முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா?

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

Madurai | மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம்- ரூபாய் ஒரு கோடியே 28 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம் வரப்பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும்  உப கோவில்களுக்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் எண்ணும் பணியானது இன்று கோவில் துணை ஆணையர் அருணாச்சலம் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என 300 பேர் பங்கேற்ற நிலையில் நடைபெற்றது.

மேலும் படிக்க... உயிருக்கு பயந்து 2 வருடமாக பூட்டிய வீட்டிற்குள் வாழும் குடும்பம்

top videos

    உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ.1,28,72,651, தங்கம் 715 கிராம், வெள்ளி 1 கிலோ 610 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுக்கள் 261 எண்ணிக்கையில் வரப்பெற்றுள்ளன என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival