மேஷம்:
உங்கள் அன்புக்குரியவர்களிடம் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்த இன்று நல்ல நாள். இன்று எதிலும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருப்பது அவசியம். உங்களது வேலைகளில் இன்று சில சவால்களை சந்திக்க நேரிடலாம், ஆனால் இவை தற்காலிகமானதே. புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கலாம். யாரிடமும் கோபம் மற்றும் எரிச்சலை காட்டாதீர்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நாய்க்குட்டி
அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்ட எண் - 4
ரிஷபம்:
இன்று உங்களுக்கு வரும் புதிய வாய்ப்புகளை ஏற்று கொள்ளுங்கள். உங்கள் காதல் வாழ்க்கை இன்று சிறப்பாக இருக்கும். எனினும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டால் கூட அமைதியாக கடந்து செல்ல மறக்காதீர்கள். இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணம் உங்களுக்கு நன்மைகளை அளிக்கும். உங்களது சுய-பாதுகாப்புக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கழுகு
அதிர்ஷ்ட நிறம் - ராயல் ப்ளூ
அதிர்ஷ்ட எண் - 2
மிதுனம்:
பணியிடத்தில் இன்று நீங்கள் சில நேர்மறையான கருத்துக்களை மற்றும் பாராட்டுகளை பெற கூடும். உங்களது ரிலேஷன்ஷிப்பை வலுப்படுத்த இன்று சிறிது நேரம் ஒதுக்குங்கள். இன்று பயணங்கள் செல்ல ஏற்ற நாள் அல்ல, எனவே எதையும் திட்டமிடாதீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் புதிதாக ஏதாவது முயற்சி செய்ய நல்ல நாள்.
அதிர்ஷ்ட அடையாளம் - இரும்பு கவசம்
அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் - 12
கடகம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் சில எதிர்பாராத சவால்களை இன்று சந்திக்க நேரிடும், ஆனால் நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்களது நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்த இன்று சிறப்பான நாள். பிறருடனான தகவல்தொடர்புகளில் கவனமாக இருங்கள். நீண்டதூர பயணம் மேற்கொள்ள இன்று நல்ல நாள் இல்லை.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு குருவி
அதிர்ஷ்ட நிறம் - லாவெண்டர்
அதிர்ஷ்ட எண் - 19
சிம்மம்:
இன்று உங்களிடம் கூறப்படும் புதிய யோசனைகளை ஏற்று கொள்ளலாம்.உங்களின் தொடர் முயற்சிகளில் முன்னேற்றத்தை காணலாம். உங்களது தனிப்பட்ட உறவில் கவனம் செலுத்த முக்கியத்துவம் கொடுங்கள். வேலைகளில் கவனசிதறலை தவிர்க்கவும்.புதிய வாய்ப்புகள் கிடைத்தால் கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - பிளாங்க் கேன்வாஸ்
அதிர்ஷ்ட நிறம் - எலெக்ட்ரிக் ப்ளூ
அதிர்ஷ்ட எண் - 6
கன்னி:
உங்கள் பழைய நண்பர்களை சந்தித்து பேச சிறிது நேரம் ஒதுக்க இன்று நல்ல நாள். இதன் மூலம் இழந்த மகிழ்ச்சியை, உற்சாகத்தை மீட்டெடுப்பீர்கள். குறுகிய நேரத்தில் அனைவரையும் ஒன்றிணைக்கும் திறன் உங்களிடம் உள்ளது. எனவே உங்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்புகளின் நேர்மறை அம்சங்களில் கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - பூனையின் கண்
அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்ட எண் -11
துலாம்:
உங்கள் தனிப்பட்ட உறவில் நீடித்த பிணைப்பை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த இன்று சிறந்த நாள். கடின உழைப்பிற்கு நல்ல பலனை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இன்றைய நாள் சாதகமான நாளாகும். உங்களது விடாமுயற்சி நீண்ட காலத்திற்கு பலனளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற நாள்.
அதிர்ஷ்ட அடையாளம் - சஃபையர்
அதிர்ஷ்ட நிறம் - கிரே
அதிர்ஷ்ட எண் -9
விருச்சிகம்:
இன்று உங்களது பணியிடத்தில் வேலையில் சில கடினமான முடிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. ஆனாலும் உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள் மற்றும் என நடந்தாலும் நம்பிக்கையுடன் இருங்கள்.உங்கள் வணிகம் அல்லது பிசினஸ் பார்ட்னர்களை அவ்வப்போது பாராட்டுங்கள் மற்றும் உங்கள் ஆதரவை காட்டுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கார்டன்
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்ட எண் - 21
தனுசு:
இன்று நீங்கள் பணியிடத்தில் சற்று நெகிழ்வாக இருக்க வேண்டியிருக்கும். பயணம் செய்வதற்கு அல்லது வெளியில் செல்வதற்கு இன்று நல்ல நாள். உங்கள் நெருக்கமான நண்பர்கள் வெளியே செல்ல அழைத்தால் தவிர்க்காமல் செல்லுங்கள். உங்களது நாள் உற்சாகமாக முடிவடையும். இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - காப்பர் ஆர்டிகிள்
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை
அதிர்ஷ்ட எண் - 30
மகரம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று சில சோதனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் இலக்குகளை அடைய இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் தேவையில்லாத மனஅழுத்தத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். உங்கள் பெற்றோருடன் மனம் விட்டு பேச இன்று ஒரு நல்ல நாள்.உங்களை நம்புவோரிடம் நேர்மையாக மற்றும் வெளிப்படையாக இருங்கள்
அதிர்ஷ்ட அடையாளம் - லேம்ப் ஷேட்
அதிர்ஷ்ட நிறம் - எமரால்ட் கிரீன்
அதிர்ஷ்ட எண் - 40
கும்பம்:
வேலையில் உங்கள் திறமைகளை சோதிக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களை இன்று நீங்கள் எதிர்கொள்ளலாம். சுய வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இன்று பலனளிக்கும். தூக்கம் மற்றும் உடற்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - சாமந்தி பூ
அதிர்ஷ்ட நிறம் - மெஜந்தா
அதிர்ஷ்ட எண் - 44
மீனம்:
புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ள மற்றும் உங்கள் திறமைகளை மேம்படுத்த இன்று உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் வேடிக்கையாக நேரத்தை செலவிடுவதில் கவனம் செலுத்துங்கள்.இன்று உங்கள் உணர்ச்சி ஆரோக்கியத்தை கவனித்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளி
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்ட எண் - 15
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News