முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 22) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 22) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

சில குழப்பங்களில் சிக்கியுள்ளதாக நீங்கள் நினைப்பீர்கள். இன்றைக்கு நீங்கள் முடிக்க நினைக்கும் காரியங்களுக்கு சில தடைகள் ஏற்படும். பிறரது கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய வழிகளை நீங்கள் கண்டறிய வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தந்தம்

 ரிஷபம்:

கடந்து போன நாட்களை எண்ணி வருந்த வேண்டாம். அதை ஏற்றுக் கொள்ளுங்கள். சில சமயங்களில் உணர்ச்சிகள் மேலோங்கும். அதை பிறருக்கு தெரியப்படுத்தவும். புதிய வேலையை தேடுகிறீர்கள் என்றால், அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய அறிகுறி

 மிதுனம்:

ஏற்கனவே செய்த அதே வேலைக்கு இப்போது நீங்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருப்பீர்கள். வரும் நாட்களில் ஆக்கப்பூர்வமான வகையில் புதிய வாய்ப்புகள் உருவாகும். உங்களிடம் நம்பிக்கை அதிகமாக இருந்தாலும் சோர்வடையக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய கார்

 கடகம்:

உங்கள் மனதில் சிந்தனைகள் மற்றும் யோசனைகள் மேலோங்கி இருந்தாலும் திசையற்றவராக இருப்பீர்கள். தொழில்முறை சார்ந்த மூத்தவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக அமையும். காதல் உறவுகளில் இருப்பவர்கள் அதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழங்காலப் பொருள்

 சிம்மம்:

அடுத்தவர்கள் மீது நெருக்கடியை ஏற்படுத்தும் உத்தி இனி செயல்படாது. உங்களை சுற்றியுள்ள நபர்கள் தொந்தரவு அளிக்கக் கூடும். உங்கள் நோக்கம் சுத்தமானதாக இருந்தாலும் தகவல் தொடர்புகளில் மாற்றம் தேவைப்படுகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி நாணயம்

 கன்னி:

கடந்த காலம் குறித்த பலமான நினைவுகள் உங்கள் கண்ணோட்டத்தை மாற்றும். நீங்கள் கவனமாக இருந்தாலும் கூட சில தவறுகளை மீண்டும் செய்வீர்கள். மீண்டும் நிதி ரீதியிலான வளர்ச்சி தென்படுகிறது. பயணங்களுக்கு திட்டமிடலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வானவில்

 துலாம்:

உங்கள் நண்பர்கள் உங்கள் திறன்களை பயன்படுத்திக் கொள்வார்கள். தற்போது மந்தமாக இருக்கின்ற நேரமானது விரைவில் சுறுசுறுப்பானதாக மாறும். நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வாய்ப்பு தேடி வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு கார்

 விருச்சிகம்:

அவசர கதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து முடிவுகளும் தவறானது அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இந்த தருணத்தில் குறிப்பிட்ட திசையை நோக்கி நீங்கள் நடக்க வேண்டும். தற்சமயம் உங்கள் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிடித்தமான இனிப்பு

 தனுசு:

உறவுகளை தக்க வைக்க கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட சின்ன, சின்ன நடவடிக்கைகள் தற்போதைய துயர் மிகுந்த காலத்தில் உதவியாக அமையும். அதிகமான பணிச்சுமையை எதிர்கொள்வீர்கள். இதனால் நீங்கள் சோர்வடையக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வீட்டுக்குள் வளர்க்கும் செடி

 மகரம்:

நீங்கள் திட்டமிடுகின்ற விஷயத்தில் உறுதியாக இருக்க வேண்டும். வணிக ரீதியிலான திட்டங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமண ஏற்பாடுகள் நல்லபடியாக முடிவாகும். உங்கள் மனம் தெளிவானதாக இருக்கும். நண்பர்கள் மூலம் புத்துணர்ச்சி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெழுகுவர்த்தி ஸ்டாண்டு

 கும்பம்:

உயர் கல்விக்கு திட்டமிடும்போது உங்களுக்கு சில குழப்பங்கள் ஏற்படலாம். உங்களுக்கான உதவி தேடி வரும். வீட்டில் இருந்து வெகு தொலைவில் வசித்து வருபவர்கள் வீட்டு நினைப்பாகவே இருக்கும். ஆனால், அது தற்காலிகமானது. உங்கள் உடல் நலன் பாதிக்கப்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் நிற கல்

 மீனம்:

புதிய பணியிடம் தொடர்பாக நெருங்கிய நண்பரிடம் இருந்து பரிந்துரை வரும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்கு குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தவும். தற்போதைக்கு பல வகைகளில் கவனச்சிதறல் ஏற்படும். குறுகிய பயணம் புத்துணர்ச்சி தருவதாக அமையும்.

top videos

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நேப்கின் ஹோல்டர்

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News