முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 17) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 17) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று ஒரு அற்புதம் நடக்கலாம், எதிர்பாராத ஆச்சரியங்களுக்காக காத்திருங்கள். இன்று உங்களின் படைப்பாற்றலை சிறப்பாக பயன்படுத்துவீர்கள். உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடங்கள். உங்கள் துணையிடம் வெளிப்படை மற்றும் நேர்மையாக இருங்கள். திட்டமிட்டபடி உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - கோல்டன் த்ரெட்

  அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

  அதிர்ஷ்ட எண் - 66

  ரிஷபம்:

  நீங்கள் உறுதியாக, கவனமாக செயல்பட்டால் இன்று வெற்றி நிச்சயம். தவிர உங்கள் நீண்ட கால இலக்கை நோக்கி முன்னேறுவதிலும் கவனம் செலுத்துங்கள். உங்கள் துணைக்கு இன்று கூடுதல் கவனிப்பு தேவைப்படலாம். இன்று உங்கள் காதல் வாழ்க்கை நிலையானதாகவும் பாதுகாப்பாக இருக்கும். இன்று ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - முத்துக்கள்

  அதிர்ஷ்ட நிறம் - மெஜந்தா

  அதிர்ஷ்ட எண் - 12

  மிதுனம்:

  உங்களது தகவல் தொடர்பு திறன் இன்று உச்சத்தில் இருக்கும். எனவே சக பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். இன்று சிக்கலான விஷயங்களை கூட நீங்கள் எளிதாக புரிந்து கொள்வீர்கள். இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இதுவரை செல்லாத புதிய இடத்திற்கு நீங்கள் செல்வது உங்களை உற்சாகமாக வைக்கும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பெரிய கண்ணாடி

  அதிர்ஷ்ட நிறம் - கருஞ்சிவப்பு

  அதிர்ஷ்ட எண் - 4

  கடகம்:

  இன்று நீங்கள் வழக்கத்தை விட அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இணக்கத்தை கடைபிடித்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுக்கு கற்றல் மீதான ஆர்வம் அதிகம் இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் ஆழமான புரிதலை ஏற்படுத்தி கொள்ள வாய்ப்புகள் அமையும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வால் போஸ்டர்

  அதிர்ஷ்ட நிறம் - கிரே

  அதிர்ஷ்ட எண் - 29

  சிம்மம்:

  உங்கள் நம்பிக்கை இன்று பிறரை ஈர்க்கக்கூடும். அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்க இந்த ஆற்றலை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் காதல் துணைக்கு இப்போது உங்களின் கூடுதல் அக்கறை மற்றும் பாசம் தேவைப்படலாம். மாலை நேரம் உங்களுக்கு உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பீங்கான் குவளை

  அதிர்ஷ்ட நிறம் - பீஜ்

  அதிர்ஷ்ட எண் - 19

  கன்னி:

  உங்களது இலக்குகளை அடைய இன்று கொஞ்சம் பொறுமை மற்றும் நிதானம் தேவைப்படுகிறது. இன்று உங்களது சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். காதல் மற்றும் வாழ்க்கை பார்ட்னரை பொறுத்த வரை இன்று நீங்கள் அவர்களது குறைகளை அல்லது தேவைகளை பொறுமையாக கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க முக்கியத்துவம் கொடுங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வைரம்

  அதிர்ஷ்ட நிறம் - நீலம்

  அதிர்ஷ்ட எண் - 5

  துலாம்:

  பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டங்களில் உங்கள் வசீகரம் மற்றும் ராஜதந்திரமும் மதிப்பு மிக்கதாக கருதப்படலாம். எனவே உங்கள் தொடர்பு திறன்களை இன்று நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தவும். நாளை மகிழ்ச்சியாக வைக்க உங்களுக்கு உள் அமைதி மற்றும் உற்சாகம் தரும் செயல்களில் ஈடுபடுங்கள். உதவி கேட்போரிடம் உங்கள் அன்பையும், இரக்கத்தையும் காட்டுங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மரகதம்

  அதிர்ஷ்ட நிறம் - வயலட்

  அதிர்ஷ்ட எண் - 14

  விருச்சிகம்:

  இன்று உங்களது ரிலேஷன்ஷிப்பில் தீவிரமும் ஈடுபாடும் அதிகரிக்கலாம். எனவே இந்த ஆற்றலை உங்கள் துணையுடனான உங்கள் தொடர்பை ஆழமாக்க பயன்படுத்துங்கள். நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில் இன்று நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களுக்கான தனிமை மற்றும் சுயபரிசோதனைக்கான தேவை அதிகரிக்கலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - கிரிஸ்டல் பவுல்

  அதிர்ஷ்ட நிறம் - கிரீன்

  அதிர்ஷ்ட எண் - 22

  தனுசு:

  உங்களின் சுதந்திரமான செயல்பாடு மற்றும் சாகச இயல்பு காரணமாக பிறரை நீங்கள் கவருவீர்கள். இந்த ஆற்றலை ஒத்த எண்ணம் கொண்ட நபர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தவும். பணியிடத்தில் இன்று உங்களது நம்பிக்கை மற்றும் உற்சாகம் அதிகரிக்கலாம். உங்களுக்கு சவால் விடும் மற்றும் உற்சாகப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிட்ரின்

  அதிர்ஷ்ட நிறம் - நியான் பிங்க்

  அதிர்ஷ்ட எண் - 20

  மகரம்:

  உங்களது ஒழுக்கமும் கடின உழைப்பும் மற்றவர்களுக்கு இன்று உந்துதலாக இருக்கலாம். உங்கள் செயல்திறனில் சிறந்து விளங்க மற்றும் உங்கள் தொழில்முறை இலக்குகளை அடைய இந்த ஆற்றலை பயன்படுத்துங்கள். பிறரிடம் உங்கள் அன்பை மற்றும் கருணையை காட்டுங்கள். பாரம்பரியமான ஒரு இடத்திற்கு நீங்கள் இன்று செல்ல நேரிடலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - சால்ட் லேம்ப்

  அதிர்ஷ்ட நிறம் - ஃபுஷியா

  அதிர்ஷ்ட எண் - 9

  கும்பம்:

  தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் இன்று உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்க கூடும். உங்கள் வாழ்க்கை துணைக்கு உங்களிடம் கூடுதல் சுதந்திரம் தேவைப்படலாம். எனவே அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து வழிவிடுவது தனிப்பட்ட வாழ்வை சிறப்பாக்கும். ஒத்த எண்ணம் கொண்ட நபர்களுடன் இன்று உங்களுக்கு புதிய தொடர்பு கிடைக்கலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் சஃபையர்

  அதிர்ஷ்ட நிறம் - லெமன்

  அதிர்ஷ்ட எண் - 4

  மீனம்:

  உங்கள் வாழ்க்கை துணையுடனான உணர்ச்சி ரீதியான தொடர்பை இன்று நீங்கள் ஆழப்படுத்த வேண்டும். பணியிடத்தில் ஊழியர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலுக்கான மதிப்பு கூடும். கலை மற்றும் ஆன்மீகத்தில் உங்களின் ஆர்வம் இன்று அதிகரிக்கும். ஆன்மீகத்திற்கு பிரபலமான இடத்திற்கு பயணம் செய்வது உங்களை அமைதியாக வைக்க உதவ கூடும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரூபி ஸ்டோன்

  அதிர்ஷ்ட நிறம் - டார்க் ப்ளூ

  அதிர்ஷ்ட எண் - 16

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News