முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு... அலைமோதும் கூட்டம்... 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்...!

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு... அலைமோதும் கூட்டம்... 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்...!

மாதிரி படம்

மாதிரி படம்

Tirupati | கோடை விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் ஏற்கனவே ஆன்லைன் மூலம் விற்பனை செய்து முடித்துவிட்டது. இதனால் 300 ரூபாய் தரிசன டிக்கெட் கிடைக்காத பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக திருப்பதியில் உள்ள சீனிவாசம் வளாகம், விஷ்ணுவாசம் வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திர வளாகம் ஆகிய இலவச தரிசன டோக்கன் வழங்கும் மையங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து டோக்கன்களை வாங்கி சென்றனர்.

இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் கிடைக்காத பக்தர்கள் நேரடியாக திருப்பதி மலைக்கு சென்று இலவச தரிசன வரிசையில் இணைந்து கொள்கின்றனர்  இதனால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் திருப்பதி மலையில் காத்து கிடக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி இலவச தரிசனத்திற்காக சுமார் 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

இந்த சூழல் இன்னும் சில நாட்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்துள்ள காரணத்தால் இன்று முதல் மூன்று நாட்கள் விஐபி பிரேக் தரிசன அனுமதியை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இதையும் படிங்க; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியானது... இந்த லிங்கில் செக் செய்துகொள்ளலாம்...!

சாமி தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள், வரிசைகள் ஆகியவற்றில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் உணவு, குடிநீர் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati