மேஷம்:
இன்று நீங்கள் பிராக்டிக்கல் கம்யூனிகேஷனில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். பணியிடத்தில் மற்றவர்களை அனுசரித்து நடக்க முயற்சி செய்யுங்கள். புதிய வளைவுகள் வந்தால் அதை ஏற்று கொள்ளும் வகையில் நெகிழ்வுத்தன்மையுடன் இருங்கள். சுய கவனிப்பில் கவனம் செலுத்துங்கள், ஓய்வெடுக்க மற்றும் புத்துணர்ச்சி பெற நேரம் ஒதுக்குங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கார்னெட் கிரிஸ்டல்
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்ட எண் - 9
ரிஷபம் :
வலுவான அடித்தளத்தை உருவாக்க தொடர்பு முக்கியமானது என்பதை புரிந்து கொண்டு புதிய வாய்ப்புகளை தேடி செல்ல வேண்டிய நாளாக இந்நாளை கருதுங்கள். நீங்கள் கடந்த காலத்தில் செய்திருந்த சில முதலீடுகள் (குறிப்பாக தங்கத்தில்) இன்று பலனளிக்கலாம். பணியிடத்தில் ஏற்படும் சிக்கல்கள் மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். நிதி ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்தை பராமரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - தேக்கு மரம்
அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்ட எண் - 8
மிதுனம்:
இன்று நீங்கள் உறுதியுடனும் கவனத்துடனும் செயல்பட்டால் உங்களுக்கான அங்கீகாரம் எளிதாக கிடைக்கும். இன்று உங்களது செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று நீங்கள் நிதி விஷயத்தில் புத்திசாலித்தனமாக திட்டமிட்டு செயல்படுவது எதிர்காலத்தில் சேமிக்க உதவும். ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செலினைட் கிரிஸ்டல்
அதிர்ஷ்ட நிறம் - பீஜ்
அதிர்ஷ்ட எண் - 15
கடகம்:
இன்று நீங்கள் உங்களின் குடும்ப பொறுப்புகள் மற்றும் தனிப்பட்ட நிதி விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நாள். உங்களுக்கு நிலையான வருமானம் தரும் வேலை மீது நீங்கள் சலிப்படையலாம். எனவே நீங்கள் புதிய வேலைகளில் சேருவது குறித்து திட்டமிடலாம். உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க சிறந்த வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கார்னிலியன் கிரிஸ்டல்
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் - 3
சிம்மம்:
இன்று நீங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடுவது உங்களுக்கான வாய்ப்புகளை இழக்க வழிவகுக்கும். சக ஊழியர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஒத்துழைப்பது உங்கள் வளர்ச்சிக்கு உதவலாம். வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுங்கள். ரிஸ்க் எடுப்பதற்கு முன் பலமுறை யோசிக்கவும். இன்று நீங்கள் எடுத்து வைக்க போகும் புதிய அடி, உங்கள் இலக்குகளை நோக்கி செல்ல உதவும்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டூர்மலைன்
அதிர்ஷ்ட நிறம் - கிரே
அதிர்ஷ்ட எண் - 4
கன்னி:
சிலரது உறவுகளை தொடர நீங்கள் பயப்படலாம். இன்று நீங்கள் கவனம் மற்றும் விழிப்புடனும் செயல்படுங்கள். உங்கள் அணுகுமுறையில் பிடிவாதமாக இல்லாமல் வளைந்து கொடுத்து செல்ல முயற்சிக்கவும். எனினும் தேவைப்படும் போது யோசிக்காமல் கோபத்தை வெளிப்படுத்துங்கள். சம்பாதிக்கும் திறன் உங்களிடம் இருந்தாலும் நிதி முடிவுகளை சரியாக எடுப்பதில் கவனம் செலுத்துங்கள். முக்கிய வேலைகளை தள்ளி போடாதீர்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு எமரால்ட்
