கள். எந்தவொரு விஷயம் குறித்தும் இப்போது தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டாம். கையில் உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து கொள்ளவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புஷ்பராகம்

மிதுனம்:

திடீரென்று கிடைக்கின்ற அதிர்ஷ்டம் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும். உங்கள் ஆசையை நோக்கி கொண்டு செல்கின்ற ஆரம்பகட்ட நடவடிக்கையாக அது அமையும். உங்கள் தகவல் தொடர்பு அனைத்தையும் எளிமையானதாக வைத்துக் கொள்ளுங்கள். சவால்களை ஏற்க தயங்க வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பைரைட் கிறிஸ்டல்

கடகம்:

உங்களுக்கான நம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் ஆற்றல்களை ஒருங்கிணைப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் மற்றும் பயனுள்ள ஆலோசனையை முன்வைப்பார். குழந்தைகள் சுற்றுலா செல்ல விரும்புவர்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ப்ளூ கிறிஸ்டல்

சிம்மம்:

உங்கள் மனதிற்கு நீங்கள் தைரியம் ஊட்டி கொள்ள வேண்டும். கடினமான சூழலில் அதை பயன்படுத்த வேண்டியிருக்கும். குடும்பத்திற்கு உங்கள் ஆதரவு பெருமளவில் தேவைப்படுகிறது. பணியிடத்தில் உங்கள் பிரச்சினைகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக தீர்வு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குவார்ட்ஸ்

கன்னி:

உங்கள் அன்றாட வாழ்வில் யோசித்து வைத்திருக்கின்ற மாற்றங்களை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது. உங்களுக்கு பலன் அளிக்கும் பெரிய வாய்ப்பு நெருங்கி வருகிறது. பணியிடத்தில் புதிய கோணத்தில் பயணம் செய்ய உள்ளீர்கள். அக்கம், பக்கத்தினரின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - எமரால்டு

துலாம்:

உங்கள் பதவி மற்றும் அதிகாரத்தின் பலனை சிலர் அனுபவிக்க நினைக்கின்றனர். அதுகுறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் தகவல் தொடர்பை கவனமாக மேற்கொள்ள வேண்டும். சின்னதாக அல்லது பெரியதாக இன்று மாற்றம் ஒன்றை எதிர்கொள்ள இருக்கிறீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டா கத்தி

விருச்சிகம்:

சில சமயம் சாதாரண விஷயம் கூட நமக்கு ஆச்சரியம் அளிப்பதாக அமையலாம். பெயர் பெற்ற நிறுவனம் ஒன்றில் பணி செய்யக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இரண்டாம் வருமான வாய்ப்பை உருவாக்கிக் கொள்கின்ற யோசனையை நீங்கள் பரிசீலனை செய்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செவ்வந்திக்கல்

தனுசு:

இன்றைய தினம் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துங்கள் மற்றும் முன்னுரிமைகளை தெளிவானதாக வைத்துக் கொள்ளுங்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களுக்கான உற்ற துணை ஒன்றை தேடி கொண்டிருந்தால் அதற்கான நபரை இன்று சந்திப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிப்பி

மகரம்:

உங்கள் வாழ்க்கையின் பரிணாமங்கள் மாற்றம் அடைய இருக்கின்றன. கடந்த கால நடைமுறைகள் மாற்றம் கண்டு, இப்போது புதியவை உருவெடுக்க இருக்கின்றன. உங்கள் நகர்வு நிலையானதாக ஓவராக மகிழ்ச்சியில் துள்ளாமல், உங்கள் கால்களை பூமியில் உறுதியாக வைத்து கொள்ளுங்கள். பிறருக்கு கடன் கொடுக்க வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மணி பிளாண்ட்

கும்பம்:

கடினமான சூழ்நிலையை நீங்கள் கடந்து வர இருக்கிறீர்கள். சூழ்நிலைகள் மாறி வருவதைக் கண்டு நீங்கள் சோர்வு அடைவீர்கள் அல்லது எரிச்சல் உணர்வு ஏற்படக் கூடும். உங்கள் மனதுக்கும், உடலுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும் என்றால் முறையான ஓய்வு அவசியமாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்கு

மீனம்:

வெளிநாடு செல்வதற்கான பயணங்களுக்கு இப்போது திட்டமிட்டுக் கொள்ளலாம். புகழ்பெற்ற பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க முயற்சிக்கும் பட்சத்தில் அது நடக்க வாய்ப்பு உண்டு. உங்கள் தேவைகளை குறைத்துக் கொண்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மார்பிள் டேபிள்

First published:

Tags: Oracle Speaks, Rasi Palan