முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதியில் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்... காரணம் இதுதான்..!

திருப்பதியில் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்... காரணம் இதுதான்..!

திருப்பதியில் 36 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதியில் 36 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

Tirupati | கோடை விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட வந்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக இலவச தரிசன டோக்கன் கிடைக்காத பக்தர்கள் ஏராளமான அளவில் திருப்பதி மலைக்கு சென்று இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் நிரம்பி உள்ளனர்.

வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் இடம் கிடைக்காத பக்தர்கள்  சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீள வரிசையில் காத்திருக்கின்றனர். எனவே டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்திற்காக சென்ற பக்தர்கள் 36 மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை வழிபட வேண்டிய நிலை நிலவுகிறது.

ரூ.300 டிக்கெட்டுகளை முன் பதிவு செய்த பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருந்தும், இலவச தரிசனத்திற்காக டோக்கன் வாங்கிய பக்தர்கள் ஐந்து மணி நேரம் காத்திருந்தும் ஏழுமலையானை வழிபடுகின்றனர்.

நேற்று 74, 583 பக்தர்கள் ஏழுமலையான வழிபட்ட நிலையில் அவர்களில் 40340 பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலை முடி சமர்ப்பித்து மொட்டை போட்டு கொண்டனர்.

மேலும் படிக்க... திருப்பதி கோயிலின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முடிவு..! - அதிர்ச்சியளிக்கும் பின்னணி

top videos

    நேற்று கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் மூன்று கோடியே 37 லட்ச ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது.

    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati, Tirupati temple