திருமலையில் ஏழுமலைகள் மீது எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகளை அணிவிக்கிறார்கள் என்றாலும் அவருக்கு பிரசாதமாக தினம் தினம் புது மண்சட்டியில் செய்யப்பட்ட தயிர் சாதத்தைதான் படைக்கின்றனர். அதுவே அவருக்கு விரும்பமானதாக இருக்கிறது. காரணம் அதுவே அவருக்கு பிடித்தமான ஒன்றாம்...
உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றாக அறியப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 முதல் 40 மில்லியன் மக்கள் வருகை தருவார்கள். ஒவ்வொரு நாளும் நன்கொடைகள் ஏராளமாக சேர்ந்து கொண்டே இருக்கும். வருடாந்திர பிரம்மோத்ஸவம் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களின் போது பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படும்.
ஏழுமலையானின் நகைகள்
ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள். ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி என்கிறார்கள்.
ஏழுமலையானின் உண்டியல்
ஏழுமலையானுக்கு பக்தர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருடா வருடம் உண்டியல் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
2022-23ஆம் நிதி ஆண்டில் ஏழுமலையானின் உண்டியல் காணிக்கை வருமானம் ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. கடந்த வருடம் மட்டும் 1192 கோடியே 81 லட்ச ரூபாய் காணிக்கை வருமானம் கிடைத்துள்ளது.
Also see... திருப்பதி லட்டு இனிமேல் இப்படிதான் கிடைக்குமாம்...!
தயிர் சாதம் படையல்
அத்தகைய நகைகளும் உண்டியல் பணமும் கொண்ட சீனிவாசப் பெருமாளுக்கு படையலாக என்ன படைக்கின்றனர் தெரியுமா? தயிர்சாதம்தான் படைக்கிறார்கள்... தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிரகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப் பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும் என்பது நம்பிக்கை. தயிர்சாதம் ஒன்றே ஏழுமலையானுக்கு பிடித்த ஒன்று. அதனால்தான் அது அவருக்கு நிவதனமாக படைக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirumala Tirupati, Tirupati