முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி; இலவச தரிசனத்திற்காக 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...!

திருப்பதி; இலவச தரிசனத்திற்காக 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...!

ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கு 30 மணிநேரம்.

ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கு 30 மணிநேரம்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 30 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil |

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி கும்பிட்டு செல்கின்றனர். இந்நிலையில், நேற்று 75,452 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர். அவர்களில் 39,262 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம் சுமார் ரூ. 4.05 கோடி தேவஸ்தானத்திற்கு நேற்று வருமானம் கிடைத்தது.

இதை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை நிலவரப்படி பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 36 அறைகளில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.

எனவே, இலவச தரிசனத்திற்கு சுமார் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது நிலவுகிறது.  அதுமட்டும் அல்ல, ரூ. 300 டிக்கெட் பெற்ற பக்தர்களும் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர்.

First published:

Tags: Tirumala, Tirumala Tirupati, Tirupathi