முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 27) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 27) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்:

    இன்றைய தினம் நீங்கள் மிகவும் பிசியாக இருப்பீர்கள். உங்கள் ஆற்றல் முழுவதும் குறிப்பிட்ட இலக்கு நோக்கி ஒருங்கிணைக்கப்படும். மாலையில் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். பணிச்சுமை அதிகரித்தாலும் அவை வெகு விரைவில் கட்டுக்குள் வரும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஆர்கிட்ஸ்

    ராசியான நிறம் – பேபி பிங்க்

    ராசியான எண் – 6

    ரிஷபம்:

    சிலரை தொடர்பு கொண்டு பேசுவதை நீங்கள் ஒத்திவைத்து வருகிறீர்கள் என்றால் அதை செய்வதற்கு இன்று உகந்த நாளாகும். உடல் நலன் பாதிப்பு அல்லது மருத்துவ ஆலோசனை போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றால் தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். உங்களை தேடி வருகின்ற வணிக வாய்ப்பு பலன் தருவதாக அமையும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சன் கிளாசஸ்

    ராசியான நிறம் – சிவப்பு

    ராசியான எண் – 2

    மிதுனம்:

    இன்றைய தினம் ஆற்றல் முழுவதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். புத்தாக்க திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்புதல் கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட்

    ராசியான நிறம் – மஞ்சள்

    ராசியான எண் – 25

    கடகம்:

    உங்கள் வாழ்க்கையில் புதிய நண்பர் கடந்து செல்வார். அதை முக்கியத்துவம் உடையதாக கருத வேண்டாம். உங்கள் வீட்டுப் பணிகளின் மீது கவனம் செலுத்தவும். வெளி நபர்களின் தலையீடு உங்களுக்கு எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புத்தர் சிலை

    ராசியான நிறம் – மஞ்சள் கிழங்கு நிறம்

    ராசியான எண் – 10

    சிம்மம்:

    உங்களை சுற்றியுள்ள அனைத்துமே மற்றவர்களுக்கும், உங்களுக்கும் சொந்தமானது தான். புதிய பழக்கம் ஒன்றை கடைபிடிக்க முயல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம். உங்கள் அதிகாரிகளிடமிருந்து சாதகமான நடவடிக்கைகள் தென்படும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு டம்பிள் கல்

    ராசியான நிறம் – டான்ஜரின் அரஞ்சு

    ராசியான எண் – 55

    கன்னி:

    உங்கள் அன்புக்குரிய நபர்கள் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஏதேனும் தவறான புரிதல்கள் இருந்தால் அதற்கு தீர்வு காணவும். உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும்போது திட்டங்கள் அனைத்தையும் செய்து முடிக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மணி பிளான்ட்

    ராசியான நிறம் – பச்சை

    ராசியான எண் – 44

    துலாம்:

    பணியிடத்தில் தீவிரத் தன்மை நிறைந்த பிரச்சினைகள் மீது உங்களின் கவனம் தேவைப்படுகிறது. போதுமான நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஓய்வெடுக்காமல் இருந்தால் உடல் நலன் பாதிக்கப்படும். மாலையில் உங்கள் நண்பர் வீட்டுக்கு வருவார்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பூக்கள் பிரின்ட்

    ராசியான நிறம் – கிரிம்சன்

    ராசியான எண் – 33

    விருச்சிகம்:

    எதிர்வரும் குடும்ப விழாவுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முன் தயாரிப்பு நடவடிக்கைகள் பாராட்டை பெறும். உங்களுக்கான முன்னுரிமை பட்டியல்களை தயாரிப்பது மூலமாக நேரத்தை சேமிக்கவும். நல்லதொரு புதிய பழக்கம் கடைபிடிக்கிறீர்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு வேஸ்

    ராசியான நிறம் – மாவே (Mauve)

    ராசியான எண் – 23

    தனுசு:

    உங்கள் அசௌகரியம் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், வெகு விரைவில் நேர்மறையான செய்திகளை பெறுவீர்கள். அனைத்து செயல்களையும் செய்து முடிப்பதற்கான ஆற்றல் உங்களுக்கு கிடைக்கிறது. முக்கிய முடிவு குறித்து உங்கள் குடும்பத்தினர் உங்களிடம் ஆலோசனை செய்ய மாட்டார்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கேமரா

    ராசியான நிறம் – பச்சை

    ராசியான எண் – 9

    மகரம்:

    இப்போதைக்கு கொஞ்சம் பயிற்சி எடுத்தால் பிறகு நேரத்தை சேமிக்கலாம். இதனால் உங்கள் கற்றல் திறன் மேம்படும். உங்களுக்கான வழிகாட்டி அருகாமையில் இருக்கிறார். உங்கள் இடத்தை பிடிக்க பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மூலிகைகள்

    ராசியான நிறம் – நியான் பச்சை

    ராசியான எண் – 22

    கும்பம்:

    உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக சில தாமதம் ஏற்படுவதற்கு காரணம் இல்லாத பிரச்சனைகள் அடிப்படையாக இருக்கலாம். ஆனால், ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அதன் முடிவுகள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். தோராயமான முடிவுகள் மூலமாக முன்னோக்கிச் செல்வீர்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – காப்பர் பாத்திரம்

    ராசியான நிறம் – எலக்ட்ரிக் நீலம்

    ராசியான எண் – 3

    மீனம்:

    உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு இன்று சிறப்பான நாளாகும். ஏதேனும் ஒன்றை இன்று எழுதி வைத்தீர்கள் என்றால் அதுவே உங்கள் பழக்கமாக மாறும். கடந்த ஆண்டு செய்த சாதனைகளை எண்ணி பெருமை கொள்ளுங்கள். இன்றைய தினம் புதிய வாய்ப்பு வரும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – யானை மினியேச்சர் சிலை

    ராசியான நிறம் – ஸ்டீல் கிரே

    ராசியான எண் – 5

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News