திருவாரூர் அருகே திருக்கொள்ளிக்காட்டில் அனுக்கிரக மூர்த்தியாக பொங்கு சனீஸ்வரர், மகாலட்சுமி அவதாரமாக திகழ்ந்து அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலின் சிறப்பு குறித்து இங்கு பார்க்கலாம்.
பொங்கு சனீஸ்வரர் மகாலட்சுமி கோயிலின் தல விருட்சத்தில் வன்னி மரமும், கோயிலருகே சனி, அக்னி என இரு தீர்த்தக்குளங்களும் உள்ளன.
இத்தளத்தில் ஈசனைக், பிரம்மா, விஷ்ணு, ராவணன், அரிச்சந்திரன், தாருகாவன ரிஷிகள் யாவரும் வந்து வணங்கி அருள் பெற்றுள்ளனர். தான் பாவவிமோசனம் பெற்ற இக்கோயிலுக்கு தசரதன் 108 ஏக்கர் ராஜமானியம் அளித்தாகவும், செங்கல் கட்டுமானத்தில் இருந்த இக்கோயிலை முதலாம் குலோத்துங்கன் கருங்கல் கோயிலாக மாற்றியதாக வரலாறும் இக்கோயிலுக்கு உண்டு.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இத்தலத்திற்கு வந்து தரிசனம் செய்வோருக்கு நீண்ட ஆயுள், உடல் நலம், குடும்ப ஒற்றுமை, குபேர சம்பத்து யாவும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சனிபகவானுக்கு மிகவும் விருப்பமான எள்ளுச் சாதம், கரு நாவல்பழம், உளுந்து, கருநீலப் பட்டு, இரும்பு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஆகியவற்றை நிவேதனம் செய்தால், பொங்கு சனீஸ்வரர் நம் வாழ்வில் பூரண நலன்களையும் வாரி வாரி வழங்குவார் என்கிற நம்பிக்கையும் உண்டு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thiruvarur