முகப்பு /செய்தி /ஆன்மிகம் / குரு பார்வை பலன்கள்; குரு பார்வை உங்கள் மீது இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது?

குரு பார்வை பலன்கள்; குரு பார்வை உங்கள் மீது இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது?

குரு பார்வையின் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!

குரு பார்வையின் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!

ஒன்பது கிரகங்களும் ஒவ்வொரு தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. அதில், குரு பகவான் சற்று கூடுதல் சிறப்பை கொண்டுள்ளார். குரு பார்வை நம் மீது விழுந்தால், என்ன பலன் கிடைக்கும் என பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

குரு பார்வை கோடி நன்மை என்பார்கள். ஏனென்றால், ஜோதிடத்தில் இவர் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார். இவரின் பார்வை நம்மீது விழுந்தால், சகல நன்மைகளும் ஏற்படும். குரு பகவான் தனக்காரகன், தேவர்களின் குரு, பிரகஸ்பதி என அழைக்கப்படுகிறார். இவரின் அருள் இருந்தால் திருவருள் நிச்சயம் கிடைக்கும் என்பதை நியதி. எனவே தான், குருவின் பார்வை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஜோதிடத்தில் எந்த கிரகமும் 100 சதவீதம் முழு நன்மைகளையோ அல்லது முழுவதும் தீமையோ செய்யாது. கலவையான பலன்களை தான் மற்றவர்களுக்கு கொடுக்கும். ஆனால், குரு பகவானைப் பொறுத்தவரையில் சுப பலனை அதிகமாகவும், தீமைகளைக் குறைவாகவும் கொடுப்பவராக இருக்கிறார். யார் ஒருவர் தன்னுடைய ஜாதகத்தில் குருவின் சுப பலன்களை பெறக்கூடிய நல்ல இடத்தில் அமர்ந்துள்ளாரோ, அவர் சமூகத்தில் மற்றவர்களால் போற்றும்படியாக வாழ்வார்.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த குரு பகவான், தான் இருக்கும் இடத்தை விட, தான் பார்க்கும் இடத்துக்கு அதிக நன்மைகளை வழங்குவார். குரு தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 ஆகிய இடங்களில் அட்டகாசமான பலன்களை வழங்குவார். அந்த வகையில், அவரால் ஏற்படும் மகிழ்ச்சி மற்றும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் குரு தரும் பலன்கள் :

1 ஆம் இடம் : குரு பகவான் ஜாதகத்தில் ஜன்ம ராசியை பார்க்கும் போது, அந்த ஜாதகர் தன் வாழ்க்கையில் பேரும், புகழும் கிடைக்கும். அவருக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

2 ஆம் இடம் : குரு பகவான் குடும்பம், தன ஸ்தானத்தை பார்க்கும் போது பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

3 ஆம் இடம் : தைரிய, இளைய சகோதரர் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கும் போது, உங்களுக்கு எதிரிகள் தொல்லை விலகும். தைரியமாக நல்ல விஷயங்களை செய்வீர்கள்.

4 ஆம் இடம் : சுக, தாயார் ஸ்தானத்தில் குரு பார்க்கும் போது, நீங்கள் வீடு, மனை வாங்கக்கூடிய யோகமும், வாகன பிராப்தி உண்டாகும்.

Also Read | குரு பெயர்ச்சி 2023: இந்த 6 ராசிகளுக்கும் கொஞ்சம் சறுக்கல்தான்.. பலன்கள் இதோ!

5 ஆம் இடம் : குரு பகவான் ஜாதகத்தில் 5 ஆம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கும் போது குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு, குருவின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, பூர்விக சொத்து சார்ந்த சிக்கல்கள் நீங்கி சொத்து அவர்கள் கைக்கு வரும்.

6 ஆம் இடம் : குரு பகவான் 6ஆம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானம் மீது பார்வை படும் போது, நீண்ட காலமாக இருந்த உடல் நல பிரச்னைகள் நீங்கி நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள்.

7 ஆம் இடம் : களத்திர ஸ்தானம், மனைவி, துணை, தொழில் கூட்டாளியைக் குறிக்கும் 7ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நல்ல மண வாழ்க்கை, பெற்றோரின் ஆசி, தொழில் - வியாபாரத்தில் நல்ல கூட்டாளி கிடைப்பார்கள்.

8 ஆம் இடம் : குருவின் பார்வை ஆயுள், ஸ்தானம், துஸ் ஸ்தானத்தைப் பார்க்கும் போது உங்களுக்கு நல்ல மன நிலை உண்டாகும். மரண பயம் நீங்கும். விபத்துக்களே ஏற்பட்டாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

9 ஆம் இடம் : குருவின் பார்வை 9 ஆம் இடமான பாக்கிய, தந்தை ஸ்தானத்தைப் பார்க்கும் போது, உங்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வும், வெளிநாட்டில் வேலையும்  கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தந்தையின் தொழில் ஆதாயம் கிடைக்கும்.

Also Read | ஒரே ராசியில் 3 கிரகங்கள்... தொழில் நஷ்டம், நிதி நெருக்கடியை சந்திக்க போகும் 5 ராசிகள்!

10 ஆம் இடம் : குருவின் பார்வை 10 ஆம் இடமான தொழில், கர்ம ஸ்தானத்தில் படும் போது உங்களுக்கு தொழிலில் மேன்மை, பதவி உயர்வு, நீங்கள் பார்க்கும் வேலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெற்றோரின் உடல் நலம் சீராகும்.

11 ஆம் இடம் : 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தை குரு பார்க்கும் போது, உங்களுக்கு எதிர்பாராத பொருள் வரவு, அதிர்ஷ்டம் உள்ளிட்ட சுப பலன்களை எதிர்பார்க்கலாம்.

top videos

    12 ஆம் இடம் : விரய ஸ்தானம், சயன, மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை படும்போது, உங்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வ தரிசனம், மகான்களின் அருள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

    First published:

    Tags: Astrology, Gurupeyarchi