முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 21) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 21) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  காதலை வெளிப்படுத்த மற்றும் புதிய விஷயங்களை தொடங்க இன்று சாதகமான நாள். வேலை தொடர்பான சவால்களை விடாமுயற்சி மற்றும் புதுமையான சிந்தனை மூலம் உங்களால் இன்று சமாளிக்க முடியும். உங்கள் உள்ளுணர்வு சொல்வதை நம்புங்கள், பிறருடன் தேவையற்ற மோதல்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - பிங்க் லில்லி பூக்கள்

  அதிர்ஷ்ட நிறம் - பீச்

  அதிர்ஷ்ட எண் - 5

  ரிஷபம்:

  கடின உழைப்பு ஒன்றே நீண்ட கால வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை இன்று புரிந்து கொள்வீர்கள். எதிலும் நடுநிலையாக இருங்கள் மற்றும் பிறருடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். அனுபவம் வாய்ந்த நபர்களிடமிருந்து கிடைக்கும் ஆலோசனையைகளை பின்பற்றுங்கள். உடல் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - வாசனை மெழுகுவர்த்திகள்

  அதிர்ஷ்ட நிறம் - நீலம்

  அதிர்ஷ்ட எண் - 22

  மிதுனம்:

  உங்கள் பார்ட்னர் கூறும் புதிய யோசனைகளை இன்று ஏற்று கொள்ளுங்கள். உங்களின் அதீத செயல்திறன் காரணமாக இன்று நீங்கள் உற்சாகமான வாய்ப்புகளை பெறுவீர்கள். ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் உங்களின் புதுமையான யோசனைகள் உங்களுக்கு பெயர் வாங்கி தரும். உங்களது தனிப்பட்ட வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - செராமிக் டிஃப்யூஸர்

  அதிர்ஷ்ட நிறம் - பீஜ்

  அதிர்ஷ்ட எண் - 14

  கடகம்:

  உங்கள் உணர்வுகளை மறைக்காமல் இன்று வெளிப்படுத்துங்கள் மற்றும் உங்கள் துணைக்கு உங்களின் ஆதரவை வழங்குங்கள். உங்கள் உணர்வுகளுடன் ஒத்து போகும் வாய்ப்புகள் இன்று கிடைக்கலாம். பணியிடத்தில் குழுப்பணி மற்றும் பிறருக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் கவனம் செலுத்துங்கள். நாளின் முடிவில் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் செயல்களில் ஈடுபடுங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - கிளி

  அதிர்ஷ்ட நிறம் - கிரே

  அதிர்ஷ்ட எண் - 24

  சிம்மம்:

  உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இன்று உங்கள் அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் தங்கள் தலைமைத்துவ திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான சவால்களுக்கு பொறுப்பேற்பார்கள். உங்கள் நம்பிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - போஸ்ட்டல் ஸ்டாம்ப்

  அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

  அதிர்ஷ்ட எண் - 12

  கன்னி:

  இன்று நீங்கள் எளிமையாக இருக்க வேண்டிய நாள். சிறிய விஷயங்களில் கூட மகிழ்ச்சி காணுங்கள். உங்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் உங்களுக்கான புதிய வாய்ப்புகளை தேடி தரும். ஆன்மீக பயணங்களுக்கு இன்று ஏற்ற நாள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ரெட் கோட்

  அதிர்ஷ்ட நிறம் - க்ரிம்ஸன்

  அதிர்ஷ்ட எண் - 8

  துலாம்:

  பணியிடங்களில் நீடித்து வந்த பிரச்சனைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும். உங்களின் நேர்மை மற்றும் உழைப்பு உங்களுக்கான மரியாதையை இன்று பெற்று தரும். உங்கள் குடும்பத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் முயற்சியில் இன்று ஈடுபடுங்கள். உங்கள் வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - இனிப்புகள்

  அதிர்ஷ்ட நிறம் - ஊதா

  அதிர்ஷ்ட எண் - 16

  விருச்சிகம்:

  உங்கள் உறுதியும், தீவிரமும் இன்று வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள் மற்றும் கிடைப்பது சிறிய வாய்ப்புகளாக இருந்தாலும் அதனை சரியாக பயன்படுத்துங்கள். நீண்டகால இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு இன்று சரியான அங்கீகாரம் கிடைக்கும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - கடிகாரம்

  அதிர்ஷ்ட நிறம் - செர்ரி ரெட்

  அதிர்ஷ்ட எண் - 11

  தனுசு:

  இன்று உங்கள் முன் வரும் புதிய சவால்களை ஏற்று கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் திறமை மேலும் மேம்படும். பிறருடனான தகவல் தொடர்புகளில் சாதுரியமாக மற்றும் கவனமாக செயல்படுங்கள். உங்களின் நம்பிக்கை மற்றும் ரிஸ்க் எடுக்கும் குணமும் உங்களுக்கான வெற்றியை இன்று தேடி தரும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - கேமரா

  அதிர்ஷ்ட நிறம் - கிரீன்

  அதிர்ஷ்ட எண் - 9

  மகரம்:

  நீண்ட கால இலக்குகள் மற்றும் வளர்ச்சியில் இன்று நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் உங்களை சுற்றி ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கி கொள்ளுங்கள். உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் பொறுப்புணர்வால் பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - சால்ட் ஷேக்கர்

  அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

  அதிர்ஷ்ட எண் - 5

  கும்பம்:

  உங்களின் உண்மையான மற்றும் நேர்மையான அணுகுமுறைக்கு உரிய அங்கீகாரத்தை பெறுவீர்கள். மனக்குழப்பத்தை தவிர்க்க இயற்கை சூழல் மிகுந்த இடங்களில் நேரம் செலவிடுங்கள். குடும்ப உறுப்பினர்களின் அறிவுரைகளை ஏற்று கொள்ளுங்கள். உங்களின் புதுமையான யோசனைகள் இன்று வரவேற்பை பெற கூடும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கலைப்பொருள்

  அதிர்ஷ்ட நிறம் - இண்டிகோ

  அதிர்ஷ்ட எண் - 10

  மீனம்:

  இன்று உங்களது உள்ளுணர்வு மற்றும் படைப்பாற்றலை நம்புங்கள். நிச்சயம் உங்களுக்கான வெற்றி கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் நேரம் செலவிடுவதை தவிர்த்து கொள்ளுங்கள். ஆக்கபூர்வமான விஷயங்களில் ஈடுபடுங்கள். நீங்கள் பல நாட்களாக காணும் கனவு இன்று நிஜமாக கூடும். உங்களின் தனிப்பட்ட கண்ணோட்டம் வெற்றியை தரும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - மரக்கதவு

  அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

  அதிர்ஷ்ட எண் - 4

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News