முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தேசிங்கு ராஜா வழிபட்ட கோயில் பற்றி தெரியுமா?

தேசிங்கு ராஜா வழிபட்ட கோயில் பற்றி தெரியுமா?

புதுச்சேரி

புதுச்சேரி

Puducherry | 1200 ஆண்டு பழமை வாய்ந்த ஆதி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் வேடமிட்டு வீதி உலா வந்தது சாமி.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

செஞ்சியை ஆண்ட மன்னர்  தேசிங்கு ராஜாவின் நண்பர் வழுதாவுரை ஆண்ட மன்னர் முகமதுகான்  நண்பன் சாமி தரிசனம் செய்வதற்காக கட்டப்பட்ட கோவில்தான் இந்த  ஆதி லிங்கேஸ்வரர் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி அருகே தமிழக பகுதியான வழுதாவுரை ஆண்ட மன்னர் முகமதுகான் தன் நண்பன் செஞ்சியை ஆண்ட மன்னர் தேசிங்குராஜா வழிபட  அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆதிலிங்கேஸ்வரர் சுவாமி, செம்மனேரி ஐயனாரப்பன் சுவாமி கோவிலை கட்டியுள்ளார்.

சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சித்திரை மாத முதல் திங்கள் கிழமையை முன்னிட்டு, மகா உற்சவம்  துவங்கியது. இதையொட்டி, காலை 9:30 மணிக்கு சுவாமி அபிஷேக ஆராதனையும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் நடந்தது.

அதனை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு குதிரை வலம் வருதல், இரவு 8:00 மணிக்கு சிறப்பு மின் அலகாரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

சிவன்

மேலும் படிக்க... கீழடி 9ம் கட்ட அகழாய்வில் மண்பாண்ட உற்பத்தி கூடம் கண்டெடுப்பு..!

இதில், சிவன், பார்வதி, விநாயகர், முருகன் என மனிதர்கள் சாமி வேடமிட்டு நடனமாடி காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

First published:

Tags: Hindu Temple, Puducherry