முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 23) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 23) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்: 

உங்களது வாழ்க்கை துணையிடம் ஆலோசித்து சரியான முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் ஏற்ற நாள். உங்கள் வாழ்க்கை துணையுடன் உள்ள உறவு மிகவும் இன்று பலப்படும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கடின உழைப்பிற்குரிய பலன் கிடைக்கும் நேரம் நெருங்கி விட்டது என்பதை உணர வேண்டும்.. தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. புதிய விஷயங்களை மேற்கொள்வதற்கு மிகவும் ஏற்ற நாள். உங்களது உணர்வுகளின் மேல் அதிகம் கவனம் செலுத்தி, சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது மனதிற்கு அமைதியை தரும் தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தபடுகிறது.

அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – பித்தளை கிண்ணங்கள்

அதிர்ஷ்ட - நிறம் மஞ்சள்

அதிர்ஷ்ட - எண் 25

ரிஷபம்: 

காதல் வாழ்க்கையில் சீராக வைத்துக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டியது அவசியமாகும். நீண்ட நாட்களாக மனதிற்குள் உள்ள காதலை வெளிப்படுத்துவதற்கு இன்று மிகவும் ஏற்ற நாள். கடின உழைப்பின் மூலம் புதிய வாய்ப்புகளை நீங்களே ஏற்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவதன் மூலம் உங்கள் மீது உள்ள மதிப்பு உயரும். உடல் நிலை மற்றும் மனநிலையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. குடும்பத்திற்குள் சில சவாலான சூழ்நிலைகள் உண்டாகலாம் அவற்றை பொறுமையாக எதிர்கொள்வது நல்லது

அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - தலைப்பாகை

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 52

மிதுனம்: 

காதல் வாழ்க்கை என்று சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக கவலைப்பட்டு வந்த சில விஷயங்களை விட்டு விலகுவது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய வெற்றிகளை பெறுவீர்கள். அலுவலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் பணிவுடன் நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். குழுவாக சேர்ந்து வேலை செய்வது மிகப்பெரிய வெற்றிகளை கொடுக்கும். வேலை சம்பந்தமாக புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். அமைதியாக அதே சமயத்தில் கடின உழைப்பை மேற்கொள்வதன் மூலம் மிகப்பெரும் நன்மைகளை பெறுவீர்கள். குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது அவசியமானது.

அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – லக்கேஜ்

அதிர்ஷ்ட நேரம் - ஊதா

அதிர்ஷ்ட எண் - 13

கடகம்: 

காதல் வாழ்க்கையில் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை துணையுடன் மிகவும் நேர்மையாக பேசி பழகுவது மிகவும் நல்லது. இதன் மூலம் உறவு பலப்படும். காதல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொறுமையை கடைப்பிடிப்பது வேலையில் மிகப் பெரும் வெற்றிகளைத் தரும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். புதிய சாதனைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. உடல் நலனில் அதிக அக்கறை தேவை. உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது மிகவும் நல்லது. குடும்பத்தாருடன் உள்ள உறவு மேம்படும்.

அதிர்ஷ்டத்திற்கான குறியீடு தேனீ

அதிர்ஷ்ட நிறம் - நிலக்கரி சாம்பல்

அதிஷ்ட எண் - 13

சிம்மம்: 

உங்களது தனித்தன்மையை காதல் வாழ்க்கையில் வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிகழ்காலத்தில் முழுமையாக உங்களில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுவது காதல் வாழ்க்கையை இன்னும் சிறப்பாக மாற்றும். புதிய தொழில் தூங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக நீங்கள் கனவு கண்டு வந்த செயல்களை இன்று நடைமுறைப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கருப்பு நிற திரை சீலைகள்

அதிர்ஷ்ட நிறம் பியஜ்

அதிர்ஷ்ட எண் - 23

கன்னி: 

இன்று காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். நட்புணர்வு மேலோங்கி இருக்கும். இருவருக்கும் உள்ள உறவு பலப்படும். சாகசங்கள் செய்வதற்கும், புதிய விஷயங்கள் கற்றுக் கொள்வதற்கும் இன்று மிகவும் ஏற்ற நாள். உங்களது சவால்களை நீங்களே தேர்வு செய்வது மிகவும் நல்லது. தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. புதிய சாதனைகளை மேற்கொள்வீர்கள். உடல்நிலை மற்றும் மனநிலை பற்றிய கவலைகளை விடுத்து மகிழ்ச்சியாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது. குடும்பத்தாரிடமிருந்து தேவையான ஒத்துழைப்பும் அன்பும் கிடைக்கும்.

அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - சாம்பல் பறவை

அதிர்ஷ்ட எண் - வெள்ளை

அதிர்ஷ்ட எண் - 12

துலாம்: 

உங்களது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு காதல் வாழ்க்கையை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் உறவு பலப்படும். உறவில் நேர்மையுடன் இருப்பது பல்வேறு நன்மைகளை கொடுக்கும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். உங்களது திறமை மற்றும் உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உங்களது செயல் திறனை மற்றவர்களுக்கு நிருபிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. மனதிற்குள் இருக்கும் பல்வேறு கஷ்டங்கள் இன்று சரியாகும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழிக்க மிகவும் ஏற்ற நாள்

அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - வைர மோதிரம்

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

அதிர்ஷ்ட எண் - 6

விருச்சிகம்: 

காதல் வாழ்க்கையை பொருத்தவரை மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. இதன் மூலம் உறவில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பொறுமையுடன் செயல்படுவது மிகவும் நல்லது. அலுவலகம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்று நிகழும். நேர்மறையான எண்ணங்கள் மேலோங்கி இருக்கும். புதிய வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உற்சாகத்துடன் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகிறது உங்களது குரல் அலுவலகத்தில் மேலோங்கி இருக்கும். உங்களது திறமைக்கான மதிப்பு உங்களை வந்தடையும். உடல்நிலை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. குடும்பத்தாருடன் நல்ல நினைவுகளை உண்டாக்கக்கூடிய அனுபவங்களை பெறுவீர்கள்.

அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - பசுமையான தோட்டம்

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்ட எண் - 44

தனுசு: 

காதல் வாழ்க்கையில் நம்பகத்தன்மை அதிகரிக்கும் மிகவும் பாதுகாப்பாக உணர்வீர்கள். புதிய அனுபவங்களை பெறுவதற்கு தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. தேவையற்ற எதிர்பார்ப்புகளை விலக்கி விடுவதன் மூலம் பல நன்மைகளை பெறுவீர்கள். அலுவலகம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.. நெருங்கிய நண்பர்களின் உணர்வுகளை மதித்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது. புதிய தொழில் துவங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. உடல் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் தேவை. உங்களது நட்பு வட்டாரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நாள்.

அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – புரூச்

அதிர்ஷ்ட நிறம் - கோல்டன்

அதிர்ஷ்ட எண் - 7

மகரம்:

எதிர்காலத்தில் மனதை நிலை நிறுத்தி செயல்படுவதன் மூலம் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்களது வாழ்க்கை துணையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அவர்களை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொள்ளாமல் அவர்கள் போக்கில் விடுவது காதல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். உங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள். அலுவலக அரசியலில் இருந்து தள்ளி இருப்பது மிகவும் நல்லது. பொறுமையை கையாள்வது மிகவும் நல்லது. குடும்பத்தாரிடம் பொறுமையோடு நடந்து கொள்வது நிம்மதியை கொடுக்கும்.

அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கைப்பை

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் - 80

கும்பம்:

இன்று தேவையற்ற பேச்சுக்களை குறைத்து அமைதியாக இருப்பதன் மூலம் காதல் வாழ்க்கை சீராக இருக்கும். வாழ்க்கை துணையுடன் உள்ள உறவு பலப்படும். உங்களது தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணருங்கள். உங்களது வித்தியாசமான திட்டங்கள் மூலம் அனைவரையும் கவர்வீர்கள். இதன் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். புதிய சாதனைகளை மேற்கொள்வீர்கள். மற்றவர்களுடன் உள்ள தொடர்பை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம் அலுவலகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பெற முடியும். உடல் நலனில் அதிக அக்கறை செலுத்துவது முக்கியமானது. நெருங்கிய வட்டாரங்களுடன் நம்பிக்கை வைத்து அவர்களை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் மிகவும் ரம்மியமான ஒரு சூழலை உருவாக்குவீர்கள்

அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – புகைப்பட கண்காட்சி

அதிர்ஷ்ட நிறம் ­- நீலம்

அதிர்ஷ்ட எண் - 10

மீனம்: 

இன்றைய நாளில் உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். இயற்கையாகவே உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் காதல் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும். உங்களது திறமையை பயன்படுத்தி அலுவலகம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். அமைதியுடன் இருக்க பழகுவது நல்லது. உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்களே எதிர்பார்க்காத நல்ல சில மாற்றங்கள் ஏற்படும் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதே சமயத்தில் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. குடும்பத்தாருடன் இருக்கும் உறவு பலப்படுவது மட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்து தேவையான ஒத்துழைப்பும் கிடைக்கும். மிகவும் நிம்மதியான ஒரு நாளாக இருக்கும்

உங்கள அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கம்பனி ஆடைகள்

அதிர்ஷ்ட நிறம் - பழுப்பு

top videos

    அதிர்ஷ்ட எண் - 18

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News