அதிர்ஷ்ட நிறம் - ஃபோரஸ்ட் கிரீன்
அதிர்ஷ்ட எண் - 2
துலாம்:
இன்று உங்களுக்கு உறவுகளில் மகிழ்ச்சி நிலவும், புதிய காதல் மலரலாம். உயரதிகாரிகளின் கவனம் உங்கள் மீது இருக்கும் என்பதால் பணியிடங்களில் விழிப்புடன் இருப்பது நல்லது. இன்று உங்களது கடின உழைப்பும், உறுதியும் நிதி சார்ந்த வெற்றிக்கு வழிவகுக்கும், எனவே உங்கள் இலக்குகளை நோக்கி தொடர்ந்து பணியாற்றுங்கள். இன்று சில புதிய அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஆம்பர்
அதிர்ஷ்ட நிறம் - மெரூன்
அதிர்ஷ்ட எண் - 1
விருச்சிகம்:
காதல் விஷயங்களில், கடுமையான மற்றும் தீவிரமான அணுகுமுறையை தவிர்க்கவும். உங்களது உற்பத்தித்திறன் பாதிக்கப்படாமல் இருக்க போதிய ஓய்வெடுத்து கொள்வதை உறுதி செய்யவும். உங்களது லாபத்தை அதிகரிக்க பங்குசந்தையில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். முடிவெடுப்பதற்கு முன் விஷயங்களை முழுமையாக ஆராய்ந்து முடிவெடுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அமேசானைட்
அதிர்ஷ்ட நிறம் - பிஸ்தா கிரீன்
அதிர்ஷ்ட எண் - 17
தனுசு:
கடந்த காலத்தை மறக்க வேண்டிய நாள் இன்று. புதிய வாய்ப்புகளுக்காக உங்கள் இதயத்தை திறந்து வைத்திருக்கவும். உங்களுக்கு இன்று சர்ப்ரைஸ் காத்திருக்கலாம். பதவி உயர்வு கிடைக்கலாம். பழைய பழக்கங்களை கைவிட்டு புதிய வாய்ப்புகளை ஏற்று கொள்ளுங்கள். புதிய வருமான ஆதாரம் இன்று உங்களுக்கு கிடைக்க கூடும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பவளம்
அதிர்ஷ்ட நிறம் - டீல் ப்ளூ
அதிர்ஷ்ட எண் - 11
மகரம்:
உங்கள் வாழ்க்கையில் இன்று ஒரு சுவாரஸ்யமான நபர் வரலாம். இன்று பொழுதுபோக்கு விஷயங்கள் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். ஒரு சிறிய பயணம் மற்றும் புதிய நண்பர்களை சந்திப்பது உங்களை மேலும் உற்சாகமாக வைக்கும். எதிலும் இன்று அவசரம் காட்டாதீர்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - லாபிஸ் லாசுலி
அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்ட எண் - 6
கும்பம்:
உங்களது நீண்ட நாள் கனவு ஒன்று இன்று நனவாகலாம். இன்று நீங்கள் எந்த விஷயங்களில் ஈடுபட்டாலும் சில தடங்கல்களை சந்திக்கலாம். எனினும் சோர்ந்து போகாமல் விடா முயற்சி செய்யவும். நிதி சார்ந்த விஷயங்களில் இன்று கலவையான பலன்களை பெறுவீர்கள். தொழிலில் ஈடுப்டடுள்ளவர்கள் இன்று அவசரத்தை தவிர்க்கவும். நிதானமாக செயல்பட்டால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரூபி ஸ்டோன்
அதிர்ஷ்ட நிறம் - டேன்
அதிர்ஷ்ட எண் - 18
மீனம்:
உங்களின் தொழில் வாழ்க்கையில் இன்று சுவாரசியங்கள் சேர கூடும். புதிய திட்டங்களை முன்னெடுத்து செல்ல இன்று நல்ல நாள். சரியாகே திட்டமிட்டு செயல்படுவது உங்களது நிதி சேமிப்பை அதிகரிக்க செய்யும். புதிய வாய்ப்புகளை நோக்கி நீங்கள் முன்னேறி செல்ல வேண்டிய நாளாக இன்று அமையும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் ரோட் ட்ரிப் உங்களை உற்சாகமாக வைக்கும். உங்களிடம் கணிசமான சேமிப்புகள் அல்லது சொத்துக்கள் இருந்தாலும் தொழில்முறை ஆலோசனை பெறுவது முக்கியம்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு முத்து
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை
அதிர்ஷ்ட எண் - 12
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News