முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை...

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை...

பஸ்கள் நன்கொடை...

பஸ்கள் நன்கொடை...

Tirupati | ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நேற்று திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ. 18 கோடி செலவில் 10 எலக்ட்ரிக் பஸ்களை காணிக்கையாக வழங்கியது.

  • Last Updated :
  • Tiruchanur, India

திருப்பதி மலையில் 100% சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முயற்சித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு முழு அளவில் தடை விதித்துள்ளது.

மேலும் தன்னுடைய பங்காக திருப்பதி மலையில் ஓடிக்கொண்டிருக்கும் தேவஸ்தானத்தின் கார்களில் பல கார்கள் மின்சார கார்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தவிர இலவச பேருந்துகளையும் மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் ஒலக்ட்ரா என்ற பெயரில் மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் மெகா இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 18 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்து மின்சார பேருந்துகளை நன்கொடையாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அந்த பேருந்துகள் நேற்று திருப்பதி மலைக்கு வந்து சேர்ந்தன. மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான பயிற்சியை தேவஸ்தான ஓட்டுனர்களுக்கு வழங்கிய பின் இன்னும் பத்து நாட்களில் 10 பேருந்துகளும் திருப்பதி மலையில் பக்தர்களின் இலவச போக்குவரத்திற்காக பயன்பாட்டிற்கு வர உள்ளன.

top videos
    First published:

    Tags: Bus, Tirumala Tirupati, Tirupati