முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி தேவஸ்தானத்திற்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை நன்கொடையாக வழங்கிய பெங்களூர் பக்தர்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை நன்கொடையாக வழங்கிய பெங்களூர் பக்தர்

திருப்பதி ஏழு மலைகளின் பெயர்களும் அதன் காரணங்களும்..!

திருப்பதி ஏழு மலைகளின் பெயர்களும் அதன் காரணங்களும்..!

Tirupati | கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள், மலர்கள் மற்றும் அன்னதானத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகளை வழங்குவதாக விவசாயி உறுதி அளித்தார்.

  • Last Updated :
  • Tirupati, India

பெங்களூரை சேர்ந்த ஏழுமலையான் பக்தர் முரளி கிருஷ்ணா. அவருக்கு திருப்பதி மாவட்டம் டெக்கலி மற்றும் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சாய்தாபுரம் மண்டலம் போத்திகுண்டா ஆகிய ஊர்களில் 250 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இரண்டு ஊர்களிலும் உள்ள 250 ஏக்கர் நிலத்தை அவர் நேற்று ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்க முன் வந்தார்.

நிலத்திற்கான ஆவணங்களை ஆந்திர மாநில தலைமை செயலாளர் ஜவகர் ரெட்டி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் சாய்தாபுரம், டெக்கலி ஆகிய பகுதிகளின் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் பரிசீலனை செய்தனர்.

இந்த நிலையில் பக்தர் முரளி கிருஷ்ணா நன்கொடையாக வழங்க முன் வந்துள்ள 250 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானம் பெயருக்கு பத்திர பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆந்திர மாநில தலைமை செயலாளர் ஜவகர் ரெட்டி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

பக்தர் முரளி கிருஷ்ணா தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்த 250 ஏக்கர் விளை நிலத்தின் வரைபடத்தை ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ஜவகர் ரெட்டி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்த போது எடுத்த படம்..

top videos

    250 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்க முன் வந்துள்ள பக்தர் முரளி கிருஷ்ணா அந்த நிலத்தில் தேவஸ்தானத்தின் பயன்பாட்டிற்கு தேவையான தானியங்கள், மலர்கள் ஆகியவற்றை தானே பயிரிட்டு வழங்க முன்வந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati