முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ஏப்ரல் மாத பலன்கள்: ரிஷப ராசி - குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.!

ஏப்ரல் மாத பலன்கள்: ரிஷப ராசி - குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.!

ஏப்ரல் மாத பலன்கள்

ஏப்ரல் மாத பலன்கள்

April Month Rasi Palan | ஏப்ரல் மாத ரிஷப ராசிபலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு, சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 07-04-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-04-2023 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 22-04-2023 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்: அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்காத ரிஷப ராசியினரே நீங்கள் பிரச்சனையை கண்டு பயப்படமாட்டீர்கள். இந்த மாதம் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும்.  எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

கார்த்திகை: இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

ரோகினி: இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

மிருகசீரிஷம்: இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

பரிகாரம்:  பவுர்ணமி அன்று நவகிரகத்தில் சுக்கிரனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13 

அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

First published:

Tags: Astrology, Rasi Palan, Rishabam, Tamil News